
ஸ்ரீலங்காவில், கொழும்பில், “தெற்கு ஆசிய நகரங்களில் ஈக்விட்டியை ஒருங்கிணைத்தல் மற்றும் நகர்ப்புறங்களை இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கொண்டு சீரமைத்தல்” பற்றி நடக்கவிருக்கும் கொள்கை ஆய்வகம்.
Published
ஆகஸ்ட் 04, 2023, கொழும்பு – தெற்கு ஆசிய நகரங்களில் ஈக்விட்டியை ஒருங்கிணைத்து தனித்தன்மையான சவால்களை எதிர்கொள்கிற இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கான தேவை ஸ்ரீலங்காவில், கொழும்புவில், ஆகஸ்ட் 22-23 அன்று 2023 ல் நடக்கவிருக்கிற இரண்டு நாள் கொள்கை ஆய்வத்தின் மைய விஷயமாக இருக்கும். ஸ்டாக்ஹோம் என்விரான்மெண்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்ட்ராட்டஜிக் கொலாப்ரேட்டிவ் நிதியின் உதவியால் இந்த நிகழ்ச்சி வளர்ந்து வருகிற நகர்ப்புற பகுதிகளில் கவனம் செலுத்தி மண்டலத்தின் சமூக, அரசியல். மற்றும் பொருளாதார விஷயங்களுக்குள் இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கொண்டு சீரமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
“தெற்கு ஆசிய நகரங்களில் ஈக்விட்டியை ஒருங்கிணைத்தல் மற்றும் நகர்ப்புறங்களை இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கொண்டு சீரமைத்தல்” என தலைப்பிடப்பட்டுள்ள கொள்கை ஆய்வகம் துறையின் அறிவுசார் கூட்டாளிகள், கொள்கை வகுப்பவர்கள், அறிவுரை கூறுகிற நிபுணர்கள், சிவில் சொசைட்டி அமைப்புகள் (சிஎஸ்ஓ க்கள்), பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா உட்பட வெவ்வேறு தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து தனியார் துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான பங்கேற்பாளர்களை ஒன்று சேர்க்கும். நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் தீவிரமான கலந்துரையாடல்களில் மற்றும் தற்போதைய இயற்கை சார்ந்த தீர்வுகளின் சீரமைப்பில் முக்கியமான பகுப்பாய்வில் ஈடுபடுவார்கள், இது பலன் தருகிற யோசனைகளை, மாறுபட்ட எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதில், கடுமையான விவாதங்களில் ஈடுபடுவதற்கு உதவும். இதன் முக்கியமான குறிக்கோள் தெற்கு ஆசியாவில் சமூகரீதியாக, சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை தருகிற புதிய சீரமைப்பை உருவாக்குவதாகும்.
இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் வளர்ச்சி, சீதோஷ்ணநிலை, மற்றும் பல்லுயிர் தன்மை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இதன் ஆற்றல் பற்றி உலக அளவில் வளர்ந்து வருகிற கவனத்தை இந்த ஆராய்ச்சி ஹைலைட் செய்கிறது. இந்த மண்டலத்தில் விரைவாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் அடுத்த 15 வருடங்களுக்குள் தோராயமாக 250 மில்லியன் மக்கள் தொகை வளர்ச்சி திட்டமிடப்பட்டுள்ள போதிலும், தெற்கு ஆசிய நகரங்கள் இயற்கை சார்ந்த தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கு இன்னும் முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது. கொள்கை ஆய்வகம் தெற்கு ஆசிய நகரங்களில் இயற்கை சார்ந்த தீர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் சமூக நீதி, குறைந்த அளவில் கார்பன் வெளியிடுதல், மற்றும் சீதோஷ்ணநிலை மாற்றங்களிலிருந்து விடுபடுவது உறுதிப்படுத்தப்படுகிறது.
மண்டலத்திலுள்ள பார்ட்னர்களுடன் துவக்க ஆலோசனைகள் இயற்கை சார்ந்த தீர்வுகளின் திட்டப்பணிகளின் பங்குதாரர்களின் ஈடுபடும் ப்ராசஸ்கள் குறைவாக உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன, திட்டப்பணிகளைக் கண்காணிக்கிற போது மற்றும் மதிப்பீடு செய்கிற நிலைகளின் போது மட்டும் சமுதாய ஈடுபாடு நிகழ்கிறது. இயற்கை சார்ந்த தீர்வுகளின் திட்டப்பணிகள் வெற்றிகரமாக உள்ளன மற்றும் உள்ளடக்கி உள்ளன என்பதை உறுதி செய்வதன் பொருட்டு, பாதுகாப்பான இடங்களை உருவாக்குவது மற்றும் சேர்ந்து கற்றுக் கொள்கிற கலாச்சாரத்தை ஊக்குவிப்பது முக்கியமாக உள்ளது. அது போன்ற திட்டப்பணிகளிலிருந்து ஒதுக்கப்பட்ட சமுதாயங்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களைச் சேர்க்காமலிருப்பது ஏற்கனவேயுள்ள சமுத்துவமின்மையை இன்னும் மோசமாக்கக் கூடும். அதனால், இந்தப் பிரச்சினைகளைக் கவனிப்பது முக்கியம். மேலதிகமாக, செயல்திறனுள்ள இயற்கை சார்ந்த தீர்வுகளைத் திட்டமிடுவது நகர்ப்புற உள்நாட்டு அமைப்புகள் மற்றும் நாடளவிலான அமைப்புகளை உள்ளடக்கிய பார்ட்னர்ஷிப்களுக்கான மற்றும் புதுமையான கொள்கைகளுக்கான தேவையை ஏற்படுத்துகிறது.