
காணி உரிமை தொடர்பான மக்கள் கூட்டமைப்பின் (PARL) அறிவித்தல்.
Published
2024 பெப்ரவரி 12 மற்றும் மார்ச் 04 ஆம் திகதிகளில் அரசாங்க மற்றும் வெவ்வேறு அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்;மானங்கள் வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் மேற் கொள்ளப் பட உள்ள திருத்தம் மற்றும் அரசாங்கத்தின் “உரிமை (உறுமய)” நிகழ்சி திட்டம் சம்பந்;தமாக காணி உரிமை தொடர்பான மக்கள் கூட்டமைப்பின் (PARL) அறிவித்தல்.
2024 பெப்ரவரி 12 மற்றும் மார்ச் 04 ஆம் திகதிகளில் அமைச்சரவையினால் அரச கட்டுப் பாட்டில்; உள்ள காணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இரண்டும் வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்ட திருத்தம் தொடர்பாக கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக ஏற்கனவே செய்திகளிள்; வெளியிடப் பட்டு உள்ள திருத்தப் பட்ட சட்ட மூலம் மற்றும் அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்படுகின்ற “உரிமை (உறுமய)” நிகழ்சி திட்டம் சம்பந்தமாக காணிகள் தொடர்பான மக்கள் கூட்டமைப்பின் கடும் கவனிப்பிற்கு வந்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்கள்
மேற்; குறிப்பிடப் பட்டுள்ள அமைச்சரவை தீர்மானங்களாவன,
மக்கள் பெருந்;தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிற்குச் சொந்தமான பெருமளவிலான காணிகள் நீண்ட காலமாக (சட்ட சிக்கல்கள், நிறுவன பிரச்சனைகள் மற்றும் மூலதன பற்றாகுறையினால்) வினைத் திறனாக, பாவனைக்கு உட்படுத்தப் படாமல் கைவிடப் பட்டுள்ள காரணத்தால் காணிகளில் ஏற்றுமதியினை இலக்கு வைத்த பயிர் செய்கை மற்றும் ஏற்றுமதியை இலக்காக கொண்ட கால் நடை உற்பத்தி தயாரிப்புகள் போன்றவற்றிற்காக தெரிவு செய்யப் பட்ட முதலீட்டாளர்களிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி அன்றைய அமைச்சரவையின் தீர்மானம் ஆகும்.
வெவ்வேறு அரச நிறுவனங்களின் கீழ் இருக்கின்ற இந் நாட்டின் காணிகளில் 82மூ அளவான பூமியை முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளும் போது பொதுவான ஒற்றைப் பணி நடைமுறை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தவிர்க்கும் நோக்கிலும், முதலீட்டாளர்களிற்காக விடுவிக்கக் கூடிய காணிகளை முடிந்தளவு விரைவாக அடையாளம் கண்டு அந்த காணிகளை முதலீட்டாளர்களிற்கு விடுவிக்கும் பணி நடைமுறையினை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான காணிகள் முகாமைத்துவ நிதியம் ஒன்றை உருவாக்குதல் 2024 மார்ச் 04 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவையின் தீர்மானம் ஆகும்.
உறுமய (உரிமை) நிகழ்ச்சி திட்டம்
தற்போது உரிம பத்திரம் மற்றும் கொடுப்பனவு பத்திரத்தின் அடிப்படையில் மக்களிற்கு வழங்கப்பட்டிருக்கும் 20 இலட்சம் காணிகளை விற்பனை செய்ய கூடிய வகையில் காணி உறுதிகளை வழங்கும் அரசாங்கத்தின் “உறுமய (உறுமய)” நிகழ்ச்சித் திட்டமும் செயற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அரச பொறுப்பில் இருக்கும் காணிகளை தனியார் முதலீட்டாளர்களிற்கு வழங்குவதற்காக மேற் குறிப்பிட்ட இந்த தீர்மானம் எடுக்கப் பட்டிருக்கிறது. இந் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக மிக தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பு மாற்றத்திற்கான படிமுறைகள் என்பது காணி உரிமைகள் தொடர்பான மக்கள் கூட்டமைப்பின் கருத்தாகும்.
இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகள் அனைத்தும் தற்போது சிறு அளவிலான விவசாயத்திற்கு பயன்படுத்தப் படுகின்ற அல்லது பயன்படுத்தக் கூடிய இடங்கள் ஆகும். அரசாங்கம் மக்களால் விற்கக் கூடிய வகையில் காணி உறுதிகளை வழங்குவது மக்கள் அந்த காணிகளில் பயனுள்ள வகையில் அனுபவிக்க தேவையான கட்டமைப்பு காரணிகள் அனைத்தையும் இல்லாமல் செய்யும் திட்டமிடப் பட்ட நடவடிக்கை என்பதே எமது அவதானிப்பு ஆகும்.
விவசாயிகளை பாரியளவில் சுரண்டும் இடைத் தரகு வியாபாரங்களிற்கு இடமளித்து சந்தையில் இருந்து அரசாங்கம் விலகி இருப்பதுடன் அதன் இடைத் தரகு வியாபாரிகளிற்கு அரசாங்கம் கடன் உதவி உட்பட பாரியளவு சலுகைகளை வழங்குகின்றது. உர மானியம், விவசாய விரிவாக்க சேவை, விவசாயக் காப்பீடு உட்பட விவசாயிகளிற்கு உரிய அனைத்து மானியங்கள் மற்றும் உதவி சேவைகள் குறைக்கப் பட்டுள்ளன. அரச வங்கிகளின் ஊடாக கடன் பெறுவதற்கான வழிகள் துண்டிக்கப் பட்டுள்ளதுடன் மக்களை சுரண்டும் கடன் வழங்கும் நிறுவனங்களிற்கு தேவையான கட்டமைப்பான பாதுகாப்பு வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. பொது வளமான விளை நிலத்திற்கு தேவையான நீரிற்கு கூட தனியார் மயப்படுத்தப் படும் படிமுறைகள் உருவாக்கப் பட்டுக் கெண்டிருக்கின்றன. இவ்வாறான அனைத்து நிலமைகளிற்குள் அந்த காணிக்கு உறுதியின் மூலம் உரிமை வழங்குதல் அந்த காணியை பெறும் மக்கள் அந்த காணியை விற்று காசாக்கி கொள்வதே எஞ்சியிருக்கும் ஒரே ஒரு வழியாகும்.
இந்த நிலமையில்; வியாபாரிகளினால் அவர்களது பண பலத்தை பாவித்து அந்த காணிகள் அனைத்தையும் வாங்க முடிவதுடன் அரசாங்கத்தினால் இன்னுமொரு முறை இதன் ஊடாக இந்த காணிகளை தனியார் வியாபாரிகளிற்கு விடுவிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெறும். அதனால் “உரிமை (உறுமய)” என்பது மக்களிற்கு கறுமமாக மாறுவதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட மோசடி உபாய வழி அன்றி வேறெதுவும் இல்லை என்பதே எமது அனுமானம்.
