
அரச காடுகளை விற்கும் புதிய சட்ட மூல திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும
Published
அரச காடுகளை விற்கும் புதிய சட்ட மூல திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும
வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலையீட்டால் தற்போதய அரசாங்கத்தின் பிரதான தேவையாக இருக்கின்ற வன முதலீட்டு திட்டத்திற்கு வழங்கக் கூடிய வகையில் வன பாதுகாப்பு கட்டளைச் சட்த்தின் சரத்துக்களை மாற்றுவதற்குரிய திருத்த சட்டம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப; பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் 65 ஆம் இலக்க சட்டத்தில் இறுதியாக திருத்தப் பட்ட 1907 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தில் (காடுகள் கட்டளை சட்டம்) 20 ஆம் சரத்தின் கீழ் பாதுகாக்கப்படாத காடுகள்> எதிர்காலத்தில் பாதுகாக்கப் பட்ட காடாக பிரகடப் படுத்த முன் மொழியப் பட்ட பெருளவிலான காடுகள் அரசாங்கத்திற்குரிய ஏனைய காடுகளாக பாதுகாக்கப் பட்டிருந்தன. இந்த பாதுகாக்கப் பட்ட காடுகள்> காடுகளிற்கிடையில் இணைப்பினை ஏற்படுத்துகின்ற> குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் நீர் பிடிப்பாக செயற்படும்> அழிவடையும் அபாயத்தை பெருமளவில் எதிர் நோக்கி நிற்கும் மிக அரிதானதும் மற்றும் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த விசேட உயிரினங்கள் பலவற்றிற்கும் இருப்பிடம் வழங்குகின்ற> யானைகளின் பிரதான இருப்பிடம் மற்றும் யானைகளின் கடவைகளாக செயற்படும் விசேட காட்டுத் தொகுதியாகும். இந்த காடுகளை வணிகப் பாவனைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில்> அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ள 20 ஆவது சரத்தினை திருத்தும் பிரதான நோக்கில் முன் மொழியப் பட்ட திருத்தம் மேற் கொள்ளப் பட்டுள்ளது.
வன பாதுகாப்பு கட்டளைச் சட்ட திருத்தத்திற்கான அமைச்சரவை அனுமதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பெறப் பட்டுள்ளது. அந்த அமைச்சரவை பத்திரத்தில் உயிரியல் பன்முகத் தன்மை> மண்> நீர்> கலாச்சாரம்> மதம்> வரலாறு மற்றும் கலாச்சார பெறுமதிகளிற்கு விசேட கவனம் செலுத்தி எதிர்கால சந்ததியின் நன்மைக்காக காடுகளைப் பாதுகாத்தல்> பாதுகாக்கப் பட்ட காடுகளிற்குள் இருக்கும் கனிய வளங்களை பாதுகாத்தல்> வன பாதுகாப்பு தொடர்பாக வன பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கு இருக்கும் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் சட்டத்தை திருத்துவதற்காக அனுமதி பெறப் பட்டுள்ளது. அந்த அனுமதியின் அடிப்படையில் சட்ட திருத்தம் மேற் கொள்ளப் பட்டு இருந்த போதும் சட்ட திருத்த வரைவு மேற் கொள்ளப் பட்ட போது பெறப்பட்ட அமைச்சரவை அனுமதியில் குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து நோக்கங்களும் மீறப் பட்டுள்ளன.
முன் மொழியப் பட்ட சட்ட வரைவில் வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 20 வது சரத்தின் பின்னர் 20 அ என புதிய சரத்து ஒன்று இணைக்கப் பட்டு பல் மேலாண்மை காடுகளாக அரசாங்கத்திற்கு சொந்தமான ஏனைய காடுகளை பிரகடனப் படுத்தக் கூடிய வகையில் சரத்தினை இணைத்துக் கொள்ளல் ஆகும். அதன் மூலம் பல் மேலாண்மை காடு ஒன்றில் புதுப்பிக்க தக்க சக்தி (renewable energy) உற்பத்தி> இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா திட்டங்களை நடை முறைப் படுத்துவதற்கும் இனம் காணப்பட்ட ஏனைய செயற்பாடுகளின் மூலம் பொருளாதார பிரதிலாபம் பெறும் வகையில் அரசு அல்லாத துறைகளை பலப் படுத்தி நிர்வகிக்கும் நோக்கில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிற்கு அதிகாரம் வழங்கும் நடைமுiயை அறிமுக படுத்துதல் இந்த திருத்தப் பட்ட சட்டத்தின் மூலம் மேற் கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறான சரத்தை உள்ளடக்கி இருப்பதன் மூலம் முன் மொழியப்பட்ட சட்ட திருத்தம் அதற்காக பெறப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் உள்ள விடயங்களை முற்று முழுதாக மீறி வரையப் பட்டுள்ளது என்பது புலனாகின்றது.
