
மின்னேரியாவில் யானை-விவசாயி மோதல் பற்றியதோர் ஆய்வு
Published
மின்னேரியாவில் யானை-விவசாயி மோதல் பற்றியதோர் ஆய்வு
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பெரும் போகத்தின் துவக்கத்தில் மின்னேரியா பகுதி விவசாயிகளிடம் இருந்து வழமையாக வரும் புகார்ஒன்றுள்ளது. இப்பகுதியில் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் மின்னேரியா வாவிக்கு, பெரும் போகத்தில்விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீரை, அரசு நிரப்புவதில்லை என்பதே அக் குற்றச்சாட்டு. அவர்கள் கூறுவதன்படி, மின்னேரியா வாவியின் குறிப்பிடத்தக்க பகுதியில் காட்டு யானைகளை உலாவ விட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டி வருமானம்ஈட்டும் நோக்கில் வாவிக் கரைப் பகுதியை நீரற்ற வெறும் நிலமாக வைக்கும் நோக்கில் வாவியை முழுமையாக நிரப்புவதை அரசுதவிர்த்து வருகிறது.
இங்கு குற்றம் சாட்டப்படும் முக்கிய அரசு நிறுவனம் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களமாகும். அவர்கள் வாவியைமுழுமையாக நிரம்ப விடாமல் தடுக்க நீர்ப்பாசன திணைக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
நாட்டுக்கு சோறு போடும் விவசாயி முக்கியமா அல்லது காட்டு யானைகள் முக்கியம் என்பதுவே விவசாயிகள் மத்தயில்பிரபலமான வாதமாக இருக்கின்றது.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர யானைகளை பயன்படுத்தி சம்பாதிக்கும்டாலருக்காக, உள்நாட்டு மக்களின் பசியைப் போக்கும் விவசாயத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமா என விவசாயிகள்கேட்கின்றனர். மின்னேரியா இப்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாவியாக இல்லாமல் மொரகஹகந்த நீர்த்தேக்கம்நிர்மாணிக்கப் பட்டதை தொடர்ந்து அது மகாவலி திட்டத்துடன் இணைக்கப்பட்ட நீர்ப்பாசன அமைப்பின் ஒரு பகுதியாகமாறியதால் இந்த போகத்தில் இந்த சச்சரவு மிகவும் தீவிரமாக எழுந்தது. இப்போது, மின்னேரியா வாவியின் செயல்பாடுகள்அப்பகுதியில் மட்டுமின்றி, புவியியல் ரீதியாக பரந்த நிலப்பரப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வாவித் தொகுதியை கொண்ட பாசனஅமைப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்ததாக உள்ளன. அனைத்துத்தரப்பினரதும் கருத்துகளை உள்ளடக்கி இந் நீர் முகாமை பிரச்சினை தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
17 நூற்றாண்டுகளுக்கு முன்பு மஹாசென் மன்னரால் (கி.பி. 276-303) கட்டப்பட்ட மின்னேரி வாவி, ரஜரட்டை நாகரிகத்தின்வீழ்ச்சிக்குப் பிறகு பாழடைந்து, பின்னர் காலனித்துவ காலத்தின் பிற்பகுதியில் மீட்டெடுக்கப்பட்டது. 1933ல் மின்னேரியாவிவசாயக் குடியிருப்பில் தொடங்கிய விவசாயிகள் குடியிருப்பு இயக்கம், வாவியைச் அண்டிய புதிய விவசாய மறுமலர்ச்சிக்கானதொடக்கமாக அமைந்தது. தற்போது 4,670 ஏக்கர் அதாவது 18.9 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள மின்னேரியாவாவியானது சுமார் 110,000 ஏக்கர் அடி நீரை நிரப்பக்கூடியது, இதில் சுமார் 22,500 ஏக்கர் நிலத்தில் நெற் செய்கைசெய்யப்படுகிறது. இதற்கு வசபா மன்னரால் கட்டப்பட்ட 32 கி.