
உறுமய காணி உறுதியும் சாட்சி இல்லாத யானைகள் கொலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களா?
Published
உறுமய காணி உறுதியும் சாட்சி இல்லாத யானைகள் கொலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களா?
தற்போது அரசாங்கத்தின் தேவையாக இருப்பது விவசாயத்தில் இருந்து அகற்றப் பட்ட காணிகளை கம்பனிகளும் வியாபாரிகளும் மிக பெரிய அளவில் முதலீடு செய்வதற்காக அவர்களிற்கு வழங்குவது ஆகும். அதற்காக விவசாயிகளை மிக கடும் பொருளாதார பாதிப்புகளிற்கு உள்ளாக்கி, விவசாய காணிகளிற்;கு உள்ளேயே இடம் பெயர வைத்து, கடனாளிகளாக ஆக்கி, விவசாய காணிகளில் இருந்து வெளியேறும் அளவு அனாதரவான நிலமைக்கு உள்ளாக்கிய பின்னர் விவசாயிகளிற்கு உறுமய (உரிமை) என்ற பெயரில் காணி உறுதிகள் மூலம் காணி உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்கின்றது. இதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருப்பது விரைவாக காணிகளை வி;ற்று விட்டுச் செல்லும் விவசாயிகளை உருவாக்குவது ஆகும். வி;ற்கக் கூடிய காணிகள் தற்போதய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஆக உள்ளது. நில முகாமைத்துவ அறக்கட்டளை நிதியம் ஒன்றை அமைப்பதற்காக 2024 மார்ச் 04 ஆம் திகதி பெறப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இது மேலும் உறுதி செய்யப் படுகின்றது.
அது அவ்வாறு இல்லை என்றால் அரசாங்கம் செய்ய வேண்டியது பூரண உரிமை உள்ள காணி உறுதிகளை வழங்குவதற்கு முன்னர் விவசாய இரசாயன கம்பனிகளின் கடும் பிடியில் சிக்கி பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களில் சிக்கி இடம் பெயர்ந்து இருக்கும் விவசாயிகளை அதில் இருந்து விடுவிப்பதாகும். ஆனால் அது போல எந்தவொரு நடவடிக்கையையும் மேற் கொள்ளாத அரசாங்கம் விவாசயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட நீர் பாதுகாப்பு மற்றும் விளைச்சல் அதிகமாக உள்ள மகாவலி வலயங்களிற்கு உரிய விவசாயிகளிற்கு வழங்குவதற்கு பதிலாக பாரியளவில் சோளம் மற்றும் கரும்புச் செய்கைக்காக கம்பனிகளிற்கும் வியாபாரிகளிற்கும் வழங்கி இருக்கிறது.
முதலில் செய்ய வேண்டியது கம்பனிகளினால் இலாப நோக்கில் செய்யப் படும் விவசாயத்தின் பலிக்கடாக்கள் ஆக்கப் பட்டிருக்கும் விவசாயிகளை சுய விவசாயியாக ஆக்குவதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். அது மட்டுமல்லாமல் விவசாய நிலங்களுடன் இணைந்த நீரிற்கான உரிமை, விதைகளிற்கான உரிமை மட்டுமல்லாமல் விளைச்சலை கம்பனிகள் மற்றும் வியாபாரிகளால் அபகரிக்கப்; படும் பொறி முறையில் இருந்தும் விவசாயிகளை விடுவிக்க வேண்டும். இவை அனைத்தின் பின்னர் ஆங்கிலேய தத்துவ ஞானியான தோமஸ் ஹோவிஸ் (1588 – 1679) குறிப்பிட்டுள்ள படி விவசாயிகளிற்கு அவர்களது காணிகளிற்கு உள்ள உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக பூரண சுய உரிமையை வழங்க வேண்டும். அதன் ஊடாக பயிரப்படும் பயிர் தொடர்பாகவும், பயிரிடப்படும் பருவம் தொடர்பாகவும், நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் மட்டும் அன்றி விளைச்சலின் விலையை தீர்மானித்தல், மற்றும் பாவனையாளர்களிற்கு வழங்குதல் வரை முழு சமூகத்தின் எண்ணத்திற்கும் ஏற்ப அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் விவசாயிகளிடம் இருக்க வேண்டும். தற்போது இவை அனைத்தும் சில கம்பனிகளாலும் வியாபாரிகள் சிலரினாலும் தீர்மானிக்கப் படுகின்றது. அதனால் விவசாயி மற்றும் பாவனையாளர்கள் ஆகிய இரு சாராரும் கடுமையாக சுரண்டப் படுகின்றனர். அதன் மூலம் நாட்டின் உணவு தன்னிறைவை கட்டி எழுப்ப முடியும் என நாம் உணர்ந்து கொண்டமையினால் அதை தடுப்பதற்கு பூரண உரிமையுள்ள காணி உறுதியை விட மிக விரிவான சுய அதிகாரம் விவாசாயிகளிற்கு வழங்கப்பட வேண்டும் என நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம். அதற்கு பதிலாக சட்ட விரோதமான, விவசாயிகளை ஏமாற்றும் அரசியல் பலத்தை நோக்கமாக கொண்ட “உறுமய (உரிமை)” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கைகளை முற்று முழுதாக நிறுத்த வேண்டும். பொருளியல் விஞ்ஞானி ஆடம் ஸ்மித் (1972 – 1790) குறிப்பிட்டுள்ள வகையில் காணிகளின் பாதுகாப்பிற்காக சிவில் அரசாங்கத்தை நிறுவி இருக்கும் வரையில் உண்மையில் நடப்பது ஏழைகளிற்கு எதிராக செல்வந்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
காணி என்பது வெறும் வியாபாரப் பொருள் அல்ல. அதைச் சுற்றி உணவு தன்னிறைவு சமூக பொருளாதார நிலமை மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தும் இணைந்து இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜீன் ஷிக்லர் உலகின் பசியை போக்குவதற்கு நிலத்தை அணுகுவது மிக முக்கிய அம்சமாகும் என வலியுறுத்தி உள்ளார். இதன் மூலம் உணவிற்கான உரிமை மற்றும் நிலத்திற்கான உரிமை ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்மை தெரிகின்றது. உணவிற்கான உரிமை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஆன ஒலிவியா த ஷட்டர் பெரும் அளவிலான காணிகள் கையகப் படுத்தப் பட்ட காரணத்தால் உணவிற்கான உரிமை பறிக்கப் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
காணிகள் முழுமையான வியாபார பொருள் ஆக்கப்பட்டதன் பின்னர் மனித உரிமைகளிற்கான அணுகு முறை, சமூக, கலாச்சார மற்றும் ஆன்மீக அணுகு முறைகள் தொடந்தும் செல்லுபடி ஆகாது. அதனால் காணி பொருளாதார பண்டம் மாத்திரம் அல்ல மக்களின் எதிர்காலம் மற்றும் கலாச்சார அடிப்படையாக இருக்கின்றது என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இடம் மற்றும் விவசாயிகளிற்கு இடையில் இருக்கும் அனைத்து பிணைப்புகள் மற்றும் எதிர்கால இருப்பு தொடர்பாக கவனம் செலுத்தாமையே எந்தவித அடிப்படைகளும் இன்றி வணிக பாவனையில் மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட “உறுமய (உரிமை)” காணி உறுதி வழங்கல் நடவடிக்கையினை நாம் எதிர்க்க காரணமாக அமைந்தது. இதை சமுதாயம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலேயர்களின் காணி அபகரிப்புக்கு சமமான உறுமய (உரிமை) உறுதிகளின் வேறு அம்சம்
பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்;த காலத்தில் இந் நாட்டின் காணிகளை இரண்டு சட்டங்களின் கீழ் ஆங்கிலேய அரசாங்க மயப்படுத்தியது. 1940 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அரச காணிகள் (பலவந்தமாக அபகரிப்;பு) கட்டளைச் சட்டத்தின் மூலம் இலங்கையரின் உரிமையை காட்ட முடியாத காணிகள் அனைத்தும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு சொந்தமாக்கப் பட்டது. அதன் பின்னர் விவசாயிகளின் சேனைப் பயிர் செய்கை நிலங்களை ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் அபகரிப்பதற்காக 1897 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க தரிசு நிலக் கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அபகரிக்கப் பட்ட காணிகள் ஐரோப்பிய தோட்டக்காரர்களிற்கும் உள்ளுர் தனவந்தர்களிற்கும் வழங்கப் பட்டது. இந்த காணிகளை அவர்கள் கோப்பி, தேயிலை, ரபர் போன்ற வணிக பயிர் செய்கைக்காக பயன்படுத்தினர். இதன் காரணமாக நாட்டின் உணவு உற்பத்தி சரிவடைந்தது. அதன் பிரதிபலனாக 1919 ஆம் ஆண்டில் இந் நாட்டில் பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு தீர்வு வழங்குவதற்காக 1927 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது காணிகள் ஆணைக் குழு நியமிக்கப் பட்டது. அதன் நோக்கம் பயனுள்ள காணி கொள்கை தொடர்பாக அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவது ஆகும். அதற்கேற்ப 1927 ஆம் ஆண்டு ஆணைக் குழுவின் அறிக்கை அரசாங்கத்திற்கு சமர்பிக்கப் பட்டது. 1931 இல் உருவாக்கப் பட்ட அரசாங்க சபையின் வேளாண்மை மற்றும் காணி அமைச்சர் பதவி டி. எஸ். சேனநாயக்க அவர்களிற்கு வழங்கப் பட்டதுடன் காணிகள் ஆணைக் குழு அறிக்கைக்கு அமைய காணி சட்டங்கள் உருவாக்கம் மற்றும் விவசாய குடியேற்றங்களை அமைத்தல் போன்றவை ஆரம்பிக்கப் பட்டன. அதற்கமைய அரசாங்க சபை மூலம் 1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தை அமுல் படுத்தி செய்ற்படுத்தப்பட ஆரம்பிக்கப் பட்டது. சில நோக்கங்கங்களிற்கு அமைய இந்த சட்டம் செயற்பட்டது. அதாவது காணி உடைய விவசாய வர்க்கத்தை உருவாக்குதல், விவசாயத்தை முன்னேற்றுதல், காணிகளை அளந்து திட்டமிடல் மற்றும் காணி அபிவிருத்தி செய்தல் போன்றன. இதற்கமைய விவசாய வர்க்கத்தினர், திருமணம் செய்த குறைந்த வருமானம் உடையவர்களிற்கு, அதிக வருமானம் உடையவர்களிற்கு மற்றும் கல்வி கற்ற இளைஞர்களிற்கு காணிகள் வழங்கப் பட்டன.
விவசாயத்திற்கு தேவையான காணிகளை வழங்குவது காணி அபிவிருத்தி கட்டளை சட்டதினால் மேற் கொள்ளப் படுகின்ற போது குடியிருப்பதற்கு, வர்த்தக தொழில்களை நடத்துவதற்கு, தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு மானிய பத்திரங்கள் அல்லது உரிம பத்திரங்கள் மூலம் காணிகளை வழங்குவதற்கா 1947 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க அர காணி கட்டளை சட்டம் இயற்றப் பட்டது. சட்டத்தின் இரண்டாவது பிரிவிற்;கு அமைய ஜனாதிபதி அவர்களிற்கு, காணிக்கு பொறுப்பான அமைச்சரிற்கு மற்றும் காணி ஆணையாளர் நாயகத்திற்கு காணிகளை வழங்கும் அதிகாரம் உண்டு. அரச காணிகள் கட்டளை சட்டத்தின் 112 ஆவது பிரிவிற்;கு அமைய காடுகள் கட்டளைச் சட்டம் (வன பாதுகாப்பு கட்டளை சட்டம்), நீர்பாசன கட்டளை சட்டம் மற்றும் காணி அபிவிருத்தி கட்டளை சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கும் இந்த சட்டத்தின் விதி முறைகள் பொருந்;தாது என குறிப்பிடப் பட்டுள்ளது.
உறுமய (உரிமை) காணி உறுதி வழங்குதல் ஏன் சட்ட விரோதமானது?