வன பாதுகாப்பு கட்டளைச் சட்ட திருத்தம்
இதற்கிடையில் தற்போது பல்வேறு விதத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் 65 ஆம் இலக்க சட்டத்தின் இறுதியாக திருத்தப் பட்ட 1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 20 ஆவது பிரிவு ஊடாக அரசாங்கத்திற்கு சொந்தமான வேறு காடுகளாக பாதுகாக்கப் பட்டு வந்த எதிர்காலத்தில் பாதுகாக்கப் பட்ட காடுகளாக பிரகடனப் படுத்தப் பட உள்ள காடுகள் பெருமளவானவை வணிக பாவனைக்கு பயன் படுத்தும் நோக்கி;ல் அச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கௌ;ளப் படுகின்றன. தற்போது அறிந்து கொள்ளப்பட்ட விடயங்களிற்கு அமைய அதற்கான திருத்த சட்ட வரைவு தற்போது சட்ட மூலமாக்கப் பட்டிருக்கிறது. அதன் கீழ் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 20 ஆவது பிரிவின் பின்னர் 20 (அ) என்று புதிய பிரிவைச் சேர்த்து பல்முகாமைத்துவ காடுகளாக, அரசாங்கத்திற்கு உரிய ஏனைய காடுகளை வெளிப் படுத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய திருத்தத்திற்கு அமைய பல்முகாமைத்துவ காட்டிற்குள் புதுப்பிக்க தக்க மின் உற்பத்தி, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட உல்லாசப் பயண திட்டத்தை செயற்படுத்தல் மற்றும் இனங் காணப் பட்ட வேறு நடவடிக்கைகள் ஊடாக பொருளாதார பிரதி லாபங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசு அல்லாத துறைகளை பலப் படுத்தி முகாமைத்துவப் படுத்துவதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிற்கு அதிகாரம் வழங்கும் நடை முறையை அறிமுகப் படுத்த முன் மொழியப் பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான வேறு காடுகள் என தற்போது உள்ள இவ்வாறு வெவ்வேறு வியாபாரங்களிற்கு வழங்க சட்ட திருத்தம் மேற் கொள்ளப்படும் இந்த நிலங்களில் பெரும்பாலானவை தற்போது உள்ள பாதுகாக்கப் பட்ட காடுகளிற்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துகின்ற குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர் பிடிப்புகளாக இயங்குகின்ற, அழிவடையும் அபாயத்திற்கு மிகக் கடுமையாக முகம் கொடுத்து இருக்கும் மிக அரிதான மற்றும் எமக்கே உரிய உயிரன வகைகள் பலவற்றிற்கு இருப்பிடத்தை வழங்கும், யானைகளின் பிரதான இருப்பிடம் மற்றும் யானைகளின் கடவைகளாக செயற் படுகின்ற விசேட சுற்றுச் சூழல் அமைப்பாகும். தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான ஏனைய காடுகள் என வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 20 ஆவது பிரிவின் கீழ் நிருவகிக்கப் படுகின்ற காடுகளின் நில அளவு 345,811 ஹெக்டயார் எனும் 854,155 ஏக்கர் அளவில் இருப்பதுடன் அது இந் நாட்டின் எஞ்சி இருக்கும் காடுகளின் அளவில் 18மூ ஆகும். அரசாங்கத்தின் புதிய சட்ட திருத்தத்தினால் இந்த அதி சிறந்த சுற்றுச் சூழல் தன்மை மிக்க நிலப் பரப்பை முதலீட்டாளர்களிற்கு வழங்க தயார் ஆவது பாரிய உயிரியல் - சுற்றுச் சூழல் மற்றும் மனித அழிவை ஏற்படுத்தும்.
அபாயம் என்ன?
மேற் குறிப்பிடப் பட்ட அமைச்சரவை தீர்மானம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தில் மேற் கொள்ள தயாராக இருக்கின்ற திருத்தங்களின் ஊடாக நேரடியாகவும், “உரிமை (உறுமய)” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மறைமுகமாகவும் செயற்படும் அரச கட்டுப்பாட்டில் உள்ள இந் நாட்டின் காணிகளை ஏற்றுமதியினை இலக்காகக் கொண்ட பாரிய முதலீட்டாளர்களிற்கு வழங்குவதனால் ஏற்படக் கூடிய விளைவு என்ன? இவ்வாறு தனியார் நிறுவனங்களினால் மேற் கொள்ளப் படுகின்ற பாரியளவிலான விவசாயம், சுற்றாடல் ரீதியில் நிரந்தரமற்ற உல்லாச பயண திட்டங்கள் மற்றும் பல்வேறு