மீ. நீளம் கொண்ட எலஹெர கால்வாய் வழியாக அம்பன்கங்கையில் இருந்து நீர் கிடைக்கப்பெறுகிறது. இது தவிர மின்னேரிய குளத்தில் இருந்து கவுடுல்ல மற்றும் கந்தளாய்குளங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் 400 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மின்னேரியா வாவிக் கரையில் கூடுகின்றன. ஏனெனில் இந்த நிலம் இந்த நாட்டில் காட்டு யானைகளின் சொர்க்கபூமியாக விளங்கும் மின்னேரியா-கவுடுல்ல-ஹுருலு-சோமாவதி நீீீரேந்து பள்ளத்தாக்கு, தேசிய வனப்பூங்கா வுக்குரிய சூழல்தொகுதிக்கு சொந்தமான பிரதேசமாக இருப்பதாலாகும். இக்காலத்தில், சிறு
போகப் பயிர் செய்கைக்கு நீர் வழங்கப்படுவதன் காரணமாக மின்னேரிய வாவியின் நீர்மட்டம் சுமார் 20,000 ஏக்கர் அடியாகவீழ்ச்சியடைந்துள்ளது. இக் காலத்தில் யானைகள் அதிகம் விரும்பும் பெரு உள்ளிட்ட புற்கள் அந்த ஏரிப் பகுதியில் அதிகமாககிடக்கின்றன. ஆசியாவிலேயே இந்தளவு அதிகமாக யானைகள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வு இதுவேயாகும், இந்த இயற்கைநிகழ்வை சுற்றுலாப் பயணிகள் "ஆசியாவின் அழகிய யானைகள் கூட்டம்" (Great Elephant Gathering of Asia) என்றுஅழைக்கின்றனர். இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணியிலிருந்து மின்னேரியா வனப் பூங்காவிற்குள் நுழைவதற்கு $25 டாலர் வசூலிக்கப்படுகின்றது. எனவே இதன் மூலம் கணிசமானளவு அந்நியச் செலாவணி கிடைக்கப் பெறுகிறது.
பெரும் போகத்தில் பயிர் செய்கைக்கு தண்ணீர் வழங்க மின்னேரியா வாவிக்கு நீர் நிரப்பும் பணியை நவம்பர் மாதத்துக்குள்செய்து முடிக்க வேண்டும், ஆனால் காட்டுயானைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டி வருமானம் ஈட்டும் நோக்கில், வாவியைஅதன் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை நிரப்பாமல் தவிர்க்கப்படுகிறது. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது என்பதேவிவசாயிகளின் குற்றச்சாட்டாகும். இதன் விளைவாக அவர்கள் செய்கை செய்யக்கூடிய அனைத்து விவசாய நிலங்களுக்கும்போதிய தண்ணீர் வசதி கிடைக்கவில்லை. விவசாயத்தை நம்பி வாழும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு இந்நிலைமை மிகுந்த தாக்ககரமானதாக உள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாவது; சுற்றுலாபயணிகளிடம் இருந்து பெறும் அன்னிய செலாவணி குறித்து விவசாயிகளுக்கு போதிய அறிவில்லை. அவர் கூறுவதன்படி, நெற்செய்கை மூலமான விவசாயிகளின் வருமானம் நாட்டிற்குள் புழங்கும் பணமாகும். ஆனால் வெளிநாட்டினரிடம் இருந்துபெறப்படும் அந்நிய செலாவணி வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிறது. நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளஇச்சூழலில் இதன் முக்கியத்துவம் அதிகமானதாகும்.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் திரு. டி.