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் 19 (2) உப பிரிவிற்;கு அமைய அனுமதி பத்திரம் வழங்கல் மற்றும் மானிய பத்திரத்தின் அடிப்படையில் விவசாயிகளிற்கு விவசாய நடவடிக்கைகளிற்காக காணிகள் வழங்கப் பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சுவர்ண பூமி, ஜய பூமி, ரன் பூமி என காணி உறுதிகள் வழங்கப் பட்டுள்ளன. உறுமய (உரிமை) திட்டத்தின் ஊடாக இந்த அனுமதி பத்திரம் மற்றும் மானிய பத்திரத்திற்கு பதிலாக அரசாங்கத்தின் காணி கட்டளை சட்டத்தின் 2 ஆவது பிரிவிற்கு அமைய சுதந்திர வழங்கல் பத்திரம் தயாரித்து வழங்கப் படுதல் இடம் பெறுகின்றது. ஆனால் இதனை பூரண உரிமையுள்ள காணி உறுதி வழங்குதல் என அரசாங்கத்தினால் கூறப்படுகின்றது. இதன் மூலம் விவசாயிகளை ஏமாற்றுவதே இடம் பெறுகின்றது.
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளிற்கு அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் சுதந்திர உரிமை பத்திரம் அல்லது பூரண உரிமை உள்ள காணி உறுதி வழங்குவதற்கான சட்ட அடிப்படைகள் எதுவும் இல்லை. அரச காணி கட்டளை சட்டத்தின் 112 ஆவது பிரிவிற்கு அமைய காணி அபிவிருத்தி கட்டளை சட்டடத்தின் விதி முறைகளை மீறும் அதிகாரம் அரச காணி கட்டளைச் சட்டத்திற்கு இல்லை. அவ்வாறு இருக்க காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்திற்கு அமைய வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்திற்காக அரச காணி கட்டளை சட்டத்தின்படி சுதந்திர மானிய பத்திரம் வழங்கும் அதிகாரம் கிடையாது. இதன் மூலம் மக்களை ஏமாற்றுவதே இடம் பெற்று இருக்கின்றது. அது மட்டுமல்ல பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டளை சட்டம் மற்றும் சட்ட மன்றத்தை அவமதிப்பது ஆகும். இதன் மூலம் சட்டத்தின் ஆட்சி குலைக்கப் பட்டுள்ளது.
அரச காணி கட்டளை சட்டத்தின் 2வது பிரிவின் படி அரச காணிகள் வழங்குவது மற்றும் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் 19 (2) உப பிரிவின் படி காணி ஆணையாளர் நாயக்திற்கு அரச காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான சுற்று நிருபங்களை வெளியிடும் அதிகாரம் இல்லை. அதனை சட்ட சீர் திருத்தத்தின் மூலம் அல்லது பாராளுமன்றத்தில் புதிய சட்டத்தினை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே மேற் கொள்ள முடியும். அதற்காக காணி ஆணையாளர் நாயகம் கே. டி. பந்துல ஜயசிங்க அவர்களினால் 2023 டிசம்பர் 21 ஆம் திகதி 2023 ஃ 01 இலக்க சுற்று நிருபத்தின் மூலம் சட்ட விரோதமாக அதிகாரத்தை மீறி உள்ளார். இல்லா விட்டால் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தியமை ஆகும். சட்டபூர்வ அதிகாரம் இல்லாத செயற்பாட்டின் மூலம் வழங்கப் படும் காணி உறுதிகள் செல்லுபடி அற்றதாகும். அதனால்; இந்த காணி உறுதிக்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கையை மேற் கொள்ள முடியும். இதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப் படுவதே இடம் பெறுகின்றது. பூரண உரிமையுள்ள காணி உறுதி வழங்குவதாக குறிப்பிட்டு காணி ஆணையாளர் நாயக திணைக்களம் சட்ட விரோத செயலில் ஈடுபடுகின்றது என்பதே இதன் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களிற்காக விவசாயிகளை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
அது மட்டுமல்லாமல் அரச காணிகள் கட்டளை சட்டத்தின் 2 வது பிரிவின்படி இலவச மானிய பத்திரம் மட்டுமே வழங்க முடியும். அதை காணி உறுதியாகவோ அல்லது பூரண உரிமை உள்ள உறுதியாகவோ கருத முடியாது. அதைத் தவிர காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டிருக்கும் அனுமதி பத்திரம் மற்றும் மானிய பத்திரங்களில் பின் உரித்து குறிப்பிடப் பட்டு உள்ள நிலையில் சுதந்திர மானிய பத்திர நடவடிக்கை ஊடாக அது முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப்படும். அதன் ஊடாக ஒரு சட்டத்தின் மூலம் இன்னொரு சட்டதிற்கு சவால் விடுதலே இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு சட்டத்தை இயற்றிய உத்தியோகத்தர்களிற்கு எதிராக விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமின்றி தொடர்ந்தும் விவசாயிகள் ஏமாற்றப் படுவதற்கு இடமளிக்கக் வேண்டியதில்லை.