முதலீடுகளிற்காக காணிகளை வழங்குவது இந் நாட்டிற்குள் புதிய நடைமுறை அல்ல. 1977 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சுதந்திரமாக்கிய நாள் முதல் இந் நாட்டில் இருந்த அரசாங்கங்களினால், தற்போதய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடப் படுகின்ற முதலீட்டு நோக்கத்திற்காக இந் நாட்டின் பாரிய வளங்களான காணிகள்; வெவ்வேறு கம்பனிகளிற்கு வழங்கப் பட்டுள்ளன. உண்மையில் 1980 களின் முற் பகுதியில் அது இந் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால செழிப்பிற்கான நுளைவாயில் என் வர்ணிக்கப் பட்டது. அந்த செயல் முறைகளை நியாயப் படுத்துவதற்கு காணி எனும் வளம் செயல் திறனான வகையில் பிரதிலாபம் பெறும் வகையில் மூலதன முதலீட்டினை மேற் கொள்ள இந் நாட்டின் அரசாங்கத்திற்கு திறன் இல்லாத காரணத்தால் பாரிய அளவில் காணி அலகுகளிற்குள் தனியார் முதலீட்டாளர்களை கவர்ந்து அவர்களது மூலதன முதலீடுகளிற்கு இடம் வழங்க வேண்டும் என்பது இந்த நடைமுறையை நியாயப் படுத்த முன் வைக்கப் பட்ட வாதமாக இருந்தது. மறுபுறம் அரச வியாபார முகாமைத்துவம் தொடர்பாக இந் நாட்டின் அரசாங்கம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தமையினால் அதை மிக வெற்றிகரமாக செயற்படுத்தக் கூடிய தனியார் துறைக்கு வழங்குதல் மிக பொருத்தமானதாகும் என்பதாகும். மூன்றாவது காரணம் இந்த முதலீடுகளை காரணமாக வைத்து இந் நாட்டு மக்களிற்கு தொழில் வாய்ப்பை உருவாகும் என்பதாகும். இன்றும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் புதுமையான யோசனைகளாக எம் முன்னே வைப்பது இற்றைக்கு 40 வருடங்களிற்கு முன் இருந்து கூறிக் கொண்டிருக்கும் இந்த வாதங்களை தவிர வேறு எதுவும் இல்லை.
எங்களிற்கு கிடைத்தது என்ன?
அன்று அதன் வாதத்தின் படி முதலீட்டாளர்களிற்கு வழங்கிய காணிகளில் இருந்து கிடைத்த பிரதி லாபங்களை பார்த்தால் நம்மால் எதைப் பார்க்க முடியும்? கடந்த நான்கு தசாப்தங்களிற்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இந் நாட்டின் காணிகள் இலட்ச கணக்கில் தனியார் முதலீட்டாளர்களிற்கு வழங்கப் பட்டுள்ளது. தேயிலை, கரும்பு, சோளம், புகையிலை, வாழை, மா போன்ற பாரியளவு தனி பயிர் செய்கைக்கு வழங்கப் பட்ட எந்த ஒரு இடமும் பொருளாதார ரீதியில் தற்போது செயற் திறனாக இல்லை. இத் திட்டங்களினால் இந் நாட்டில் ஏற்பட்ட மட்டுப் படுத்தப் பட்ட பிரதிலாபங்களை விட நீண்ட காலமாக இந் நாட்டு மக்களிற்கு மற்றும் சுற்றுச் சூழலிற்கு மிகப் பெரிய அழிவுகளிற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெளிப் புற உள்ளீடுகளை பெருமளவில் பாவித்து மிக குறுகிய காலத்திற்குள் நிலத்தின் முழு செழிப்பும் அழிவடையும் விவசாய முறைகளை பின் பற்றி உச்ச இலாபம் பெற்று தரிசு நிலமாக அவற்றை கைவிட்டு சென்றுள்ளனர். இப் பிரதேச நில கீழ் நீர் வளம் பெருமளவில் அழிவடைந்து உள்ளது. நிலையற்ற தீங்கு விளைவிக்கும் சுற்றுச் சூழல் பாவனை காரணமாக அந்த நிலத்தில் வாழும் மக்களிற்கு நாள் பட்ட சிறுநீரக நோய்;கள் உட்டப நீண்ட கால நோய்கள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த விவசாயத்தின் ஊடாக இடம் பெற்ற பாரிய சுற்றுச் சூழல் அழிவு காரணமாக சுற்றாடல் கட்டமைப்புகளில் நீண்ட கால மீண்டும் சரி செய்ய முடியாத தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முடிவற்ற யானை - மனித பிரச்சனை உருவாக்கப் பட்டதும், நாளிற்கு நாள் அது தீவிரம் அடைந்ததும் இந்த மோசமான தீர்மானங்களினால் ஆகும். இந்த பெரும்பாலான விளைவுகளினால் காணி என்னும் வளம் எதிர்கால சந்ததியினரிற்கு கிடைக்க இருந்த பிரதிலாபங்களை முற்று முழுதாக இல்லாமல் செய்திருகிறது.