பி. சரத் கூறியதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்குஉணவை வழங்கி வரும் மின்னேரியா வாவி மற்றும் அதனை சுற்றியுள்ள விளைநிலங்களை பாதுகாப்பது விவசாயிகளின்கடமையாகும். அத்தோடு, யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதும் காட்டிற்குள் அவற்றிற்கான உணவுகிடைப்பனவை உறுதி செய்வதும் வனவிலங்கு பாதுகாப்பு துறையின் பொறுப்பாகும் என்றும் திரு. சரத் கூறினார். மின்னேரியாவாவியில் இருந்து தண்ணீரை பெறும் சிறு குளங்கள் மற்றும் கால்வாய்கள் வன அமைப்பு முழுவதும் சிதறிக்கிடப்பதாகவும், யானைகள் அவற்றை அண்டி ஆண்டு முழுவதும் வாழக்கூடிய நிலப் பிரதேசத்தை உருவாக்குவது அல்லது வனத்திற்குள் உணவுகிடைப்பணவை உறுதி செய்வது வனத்துறையின் பொறுப்பாகும். மின்னேரியா குளக்கரையின் ஒரு முனையில் கொழும்புமட்டக்களப்பு புகையிரத பாதை அமைந்துள்ளதுடன் அது யானைகள் அடிக்கடி புகையிரதத்தில் மோதும் பிரதேசமாகும். யானைகளுக்கு ஏற்படும் இந்த ஆபத்து தொடர்பில் பொறுப்பான எவரும் கவனம் செலுத்தவில்லை எனவும் டீ.பீ சரத் மேலும்தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்காக யானைகளை வாவிக்கரையில் தங்கச் செய்யாமல், யானைகளை அவற்றின்இயற்கையான இடம்பெயர்வு முறைக்கேற்ப காடுகளுக்கு இடையே நடமாட அனுமதித்து, வனப்பகுதிகளில் அவற்றிற்குதேவையான உணவு, தண்ணீர் வசதிகளை செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை ஒரேசுற்றுச்சூழலில் பார்க்க வசதி செய்து கொடுப்பதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்னேரிய ஏரியிலிருந்து நீர் வழங்கும் மாதலவெவ விவசாயிகள் அமைப்பின் தலைவர்திரு.பிரியந்த ஜயலத் குமார,
இது பற்றி மின்னேரியா வாவியில் இருந்து நீரைப் பெறும் மாதலா வெவ விவசாய அமைப்பின் தலைவர் திரு. பிரியன்த ஜயலத்குமார கூறியதாவது,
“சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு முன்பே மக்கள் வாவி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வந்தார்கள். யானைகளும் இருந்தன. வாவியும் நிரம்பியது. பின்னர் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இப்போது சுற்றுலா துறைக்கு தேவைப்படும்இடங்களுக்கு யானைகளை கொண்டு வருவது தான் இடம்பெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை யானைகள் மின்னேரியாவுக்குவருகின்றன. மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் போது பெரும் போகத்திற்காக வாவி நிரப்பப்படும். அப்போது, வனப்பகுதிவழியாக யானைகள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. இது காலாகாலமாக நடக்கும் இயற்கை நிகழ்வாகும். தற்போதுவனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம், சுற்றுலா பயணிகளுக்காக யானைகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்கமுயல்கின்றனர். விவசாயத்தையும் சுற்றுலா துறையையும் குழப்பிக் கொண்ட ஓர் நிலையே தற்போது உருவாகியுள்ளது. யானைகளுக்காக வனப்பகுதிகளுக்குள் உள்ள குளங்களை புனரமைக்காமல், விவசாய நிலங்களை உருவாக்காமல்விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பெரிய வாவிகளுக்கு சுற்றுலா துறையை கொண்டு செல்லும்போதுதான் சிக்கல்உருவாகிறது. அவ்வாறல்லாமல், காட்டில் உள்ள யானைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதியை உருவாக்கி, யால காட்டில்போன்று சுற்றுலா பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகளை காட்டினால், பிரச்னை முடிந்து விடும்,'' என்றார்.