விற்கக் கூடிய உறுதியின் மூலம் விவசாயிகளை நிர்கதி ஆக்குதல்
விவசாயிகளினால் பெறப் பட்டுள்ள அனுமதிப் பத்திரம் மற்றும் மானிய பத்திரங்களில் பெரும்பாலானவை விதை மற்றும் உர வியாபாரிகளிடமே (முதலாளி) இருக்கின்றன. பொருளாதார ரீதியில் நாதி அற்று இருக்கும் விவசாயி பயிர் செய்கை நடவடிக்கைகளிற்காக விதை மற்றும் உரத்தினை பெற்றுக் கொள்ள இந்த மானிய பத்திரங்களை அடகு வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான மானிய பத்திரங்கள் மற்றும் அனுமதி பத்திரங்களை பொறுப்பாக கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று இருக்கின்றனர். ஆனால் மீண்டும் கடனைச் செலுத்தி வியாபாரிகளிடம் இருந்தும் மற்றும் வங்கிகளில் இருந்தும் அவற்றை திருப்பிக் கொள்ள முடியாமல் இருந்தாலும்; குடியிருந்த காணி மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப் பட்டிருப்பது அந்த அனுமதிப் பத்திரங்கள் மற்றும் மானிய பத்திரங்களை மற்றவர்களிற்கு மாற்ற முடியாத காரணத்தினால் அவை அவர்களிடம் செல்லாமல் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இறுதி பாதுகாவலர் ஆக அரசாங்கம் இருப்பதனாலும். பூரண உரிமை அல்லது காணி உறுதியால் உரிமை கிடைத்தன் பின்னர் அவை அனைத்தும் விவசாயிகளிற்கு இல்லாமல் போய் வியாபாரிகளிற்கோ அல்லது வங்கிகளிற்கோ உரியது ஆகி விடும். இந்த மானிய பத்திரம் மற்றும் அனுமதி பத்திரம் அடகு வைக்கவோ அல்லது பொறுப்பாக வைத்து இருக்கும் நபர்களினாலும் காணி உறுதியை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நடுவர் மன்றம் தொடர்பாகவோ அல்லது மேன் முறையீட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவோ இந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப் படவில்லை. அது மட்டும் இன்றி பூரண உரிமை உள்ள காணி உறுதி கிடைத்த பின்னர் தமது விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கு விவசாயிகள் வறுமையில் தீர்மானம் எடுக்கும் போது குடும்பங்களிற்குள் பல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அது மட்டும் இல்லாமல் அனுமதி பத்திரம் மற்றும் மானிய பத்திரத்தில் பின் உரித்து குறிப்பிடப் பட்டிருந்தாலும் பூரண உரிமை உள்ள காணி உறுதி கிடைத்த பின்னர் தமது விருப்பத்தின் பேரில் செயற் பட முடியும் என்பதனால் குடும்பங்களில் பிரச்சனை ஏற்படும் விதமான தீர்மானங்கள் எடுப்பதன் காரணமாக பல சமூக பிரச்சனைகள் விவசாய குடியிருப்புகளிற்குள் அதிகரிக்க கூடும். இந்;த சுற்று நிருபத்தை வெளியிடுவதற்கு முன்னர் சட்ட நிலமை மற்றும் நடைமுறை நிலமை பற்றி கவனம் எடுக்கப் படவில்லை என்றே இதன் மூலம் தெரிய வருகின்றது.
