
ஜனாதிபதிக்கான கடிதம்- அரசினால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பாக
Published
2018 ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு
Cc. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்
ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் – 2018 ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் அரசினால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்கவும்
2018 ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி ஊடக பிரிவுஇ “வடக்கு கிழக்கு மக்களின் சட்ட பூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.” எனவும் இதை வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக 2018 ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி கூடியபோது இவ்வாறு தெரிவித்தார் எனவும் பிரசுரித்திருந்தது.
எமது காணிகள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு போர் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்தும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வரும் நாம்இ உரிய அதிகாரிகளுக்கு பல மாதங்களுக்கு முன்னால் நீங்கள் கொடுத்த அறிவுறுத்தலை அமுல்படுத்தச் செய்து எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருகிறோம்.
மேலும் நாம் வைக்கும் இந்தக் கோரிக்கையை ஆதரித்து ஜனாதிபதி தான் எடுத்த இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் படி கோருமாறு பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த வருடங்களில் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் சிலவற்றை அரசு விடுவித்திருந்தாலும் மீள்குடியேற்றத்துக்கான போதியளவு உதவி வழங்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவிப்பதுடன் மேலும் எம்மீது அரசினால் போடப்பட்ட பல்வேறு தடைகளால் எமது மீள்குடியேற்றம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவிக்கிறோம்.
இந்த முயற்சியில் உங்களுக்கு உதவுமுகமாக 15 காணிப் பிரச்சினைகள் தொடர்பான குறுகிய பட்டியல் ஒன்றை இக்கடிதத்துடன் இணைத்துள்ளோம். இப்பட்டியல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த வெளி விவகார அமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பிற்பாடு காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மூலம் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டது. மேலும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணி தொடர்பில் நட்ட ஈட்டு சட்டம் சட்டமாக்கப்பட முன்னர் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மேற்கொண்ட சமர்ப்பணங்களையும் இதனுடன் இணைத்துள்ளோம் (இது தொடர்பாக கையெழுத்திட்டோர் தொடர்பான தகவல்களை பார்வையிட கீழுள்ள இணைப்பை பயன்படுத்தவும்).