வரலாறு நெடுகிலும் காட்டு யானைகள் நடமாடிய யானைத் தடங்கள் உள்ளிட்ட நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களின் நட்பு வணிகர்களுக்கும் பாரிய அளவிலான ஒற்றைப்பயிர் செய்கைக்காக அரசு வழங்கியதால்தான் மின்னேரியில்காட்டு யானைகளை தரித்திருக்கச் செய்ய வேண்டியுள்ளது என்பது விவசாயிகளின் மற்றொரு குற்றச்சாட்டாகும். அந்தவியாபாரிகளின் தோட்டங்களுக்கு காடுகளை பலிகொடுத்து இடம்பெயர்ந்த யானைகளுக்காக மின்னேரிய நீர்த்தேக்கத்தைநிரம்ப விடாமல் தடுப்பதன் மூலம் யானைகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான மோதலொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனஅவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இதன் இறுதி முடிவு விவசாயி விவசாயத்தை கைவிட்டுஅதிலிருந்து விலகுவதாகவே அமையும். பிறகு மற்றொரு சுற்றில் அதே விவசாய நிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் கொடுக்கலாம். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை விவசாயிகள்சம்மேளனத்தின் பொலன்னறுவை மாவட்டத் தலைவர் அசோக கருணாசேன, யானை மற்றும் விவசாயி ஆகிய இரு சாராரையும்அரசாங்கங்கள் வேண்டுமென்றே பொறிக்குள் தள்ளி விட்டுள்ளன என்று கூறினார். இது தனியார்மயமாக்கல் மற்றும், வாவிகளில்போதிய தண்ணீரை சேமித்து வைக்காமை போன்ற உத்திகள் மூலம் விவசாயியை விவசாயத்தில் அதைரியப்படுத்தும் செயல்திட்டமொன்று இடம்பெற்று வருகிறது என்பது அவர் கருத்தாகும்.
நீர் முகாமை தொடர்பான மசோதாக்கள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் சூழலில், தண்ணீரைத் தனியார் மயமாக்குவது தொடர்பானஅவரது வாதமும் முக்கியமானது என்பது புலனாகிறது. 1977 இல் நாட்டின் திறந்த பொருளாதாரம்அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலக வங்கி தண்ணீரை தனியார்மயமாக்கும் செயல்முறையை ஊக்குவித்து வருகிறது, மேலும்இதற்காக இரண்டு தசாப்தங்களாக மில்லியன் கணக்கான டாலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தண்ணீர்ஒரு பொது வளம் அல்ல, அதுவொரு விற்பனைப் பொருள் என்பதை உலக வங்கி ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்டது. நீர்முகாமை என்ற போர்வையில் தண்ணீரைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியும் இந்நாட்டு விவசாயிகளின் பெரும்முயற்சியால் முறியடிக்கப்பட்டது.
மறுபுறம், நீர்ப்பாசன முகாமை முற்றிலுமாக மத்திய அரசின் அதிகாரிகளால் மேற்கொள்ளப் ப்படுகின்றது. எல்லாமேஅரசியலாக்கப்பட்ட நாட்டில் அரசாங்கங்கள் அரசியல் நலன்களுக்காக அந்த அதிகாரிகளின் முடிவுகளில் தலையிடாது என்றுநினைப்பது நகைப்பிற்குரியது.
இப்பிரச்னை குறித்து, மின்னேரியா வாவியின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் நிரப்பப்பட வேண்டும் என்பதை தாங்களும்ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அதற்கும் குறைவாக இம்முறை நீர் நிரப்பும் ஆயத்தம் இல்லை என்றும் நீர்ப்பாசன அதிகாரிகள்கருத்து தெரிவித்தனர். ஆனால் பெரும் போகத்தில் தண்ணீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களின் கருத்துப்படி மின்னேரியா வாவி ஒரு சிக்கலான அமைப்புடன் தொடர்புடையது. வழக்கமாக செப்டெம்பர் மாதம்முதல் வாரமாகும் போது, சிறுபோக அறுவடை முடிந்து, அதற்குள் மின்னேரிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சுமார் 20,000 ஏக்கர்அடியாக குறையும். பெறும் போகத்தில் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க, நவம்பர் முதல் வாரத்திலாவது வாவியை நிரப்ப வேண்டும். மின்னேரியா ஏரியுடன் இணைக்கப்பட்ட 28 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள் உள்ளன, இவை