உறுமய (உரிமை) உறுதி காடுகளின் இருப்பில் ஏற்படுத்தும் தாக்கம்
தற்போதய அரசாங்கம் எதிர் பார்ப்பதைப் போலவே பூரண உரிமை உள்ள காணி உறுதியை பெற்றுக் கொள்ளும் விவசாயிகள் அவர்கள் எதிர் நோக்கும் வறுமை காரணமாக அந்த காணி உறுதிகளை வியாபாரிகளிற்கோ அல்லது கம்பனிகளிற்கோ விற்கும் காரணத்தால் விவசாயிகளிற்கு பயிரிடுவதற்கான காணிகள் இல்லாமல் போகும். அதனால் அவர்கள் உயிர் வாழ்வதற்காக கம்பனிகளில் விவசாய கூலி ஆள் ஆகவோ அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான புதிய காணிகளைப் பிடித்து விவசாயம் செய்யவோ நேரிடும். இங்கு வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 20 ஆவது உப பிரிவின் கீழ் நிர்வகிக்கப் படுகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளிற்கு உரிய காணிகள் இலகுவாக பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். அவற்றில் பெரும்பாலானவை நீர் பிடிப்பு இடங்கள் அல்லது யானைகளின் இருப்பிடங்கள் ஆகும். அவற்றை சுத்தம் செய்து காணிகளை இழந்த விவசாயிகளினால் விவசாய நடவடிக்கைகளிற்காக பயன் படுததப்படும் போது நீர் பற்றாகுறை உட்பட விவசாய பிரச்சனைகள் பல அதிகரிக்கக் கூடும். அது இந் நாட்டின் உணவு தன்னிறைவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிரித்தானிய ஆட்சி காலத்தில் அரச காணிகள் (பலவந்தமாக கையகப் படுத்தல்) கட்டளைச் சட்டதின் மூலமும் மற்றும் தரிசு நில கட்டளை சட்டத்தின் மூலமும் விவசாயிகளின் காணிகள் கம்பனிகளிற்கும் தேசிய வியாபாரிகளிற்கும் வழங்கப் பட்டதன் காரணமாக 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட உணவு பற்றாகுறையைப் போன்று பல மடங்கு உணவு பற்றாக்குறைக்கும் வறுமை அதிகரித்தல் மற்றும் மந்த போசணை அதிகரிப்பு உட்பட பல பிரச்சனைகள் இந்த உறுமய (உரிமை) காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஊடாக ஏற்படலாம். ஆட்சியை கைப்பற்றும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க, காணி அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ மட்டுமல்லாமல் காணி ஆணையாளர் நாயகம் கே. டீ. பந்துல ஜயசிங்ஹ ஆகிய அனைவரும் இந்த சட்ட விரோத செயற்பாடுகளிற்கும் அதன் அடிப்படையில் ஏற்படும் அனைத்து சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சனைகளிற்கு பொறுப்பேற்க வேண்டும்.
உறுமய (உரிமை) காணி உறுதிகள் வழங்கும் அதே வேளை யானை – மனித பிரச்சனைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கம்.
விவசாயிகளால் விற்பனை செய்யக் கூடிய வகையில் பூரண உரிமை உள்ள காணி உறுதிகளை வழங்குவதன் மூலம் விற்பனை செய்யக் கூடிய அரச காணிகளை அதிகரித்தல் மற்றும் விவசாயிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களை காணிகளை விற்கத் தூண்டுவதும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும். அதன் மூலம் வணிக விவசாய மற்றும் வேறு முதலீட்டு திட்டங்களை நடைமுறைப் படுத்தும் கம்பனிகளிற்கும் மற்றும் பாரியளவு வியாபாரிகளிற்கும் விவசாயிகளிடம் இருக்கும் காணிகளை கையகப் படுத்துவதை இலகு படுத்துவது ஆகும். அப்போது அவுரா லங்கா ஹேர்பல் கம்பனிக்கு கற்றாளை வளர்ப்பதற்கு அனுராதபுர மாவட்டத்தில் 104066 ஏக்கர் பெற்றுக் கொள்ளல், சிங்கப்பூரின் ஹெசேல் வென்செஸ் நிறுவனம் கரும்பு செய்கைக்காக மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்ங்களிலும் 65,000 ஏக்கரை பெற்றுக் கொள்ளல் மாத்திரம் அன்றி வவுனியா மாவட்த்தில் 72000 ஏக்கர் காணி கரும்புச் செய்ககைக்காக தாய்லாந்து சுடெக் இன்ஜினியரிங் தனியார் கம்பனிக்கு பெற்றுக் கொள்வது போன்றவை இலகுவாக அமையும். சுதந்திர சந்தைக்குள் புழக்கத்தில் இருக்கும் காணி சந்தையை உருவாக்குவதே தற்போதய அரசாங்கத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக விவசாயிகளிற்கு பூரண உரிமை உள்ள காணி உறுதிகளிறகான உரிமையை உறுதி செய்வதன் மூலம் விவாசயிகளின் காணி உரிமையை பாதுகாக்கப் படும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். ஆனால் அதன் உள் நோக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை.