மக்களிற்கு கிடைக்கும் என சபதம் செய்யப்பட்ட பொருளாதார பிரதிலாபங்கள் தொடர்பாக இன்று நாம்; காண்பது எவ்வாறான ஜதார்த்தத்தினை? எந்த ஒரு முதலீட்டினாலோ அல்லது நிகழ்ந்த ஒரு பகுதியின்; வறுமை ஒரு தசமத்தினாலோ குறைவடையவில்லை. மக்கள் முன்பு இருந்ததை விட வறுமை, கடன் சுமைக்குள் விழுந்திருக்கிறார்கள். அவர்கள் தமக்கு நிரந்தரமாக கிடைக்க இருந்த காணிகளை தனியார் முதலீட்டாளர்களிற்கு வழங்கி ஏழைகளாக, கடனாளியாக, நோயால் பாதிக்கப் பட்டு, காட்டு யானை தாக்குதல்களிற்கு உள்ளாகி, குடிக்க ஒரு துளி தூய நீர் கூட இன்றி பரிதாபமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இது இலங்கைக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. அன்று இன் நாட்டு ஆட்சியாளர்கள் என கூறிய (தற்போதய அரசாங்கத்தையும் வர்ணணை செய்து முன் வைக்கப் படுகின்ற) வாதத்தினால் தமது பூமியின் நிலங்களை பாரியளவில் ஒற்றை பயிர் செய்கை கம்பனிகளிற்கு பலியாகிய ஆசிய, இலத்தீன் அமெரிக்க மற்றும் அூபிரிக்க நாடுகளில் இந்த சோகமான யதார்த்தம் இவ்வாறு இடம் பெறுகின்றது. உண்மையில் அரசாங்கத்தினால் காணிகள் தொடர்பில் முன் வைக்கப் பட்டுள்ள பொருளாதார ரீதியிலான வாதங்கள் எதுவும் புதியவை அல்ல. அவை உலகில் நீண்ட காலமாக நடைமுறைப் படுத்தப் பட்டு தோல்வி அடைந்துள்ளன.
காணிகள் இழக்கப் படுவதன் மூலம் ஏற்படுத்தப் பட்ட சமூக குழப்பங்களின் வரலாறு
அரசாங்கம் முன் வைக்கும் நான்காவது வாதமான தொழில் வாய்பினை உருவாக்குதல் என்பது தொடர்பாகவும் இதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. இன் நாட்டின் விவசாய குடியேற்ற திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து முன் வைக்கப் பட்ட வாதமாக இருந்தது இந் நாட்டு மக்களிற்கு தொழில் வாய்ப்பினை உருவாக்க அரசாங்கங்களின் தோல்வி நிலையை விவசாயத்தின் மேல் போட்டு விட்டு விடுபடும் முயற்சியாகும். கைத்தொழில் மயமாக்கலிற்கு நாட்டை கொண்டு செல்வது ஒரு புறம் இருக்க விவசாயத்திற்குளேயே பெறுமதி சேர்க்கும் உற்பத்தி நடை முறைகளை அறிமுகம் செய்யாமல் அடிப்படை விவசாய முறைகளிற்குள் இந் நாட்டின் தொழிலாளர்கள் தொடர்ந்து பணி புரிய வேண்டியிருப்பது தொடர்ச்சியாக இடம் பெறுகின்றது. இன் நாட்டின் தொழிலாளர்கள் தரத்தில் வளர்சியடையாமை மட்டும் அன்றி அவர்களிற்கு பொருளாதார ரீதியில் நிலையான வாழ்வாதாரமும் இந்த நடைமுறையினால் இழக்கப்; பட்டிருக்கிறது. தற்போது முன் வைக்கப் படும் இந்த யோசனை அதை மேலும் முன்னெடுத்துச் செல்லும். அதனால் காணிகளை இழக்கும்; மக்கள் கூலித் தொழிலாளர்களாக ஆக்கப் படுவதுடன் பாரிய அளவிலான விவசாய மற்றும் கால் நடை முதலீட்டாளர்களின் கூலித் தொழிலாளிகள் ஆகிய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ந்துள்ள நிலமை மிகவும் பரிதாபகரமானது. மறுபுறம் காணிகளை இழந்து கிராம புறங்களில் இருந்து வெளியேறி நகரப் புற கூலி சந்தைக்கு இடம் பெயர்ந்தவர்கள்; இன்று மிக கடினமான மற்றும் துரதிஸ்டவசமான வாழ்கையை வாழ்வதுடன் அவர்களிற்காக வேலை வாய்பை உருவாக்க எமது அரசாங்கம் தவறி விட்டதுடன் மிக பாதகமான கூலி நிபந்தனைகளால் அவர்களை சுரண்டி இருக்கின்ற வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றன.