முன்மொழியப் பட்ட சட்ட திருத்தத்தில் அரசியலமைப்பு சட்டமும் மீறப் பட்டுள்ளது. இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தில் ஆறாவது பிரிவில் உள்ள அரச கொள்கைகளை முன்னெடுக்கும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள் என்ற பிரிவின் 27 (14) இல் குறிப்பிட்டுள்ளபடி மக்களின் நன்மைக்காக அரசாங்கத்தினால் சுற்றுச் சூழல் பேணி பாதுகாக்கப் பட்டு மேம்படுத்தப் படல் வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நடை பெற்றிருப்பது அரச காடுகளை வியாபார பொருளாக்கி இலாபம் ஈட்டுவதன் மூலம் அழிக்கும் நடவடிக்கையை மேற் கொள்ளல் ஆகும்.
இவ்வாறான சட்ட திருத்தம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் உலக வங்கியினால் தயாரிக்கப் பட்ட Ecosystem Conservation and Management Project - ESCAMP எனும் அறிக்கiயிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் குறிப்பிடப் பட்டுள்ள வகையில் இந் நாட்டின் காட்டுப் பகுதியை வணிக நோக்கின் அடிப்படையில் பாவிக்க முடியாத சிக்கலான சட்ட அமைப்பின் கீழ் கட்டுப்ப படுத்தப் படுவதனால் அந்தக் காடுகளை பாவித்து இலாபம் ஈட்ட முடியாது என்றும் இந்த நாட்டின் காட்டுப் பகுதிகள் நிர்வகிக்கப் படும் சிக்கலான சட்ட அமைப்பை தளர்த்துவதன் மூலம் காட்டுப் பகுதிக்குள் சுற்றுலா திட்டங்களை செயற் படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப் பட வேண்டும் என அவதானிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப் பட்ட கடன்; உதவி திட்டத்தின் கீழ் சிங்கராஜ தேசிய உரிமை காட்டுப் பகுதி> நக்கள்ஸ் பாதுகாக்கப் பட்ட காடு> கண்ணெலிய அடர் காடு உட்பட காடுகளில் புதிய சுற்றுலா நுளைவாயில்களை அமைத்தல்> தற்போது இருக்கும் பாதைகளை புனரமைத்தல்> மற்றும் சுற்றுலா பயணிகளிற்காக அடிப்படை வசதிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றது. நில அமைப்பை திட்டமிடல்> மற்றும் நிர்வகித்தல்> இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டின் மூலம் யானை- மனித சகவாழ்வை ஏற்படுத்தல் போன்றன அந்த திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த திட்டத்தில் மறைந்துள்ள பிரதான நோக்கமாக இருப்பது வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பாதுகாக்கப் பட்ட காடுகளை இலாபம் ஈட்டக் கூடிய வணிக பொருளாக மாற்றுவதற்குரிய சட்டத்தை உருவாக்குதல் ஆகும்.
அந்த நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க> வன விலங்குகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எதிரிசிங்க ஆகியோர்களினால் தற்போது முன் எடுக்கப் பட்டு வருகின்றது. ஆனால் இதன் மூலம் இடம் பெறும் பாரிய அழிவு தொடர்பாக அவர்களினால் கவனம் செலுத்தப் படாமை பாரிய அழிவிற்கு வழியமைப்பதாகும். அதனால் அழிவின் பொறுப்பினை முற்று முழுதாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சட்ட திருத்தம் இடம் பெறும் இதே வேளையில்> இத் திட்டத்திற்காக அரச மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களிற்குரிய காணிகளை சீராக வழங்குவதற்காக காணி நிர்வாக நிதியம் ஒன்றை அமைக்க 2024 ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமைச்சர் அவையினால் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் நீண்ட காலமாக குத்தகை அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 72> 000 ஏக்கர் காணிகள் கரும்புச் செய்கைக்காக தாய்லாந்தின் சுடெக் இன்ஜினியரிங் தனியார் கம்பனிக்கு வழங்க 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர் அவை அனுமதி பெறப் பட்டுள்ளது. இதைத் தவிர அவுரா லாங்கா கர்பல் தனியார் கம்பனிக்கு அனுராதபுர மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நான்காயிம் ஏக்கரை வழங்க 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நடைமுறைப் படுத்துவதற்கு வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 20 ஆவது சரத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளை கம்பனிகளிற்கோ அல்லது வியாபாரிகளிற்கோ வழங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டி உள்ளது. அவை அனைத்தையும் மேற் கொள்வதற்கு முன் மொழியப் பட்ட இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதிகாரம் பெறப் பட்டிருக்கிறது.