அனைத்திற்கும் நீர் வழங்குவதைத்தொடங்க, குறைந்தபட்சம் 75,000 ஏக்கர் அடி நீரை நிரப்ப வேண்டும். இதற்காக மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்துகுறைந்தது 55,000 ஏக்கர் அடி நீரை கொண்டு வர வேண்டும். இப் பணிக்கு குறைந்தது 18 நாட்கள் ஆகும். இவ்வாறு, தண்ணீர்கொண்டு வரும் வழியில், அலஹெர, பகமூன போன்ற பகுதிகளில் உள்ள பயிர்களுக்கும், அலஹெர கால்வாயில் இருந்துதண்ணீர் வழங்க வேண்டும். மறுபுறம், மின்னேரி வாவியில் இருந்து பெறப்படும் நீரை கவுடுள்ள மற்றும் கந்தளாய் ஏரிகளுக்கும்கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் கவுடுள்ள ஏரியின் நீரினால் சுமார் 18,000 ஏக்கர் விவசாய நிலங்களும், கந்தளாய் ஏரியின்நீரினால் சுமார் 25,000 ஏக்கர் விவசாய நிலங்களும் செய்கை பன்னப்படுகின்றன. ஆனால் இவ்வருடம் மொரகஹகந்தநீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தாமதமாக மழை பெய்த காரணமாக அதன் நீர் 30% ஆகக் குறைந்துள்ளது. இதனால்மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விட முடியவில்லை. இந்த காலதாமதத்தால், வழக்கமாக பெரும் போகம் ஆரம்பிக்கும் போது மின்னேரியா ஏரியில் போதிய தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதுவேவிவசாயிகளிடையே தகராறு ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில்பாரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவுள்ள 25,000 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை கந்தளாய்வாவிக்கு விடுவிப்பதும் மின்னேரியா வாவியின் பொறுப்பாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக்கள் அனைத்திலும் முரண்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இப் பிரச்சினையின் சிலமுக்கிய புள்ளிகளை அடையாளம் காண முடியும். முதலாவதாக, தண்ணீரைப் பொது வளமாக அனுபவிக்கும் இயற்கைஉரிமையைக் கொண்ட விவசாயிகள் மற்றும் காட்டு யானைகள் ஆகிய இரண்டு சாராரும் ஏதோ ஒரு வகையில்புறக்கணிக்கப்பட்டனர் என்பதாகும். யானைகள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியாது அத்தோடு தீர்மானங்களைமேற்கொள்வதில் விவசாயிகளின் குரல் முக்கிய காரணியாகவும் இல்லை. தீவு முழுவதிலும் உள்ள நீர்ப்பாசனம் தொடர்பானமுடிவுகள், கண்ணோருவையில் கூடும் பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளால் எடுக்கப்படுகின்றன. அவர்கள் எடுக்கும்முடிவுகள் விவசாய அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டு, விவசாயிகள் அதன்படி செயல்பட வேண்டும். இந்த முடிவுகளைஎடுப்பதில், மின் உற்பத்தி மற்றும் சுற்றுலா துறைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது, விவசாயம் அதற்கடுத்ததாகவேகவனத்தில் எடுக்கப்படுகிறது. போகமொன்றில் நெற் செய்கையோடு தொடர்புடைய பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு இடையேஉள்ள மோசமான ஒருங்கிணைப்பு விவசாயிகளை மேலும் ஏமாற்றமடையச் செய்கிறது. தண்ணீர் கிடைக்கும் நேரத்தைப்பொறுத்து அறுவடைக்கு, அதிக அல்லது குறைவான காலம் எடுக்கும் விதைகளை விவசாயிகள் தெரிவு செய்ய வேண்டும். உரங்களைப் பெறுவதற்கு, உரிய படிவங்களை விவசாய அமைப்புகள் பூர்த்தி செய்து கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமது விவசாய நிலங்களுக்கு போதிய நீர் கிடைக்காத பட்சத்தில் குறித்த போகத்தில்எவ்வளவு நிலத்தில் விவசாயம் செய்ய முடியும், எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை விவசாயிகளால் முன்கூட்டியே கூறமுடியாது. இவ்வாறு அனைத்து நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் விவசாயிகள்பாதிக்கப்படுகின்றனர். நீர் முகாமை பற்றி முடிவெடுக்கும் கூட்டங்களில் வனவிலங்கு பாதுகாப்புத் துறை கலந்துகொள்வதில்லை. மாறாக, இக் கூட்டங்களை சுற்றுலா அமைச்சே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காட்டு யானைகள் தொடர்பானநீர் முகாமை முடிவுகள் சுற்றுலா நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. மறுபுறம், காடுகளில்