இந் நிலமையினால் காணிகள் அற்ற பரம்பரை உருவாகுவதுடன் அந்த மக்களிற்கு கௌரவமான மாற்றீட்டை உருவாக்கக் கூடிய பொருளாதாரம் இல்லாத நிலையில் அதன் நெருக்கடி சமூக – பொருளாதார நெருக்கடியாக உருவாகும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் இந் நாட்டிற்குள் உருவாகிய அனைத்து கலவரம் ஃ மக்கள் எழுச்சி நிலமைகளிற்குள் காணி உரிமை எனும் காரணம் தீர்மானம் மிக்க பங்கை வகிக்கும். 1848 ஆம் ஆண்டு கலவரத்தின் அடிப்படை ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தோட்ட செய்கைக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்;ட காணிகளை அரசாங்கத்திற்கு சொந்தமாக்கும் சட்டம் காரணமாக காணிகளை இழந்த உள்நாட்டவர்களின் வேதனை மற்றும் எதிர்ப்பு இடம் பெற்றது என்பது இன்றைக்கும் விவாதத்திற்கு அப்பாற் பட்டது. 1971 இலும் 1987 – 89 இல் தெற்கில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின் அடிப்படையில் காணிகளை இழந்த மக்களின் வேதனை இருந்தது என்று அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஏற்படுத்தப் பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையில் மிக தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. முப்பது ஆண்டுகள்; யுத்தம் வரை நீண்ட வடக்கின் போராட்டத்தின் பின்னணியில் காணிகள் இழப்பு மற்றும் காணி உரிமைகளில் பிரச்சனைகள் இருந்தன என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஊடாக காணிகள் அற்ற பரம்பரையை புதிதாக உருவாக்கி கொண்டிருப்பது இத் துயர வரலாறுகள் பற்றிய எந்தவித கரிசனையும் இல்லாமல்.
இது மனித மற்றும் உயிரியல் சமூகத்தின் பிறந்த மற்றும் இன்னும் பிறக்காத அனைத்து எதிர்கால சந்ததியினரிற்கும் இழைக்கும் துரோகம் ஆகும்.
அதே போல சுதந்திரத்தின் பின்னர் கடந்து போன நான்கு தசாப்பதங்களிற்கும் அதிகமான காலத்திற்குள் இலங்கை முகம் கொடுத்த அரசியல் பிரச்சனைகள் பெரும்பாலானவற்றிற்கு மக்களின் காணி உரிமை தொடர்பான காரணங்கள் அடிப்படையாக அமைந்தன என்பது வெளிப்படையானது. இந்த திட்டமிடல் காரணமாக இலட்ச கணக்கான மக்கள் காணிகளை இழந்து அனாதைகள் ஆக்குதல் மீண்டும் அழிவுகரமான சமூக - அரசியல் பிரச்சனைகளிற்கு அடிப்படையாக அமையும்.