சட்டத்தை திருத்துவதைத் தவிர்த்து இவை அனைத்தையும் செயற்படுத்துவதற்கு கடந்த காலத்தினுள் வெவ்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டன. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப் பட்ட MWFC/01/2020 ஆம் இலக்க சுற்று நிருபம் ஊடாக பாதுகாக்கப் படாத அரச வனப் பகுதிகளிற்குரிய அனைத்து காணிகளையும் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரின் பொறுப்பில் விடுவதற்கு முதல் முயற்சி மேற் கொள்ளப் பட்டது. அதன் பின்னர் காணிகள் அமைச்சின் செயலாளர் ஆர். ஏ. கே. ரணவக அவர்களினால் “ அரச காணிகள் அளந்து பிரித்தல்” நடவடிக்கைக்காக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி 02/2021 இலக்க சுற்று நிருபத்தின் மூலம் மேற் குறித்த சுற்று நிருபத்தினால் ஒதுக்கப் பட்ட அரச காடுகள்> காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் 08 வது சரத்திற்கமைய காணி ஆணையாளர் நாயகத்தின் சாதாரண மற்றும் விசேட விதிமுறைகளிற்கு ஏற்ப பிரதேச செயலாளர்களிற்கு அதனை அளந்து பிரிக்க முடியும் என்பதனால் வெவ்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள்> கிராமத்தை விரிவுபடுத்தல் மற்றும் எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக பாதுகாப்பதற்காக அளந்து ஒதுக்க தீர்மானிக்கப் பட்டது. ஆனால் இந்த சுற்று நிருபம் வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 20 ஆம் சரத்தினை மீறி சட்ட விரோதமாக வெளியிடப் பட்டதனால் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் அவற்றை செயற்படுத்துவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டன. அதன் காரணமாக வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தை திருத்தி அரச காணிகளை ஒதுக்கிக் கொள்வதற்கு தற்போதய அரசாங்கம் இந்த விதத்தில் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. ஆனால் இதன் மூலம் இடம் பெறும் பாரிய அழிவு தொடர்பாக அரசாங்கத்திற்கோ அல்லது வன பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளிற்கோ எந்த வித உணர்வோ அல்லது விளக்கமோ இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயம் ஆகும்.
2010 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற் கொண்டு நிறைவு செய்யப்பட்ட இறுதி காடுகள் கணிப்பீட்டின் படி இந் நாட்டின் மொத்த காடுகள் 19>51>473 ஹெக்டயார்கள் ஆகும். அது இந் நாட்டின் மொத்த நில பரப்பின் 29.7% ஆகும். இந்த காடுகளின் அளவிற்குள் ஈர வலய> இடைப்பட்ட> உலர் வலயங்களில் அமைந்துள்ள அடர் காடுகள்> திறந்த காடுகள்> முட்புதர் நிறைந்த காடு> சதுப்பு நில காடுகள்> மற்றும் புற் தரைகளும் அடங்கும். இதற்குள் எஞ்சியிருக்கும் தாள் நில மழைக் காடுகள் நூற்றிற்கு 1.9 வீதம் ஆகும். அதாவது 1>23>302 ஹெக்டயார். உயர் மலைப் பகுதி காடுகளின் வீதம் நூற்றிற்கு 0.7 ஆகும். அதன் அளவு 44>758 ஹெக்கடயர் ஆகும். உப மலைப் பகுதி காடுகள் நூற்றிற்கு 0.4 வீதம் ஆகும். அதன் அளவு 28>513 ஹெக்டயர் ஆகும். உலர் கலப்பு பசுமைக் காடுகள் 11>21>392 ஹெக்டயார் அல்லது 17.1 வீதம் ஆக இருக்கிறது. சதுப்பு நில காடுகள் 0.2 வீதம் அல்லது 15>670 ஹெக்டயார் அளவில் உள்ளது.
2015 ஆம் ஆண்டின் வன பாதுகாப்பு திணைக்களத்தின் மதிப்பீடுகளிற்கு அமைய பாதுகாக்கப் பட்ட காடுகளாக வெளிப்படுத்தப் பட வேண்டும் என முன் மொழியப் பட்ட காடுகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான வேறு காடுகள் என அழைக்கப் படுகின்ற பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 20 ஆவது சரத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகின்ற காடுகளின் காணி அளவு 3>45>811 ஹெக்டயார் அல்லது 8>54>155 ஏக்கர் அளவில் உள்ளது. அந்த அனைத்து காடுகளும் முன் மொழியப் பட்டுள்ள சட்ட திருத்தத்தின் மூலம் இல்லாமல் ஆக்கப்பட உள்ளதுடன் அது தற்போது இலங்கையில் எஞ்சியுள்ள காடுகளின் அளவில் 18% அழிக்கப் படுவதற்கு திட்டம் தீட்டுதல் ஆகும்.
இந்தக் காடுகள் நாட்டிற்கு இல்லாமல் போனால் யானை – மனித பிரச்சனை அதிகரித்தல்> வன விலங்குகளினால் பயிர் நாசம்; அதிகரித்தல்> குறிபிட்;ட அரிய வகை உயிரினங்கள் அழிவடைந்து போதல்> விவசாயம் மற்றும் குடி நீர் பிரச்சனை அதிகரிப்பு> பேர் இடர் நிலமை> மற்றும் காலநிலை மாற்றம் அதிகரித்தல்> விவசாயம் குறைவடைதல் மற்றும் உணவு பற்றாக் குறை அதிகரித்தல் உட்பட பல அழிவுகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்க நேரிடும். இதனால் நாட்டின் காட்டு கட்டமைப்பை அழிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தேவைக்காக கொண்டுவரப் படும் இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு குடிமக்களான நாம் முன்வர வேண்டும்.
சஜீவ சாமிகர
காணிகள் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்