சேதமடைந்து காணப்படும் குளங்கள் மறுசீரமைக்கப்டுவது இல்லை என்றே கூறலாம். அதன்படி, வனப்பகுதியில் உள்ளயானைகளுக்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை. மேலும், பாரிய அளவிலான காடழிப்பு காரணமாக, யானைகள்அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும், காடுகளுக்கு இடையே பயணிக்கப் பயன்படுத்தப்படும் யானைத் தடங்களையும்இழந்துள்ளன. இதன் மூலம் உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வரும் யானைகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையேமோதல் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் முன்னுரிமைப்படுத்தும் பாரிய நிறுவனங்களின் ஒற்றைப்பயிர் தோட்டங்களுக்கு காட்டு நிலங்களைவிடுவிப்பதன் மூலமும் அவற்றிற்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதனாலும் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு யானைகளைக் காட்டும் அரசின் உத்தியும் இதற்கு இணையாகவே செல்கிறது. பெரும்போகம் ஆரம்பிக்கும் போதுமழை பெய்ய தொடங்குவதால் வன அமைப்பை முறையாக பராமரித்தால் யானைகள் மின்னேரியா குளம் பகுதியில் தங்காது. அவை வருடாந்தர இடம்பெயர்வு முறையின்படி மற்ற காடுகளுக்கு இடம்பெயர்வதோடு வறட்சியான காலங்களில் மின்னேரியாநீர்த்தேக்கத்திற்குத் திரும்புகின்றன. எவ்வாறாயினும், காடழிப்பைப் போலவே, மின்னேரியா ஒரு தனி அலகாக இல்லாமல், மகாவலி அமைப்பின் ஒரு பகுதியாகவே இயங்குகிறது, எனவே இந்த இயற்கை நிகழ்வு மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இங்கு முடிவெடுப்பது அரசாங்கமே. இதனால், விவசாயிகளும், யானைகளுமே பாதிக்கப்படுகின்றனர். ஒருபுறம், தீர்மானங்கள மேற்கொள்ளும் போது இந்த இரு சாராரையும் கவனத்தில் எடுப்பதில்லை. மறுபுறம், அவர்கள் முன்னுரிமைகளில் இல்லாததால், இந்த இரு சாராருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிலம் மற்றும் வளங்களின்உண்மையான உரிமையாளர்களான, விவசாயிகள் மற்றும் வனவிலங்குகளைப் புறக்கணிக்கும் பொருளாதாரம் நமக்குவேண்டுமா? அத்தகைய பொருளாதாரம் யாருக்கு சேவை செய்கிறது? கடைசியில், விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டால், அந்த நிலங்களின் உரிமையைப் பெறும் பன்னாட்டு நிறுவனங்கள் விளைவிக்கும் சோளமோ அல்லது கற்றாழையோ இந்த நாட்டுமக்களுக்கு உணவளிக்குமா? மனித லாபத்திற்காக காடுகளும், தண்ணீரும் பலியிடப்படும் போது காட்டு யானைகள் சுடப்பட்டு, ரயில்களில் மோதி, பொறிகளில் சிக்கி சாக வேண்டுமா? ஒரு நாட்டின் எதிர்காலத்திற்காக இவற்றைப் பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டாமா? வளர்ச்சி என்ற மாயையால் ஏமாந்து படுகுழியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறோம். அதற்கான தீர்வாக நம்முன் வைக்கப்படுவது அதற்கு சற்றும் குறையாத வளர்ச்சியின் இன்னொரு மாயையாகும். " வரலாற்றில் முதல் தவறு சோகத்தில்முடிவடையும், இரண்டாவது முறை அதே தவறு அபத்தமான கோமாளித் தனத்தில் முடிவடையும்" என்பது அனைவரும் அறிந்தபழமொழியாகும். ஆனால் இந்த அபத்தமான கோமாளித்தனத்தின் மோசமான விளைவுகள் நாட்டு வளங்களின் உண்மையானவாரிசுகளான பொது மக்களின் மீதும் காட்டு விலங்குகளின் மீதுமே சுமத்தப்படுகின்றன.