
குருந்துமலை சமூகத்துடன் PARL கலந்துரையாடல்
Published
கிராம மக்கள் எமக்கு வழங்கிய தகவல்களின் படி, யுத்தம் காரணமாக குருந்துமலையில் இருந்த, கிட்டத்தட்ட 134 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு முல்லைத்தீவில் உள்ள வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர். (1984 கிளர்ச்சியின் போது அவர்களின் கிராமம் மற்றும் வீடுகள் இராணுவத்தால் முற்றாக எரிக்கப்பட்டன). கிராமத்தை விட்டு வெளியேறினாலும், அவர்கள் 2018 வரை குருந்துமலையில் விவசாயம், மீன்பிடி, வேட்டை மற்றும் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த கிராம மக்கள் குருந்துமலையில் உள்ள அவர்களின் நிலங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வைத்திருந்தனர். ஆனால், போர் மற்றும் கலவரத்தின் போது பலர் இந்த ஆவணங்களை இழக்க நேரிட்டது. இருப்பினும், வாக்காளர் பதிவு தாள்கள், தேசிய அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் போன்ற பிற இருப்பிடச் சான்றுகள் அவர்களிடம் இன்றும் உள்ளன.
2018 ஆம் ஆண்டில், ஒரு பௌத்த பிக்கு இந்த கிராமத்திற்கு விஜயம் செய்த அதே நேரத்தில் தொல்பொருள் திணைக்களமும் கிராமத்தில் நில அளவையைத் தொடங்கியுள்ளது. கிராமவாசிகளின் கூற்றுப்படி, அந்த பிக்கு, அங்கிருந்த கிராம மக்கள், பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த ஒரு சிறிய இந்து வழிபாட்டுத் தலத்தை (திரிசூலம் ) அகற்றிவிட்டு அவ்விடத்தில் ஒரு பெளத்த ஆலயத்தைக் கட்டியுள்ளார்.
கோவிட்-19 முடக்கத்தின் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்ததுள்ளதென கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக, 2021ல் தொல்லியல் திணைக்களத்தினால், அகழாய்வு பணி ரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், தற்போது, கிராம மக்கள், இப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் துறைக்கு உரித்தான வளாகத்தில் "அத்துமீறி நுழைந்ததற்காக" கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த பிரச்சினையை PARL தொடர்ந்து நோக்குகிறது.