யானை – மனித பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களால் கடந்த காலங்களில் மக்கள் மயப்படுத்திய கருத்துக்களிற்கு சமமானது ஆகும். இலங்கையில் யானைகள் அதிகம் என்றும் அந்த விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் யானை – மனித பிரச்சனை ஏற்படுவதாக குறிப்பிட்டு யானைகளை கொல்வதற்கு மக்கள் தூண்டப் பட்டனர். அதற்கிடையில் யானைகள் கொல்லப் படுவதை தடுப்பதற்கு அரச நிறுவனங்களின் தலையீடு குறைக்கப் பட்டன. இதனால் கடந்த வருடத்தில் 483 யானைகள் கொல்லப் பட்டன. வரலாற்றில் இது மிக அதிகமான யானை மரணங்களின் எண்ணிக்கை ஆகும். 2011 ஆம் ஆண்டில் இறுதியாக மேற் கொள்ளப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பின்படி 5879 யானைகள் வரை உயிர் வாழ்வதாக இனங் காணப் பட்டதுடன் அதன் பின்னர் இன்று வரை கடந்து சென்ற 12 வருட காலப் பகுதிக்குள் 4017 யானைகள் வரை இறந்துள்ளன. இதற்கமைய யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன என குறிப்பிடுவது முற்று முழுதான பொய் ஆகும்.
இதன் மூலம் அரசாங்கம் எதிர் பார்ப்பது உலர் வலயங்களில் யானைகள் இல்லாத காட்டுப் பகுதிகளை உருவாக்கி அரசாங்கத்தின் அந்த முழு காணிகளையும் கம்பனிகளிற்கும் வியாபாரிகளிற்கும் முதலீடுகளிற்காக வழங்குவதை இலகுவாக்குவது ஆகும். இதனால் உறுமய (உரிமை) காணி உறுதி வழங்குவதும் மற்றும் யானைகளை கொல்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என கொள்ளலாம்.
இதனால் பதவிக்கு வரும் அரசாங்கத்தினால் தமது விருப்பத்தின் படி காணிகள்; தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் முறையியை முற்று முழுதாக நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும். 1987 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப் பட்ட 9 வது உப ஆவணத்தில் பிரதேச சபை பட்டியலில் இரண்டாவது பிரிவில் குறிப்பிபட்டுள்ளபடி “தேசிய காணிகள் ஆணைக்குழு” அமைத்து அரசாங்க காணி பாவனை தொடர்பான “தேசிய காணி கொள்கை” தயாரித்து அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கும் முறையினை உருவாக்க வேண்டும். 1927 ஆம் ஆண்டின் முதலாவது காணி ஆணைக் குழுவின் பின்னர் 1956 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் காணிகள் ஆணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்று வரை 39 ஆண்டுகளிற்குள் காணிகள் ஆணைக் குழு அமைக்கப் படவில்லை.
அதனால் தற்போதய அரசாங்கத்தின் தன்னிச்சையாக காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொறி முறையினை நிறுத்தி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய காணி கொள்கை தயாரிப்பதற்கு பதிலாக மக்கள் கருத்தின் அடிப்படையில் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டால் நாட்டு மக்களும் அனைத்து உயிர் வாழ் சமூகமும்; மிக விரைவில் பெரும் பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
சஜீவ சாமிகர
காணிகள் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்