
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக நிலமே பாதுகாக்கப்பட்ட காடுகளிற்கு உரிய காணிகளை சட்ட விரோதமாக வியாபாரிகளிற்கு குத்தகைக்கு வழங்கல்.
Published
தனமல்வில பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட போதாகம மற்றும் கிவுல் ஆர கிராம சேவகர் பிரிவுகளில் அமைந்துள் குக்குள் கடுவ மற்றும் போதாகம குளங்களின் நீர் பிடிப்பு காடுகளாக அமைந்துள்ள, உடவளவ தேசிய வனப் பூங்காவுடன் இணைந்த வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகின்ற காடுகளில்; 150 ஏக்கரிற்கும் அதிகளவிலான காணிகளை ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமே டிசான் குணசேகர அவர்கள் சட்ட விரோதமாக கையகப்படுத்தி பல்வேறு வியாபாரிகளிற்கு குத்தகைக்கு விடும் பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதற்கு தனமல்வில பிரதேச செயலாளர் கே. எம். ஏ. கலும் நிசாந்த மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் தனமல்வில காட்டின்; வன அலுவலக அதிகாரிகளும் உதவி செய்து இருக்கின்றனர். இந்த காணி மோசடி செயற்பாடுகள் ருகுணு கதிர்காம ஆலயத்தின் காணிப் பிரிவிற்கு பொறுப்பான எம். எம். ஆர். சீ. கே. பண்டார அவர்களினால் செயற்படுத்தப் படுகிறது. சில வருடங்களாக திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்பட்டு வருகின்ற இந்த மோசடி மூலம் ரன்ன பிரசேதசத்தின் சீ. பீ. தேசிகா மற்றும் இரத்னபுரியைச் சேர்ந்த பிரபாத் என்னும் வியாபாரி உட்பட சிலரிற்கு 35 வருட குத்தகை அடிப்படையில் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப் பட்டு வரும் இந்த காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனைத்து காட்டு நிலங்களும்; யானைகளின் இருப்பிடங்கள் ஆகும்.
வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உரிய காட்டு நிலங்களைத் தவிர சில விவசாயிகளினால் நீண்ட காலமாக பயிர் செய்யப் பட்டு வந்த காணிகளும் இவ்வாறு கதிர்காம ஆலயத்திற்குரிய காணிகள் என குறிப்பிட்டு விவசாயிகளிடம் இருந்து பலாத்காரமாக பறித்து வியாபாரிகளிற்கு குத்தகைக்கு விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காணிகளை இழந்த சில விவசாயிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளை வெட்டி சுத்தப்படுத்தி விவசாய நிலங்களை விரிவு படுத்துவதற்கும் தூண்டப் பட்டுள்ளனர்.
இதைத் தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் சசேந்திர ராஜபக்ஷ அவர்களும் இதற்கு முன்னர் இந்த பிரதேச வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிற்கு பகிர்ந்தளித்து உள்ளனர். அதற்கமைய இந்த காடுகளிற்கு உரிய காணி வியாபாரம் மிகவும் திட்டமிடப் பட்டு வருடக் கணக்காக வன பாதுகாப்பு திணைக்களத்தின் ஆசீர்வாதத்தோடு இடம் பெற்றுள்ளது என தெரிய வருகின்றது.
அரசாங்க காடுகளிற்கு உரிய காணிகளை சட்ட விரோதமாக குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வியாபாரிகளினால் காடுகள் முற்றாக அழிக்கப்பட்டு, பாதைகள் அமைக்கப் பட்டும், யானைகள் உள் நுளைவதனை தடுப்பதற்காக மின் கம்பி வேலிகள் அமைக்கப் பட்டும் விவசாய நிலங்கள் அமைக்கப் பட்டுள்ளது. அதைத் தவிர விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளில் பயிரிடப் பட்டிருந்த நிலக் கடலை, பயறு, கௌபி, குரக்கன், சோளம், தேசிக்காய் போன்ற பயிர்கள் டோசர் இயந்திரங்கள் முலம் அகற்றப் பட்டு விவசாயக் கிணறுகள் அழிக்கப் பட்டும், வருடக் கணக்காக விவசாயிகள் பயன்படுத்திய காணிகள் இந்த வியாபாரிகளினால் பலாத்காரமாக கைப்பற்றப் பட்டுள்ளது. தற்போதய உரிமையாளர்களினால் இந்த காணிகளில் நிரந்தர கட்டிடங்கள் கட்டுதலும்; மற்றும் குடியமர்தலும் இடம் பெற்றுள்ளது.