மிக அபாயகரமான காரணமாக அமைவது ஜாதிபதி அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தினால் அவர்களது சொந்த சொத்தைப் போல பாவித்து அழிப்பது இந் நாட்டின் பெறுமதி மிக்க வளமான காணிகளை ஆகும். உண்மையில் இந்தக் காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவைகள் அல்ல. அவை இந்த பூமியில் வாழும் அனைத்து மனித மற்றும் பல் உயிர்களிற்கும் மட்டும் அல்லாமல் அவர்களது எதிர்கால பரம்பரைக்கும் பொதுவான வளம் ஆகும். இந்த பூமியில் வாழும் மக்கள் மற்றும் பல் உயிர்க் கட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களின் மற்றும் அவர்களது எதிர்கால பரம்பரையின் நன்மைக்காக உரிய முறையில் அந்த வளங்களை முகாமைத்தும் செய்தல் அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும். அது இந் நாட்டின் காணி தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட காணி ஆணையகத்தினாலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப் பட்ட எதிர்கால சந்ததியின் உரிமைகள் உட்பட மனித உரிமைகள் விதி முறைகள் உள்ளடங்கிய மரபுகள் மூலமும் எப்பாவல போஸ்பேட் வழக்கு உட்பட தீர்மானம் மிக்க வழக்குகள் பலவற்றில் இந் நாட்டின் மேல் நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையும் இதுவாகும்.
ஆனால் ஜனாதிபதி தலைமையிலான தற்போதய அரசாங்கத்தினால் காணி தொடர்பாக மேற் கொள்ளப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொள்கை நடைமுறையினால் காணி எனும் பொது வளம் நிரந்தமாக இந்த பூமியில் வாழ்பவர்களின் மற்றும் எதிர்கால சந்ததியின் நன்மைக்காக பயன்படுத்துவது தொடர்பாக பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது எமது கருத்து. மறுபுறம் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாமை அரசாங்கத்தின் தோல்வி ஆகும். அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் தனியார் நிறுவனங்களிற்கு வழங்குவது தீர்வாகாது. இந் நாட்டு மக்களின் பொது வளமான காணியை தமது குறுகிய, தூர நோக்கற்ற மற்றும் இயலாமையை மறைப்பதற்காகவும், தமது நண்பர்களின் இலாபத்திற்காகவும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நிதி ஆதாயங்களிற்காகவும் பலியிடலே இது தொடர்பான நடவடிக்கைகள் ஊடாக இடம் பெறுகிறது. இந்த நடைமுறைகளை நியாயப் படுத்துவதற்காக கொண்டு வரப்படும் வாதங்கள் புதிதானவைகள் அல்ல. அவை இந்த நாட்டிலும் உலகின் பல இடங்களில் பல தசாப்தங்களாக நடைமுறைப் படுத்தப் பட்டு தோல்வியடைந்தவைகள். அதனால் இந்த காலம் கடந்த தோல்வியுற்ற உபாயங்களை சுருட்டிக் கொள்ளுமாறும், அதன் மூலம் இந் நாட்டு மக்களிற்கும் - சுற்றுச் சூழலிற்கும் ஏற்படும் மீண்டும் சரி செய்ய முடியாத அழிவிற்கு வழியமைப்பதை தடுக்குமாறும் காணிகள் தொடர்பான மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. இந்த பூமியில் மனித மற்றும் விலங்குகளின் சந்ததியின் எதிர்கால இருப்பிற்காக இந்தளவு தீர்மானம் மிக்க தீங்கு விளைவிக்கும் தீர்மானம் எடுப்பதை தவிர்க்குமாறும், எதிர்கால சந்ததிக்கு உரிய இந்த வளங்களை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம். இறுதியாக உங்களது இயலாமைக்கும் தோல்விக்கும் இந்த பூமியில் மக்களை அல்லது எதிர்கால சந்ததியினரை தொடர்ந்தும் விலை கொடுக்க கூடாது என்று நாம் அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகின்றோம். மக்கள் ஆணை கூட இல்லாத ஆட்சியாளர்களிற்கு அவ்வாறு செய்ய முடியும் என நினைப்பது கடுமையான சமூக விரோத செயலாவதுடன் அவ்வாறான ஒன்றிற்கு இடமளிக்காமை இந் நாட்டின் அனைத்து முற்போக்கு மக்களினதும் பொறுப்பாகும்.