கனிம மணல் அகழ்வு: சுற்றாடல் நெருக்கடியும் யதார்த்தமும் | PARL | PARL
இந்நாட்டின் கனிம மணல் அகழ்வு> சுற்றாடல் நெருக்கடி மற்றும் யதார்த்தம்
Published
இலங்கையின் கடலோரப் பகுதிகளைச் சார்ந்த கனிம வளங்கள் தொடர்பாக நாட்டில் புதியதொரு கலந்துரையாடல் உருவாகியுள்ளது. இல்மனைட்> ரூட்டைல்> சிர்கோன்> கர்னட் மற்றும் மொனசைட் போன்ற கனிமங்கள் அடங்கிய மணல்> கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக்கான பொருளாதாரப் பெறுமதிமிக்க வளமாக இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும்> இவ்வளங்களைப் பெற்றுக் கொள்ளும் போது சூழல்> நிலத்தடி நீர்> மீன்பிடித் தொழில்> சுற்றுலாத் துறை மற்றும் கடலோர மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் பாதிப்பே பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாட்டின் வடக்கு> கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வாழும் சமூக மற்றும் சுற்றாடல் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தப்பட்ட வேலைத்திட்டமொன்றில் வளவாளராகக் கலந்துகொண்ட சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாமிகர அவர்கள்> கனிம மணல் அகழ்வின் பொருளாதார நன்மைகள் மட்டுமன்றி> அதில் மறைந்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். அங்கு அவரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கள அவதானிப்புகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
1. கனிம மணல் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
இலங்கையின் வடமேற்கு> வடக்கு> கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காணப்படும் கனிம மணல் என்பது> மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற இயற்கையான புவியியல் செயன்முறையின் பிரதிபலனாகும். அதாவது> மத்திய மலைநாட்டிலும் நாட்டின் ஏனைய உயர் நிலங்களிலும் உள்ள பாறைகள் மழை> வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய காலநிலை தாக்கங்கள் காரணமாக படிப்படியாக உடைந்து> அப்பாறைகளில் அடங்கியுள்ள கனிமப் பகுதிகள் ஓடைகள் மற்றும் ஆறுகள் ஊடாகக் கீழ்நோக்கி நகர்ந்து இறுதியில் கடலை அடைகின்றன.
கடலை அடைந்த பின்னர் அம்மணல் மற்றும் கனிமப் பகுதிகள்> கடல் அலைகள்> நீரோட்டங்கள் மற்றும் கடலோர வண்டல் இயக்கங்கள் மூலம் மீண்டும் கரையை நோக்கி கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக இலங்கையைச் சுற்றியுள்ள ஆழமற்ற கண்டத்திட்டு காரணமாக> இவை கரையை சார்ந்த சமுத்திர பிராந்தியத்திலேயே படிந்து காணப்பட்டு> பின்னர் கரையை நோக்கி அடித்து வரப்படுகின்றன. சாதாரண குவாட்ஸ் மணலுடன் ஒப்பிடும்போது இல்மனைட்> ரூட்டைல்> சிர்கோன்> கர்னட் மற்றும் மொனசைட் போன்ற கனிமங்களின் அடர்த்தி அதிகம் என்பதால்> லேசான மணல் பகுதிகள் காற்று மற்றும் அலைகளால் அகற்றப்படும்போது> அதிக எடையுள்ள கனிமப் பகுதிகளும் மணலும் கடற்கரையில் சிறப்பு அடுக்குகளாகப் படிகின்றன. இச்செயன்முறை கனிமங்களைக் கடற்கரையில் படிய வைப்பது மட்டுமன்றி> அந்த கனமான கனிம அடுக்குகள் கடற்கரையின் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கின்றன.
2. இலங்கையின் பிரதான கனிம மணல் பிரதேசங்களும் தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களும்
இலங்கையின் கனிம மணல் படிவுகளின் பரவலைப் பார்க்கும்போது> அவை நாட்டைச் சுற்றியுள்ள மிகவும் மென்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள்> களப்புகள்> நன்னீர் மூலங்கள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் எவ்வளவு தூரம் பிணைந்துள்ளன என்பது தெளிவாகிறது. நாட்டின் பிரதான கனிம மணல் படிவுகள் கிழக்கு> தென்கிழக்கு> வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடற்கரைகளில் பரவியுள்ள விதத்தை வரைபடம் மூலம் தெளிவாகக் காணலாம்.
இலங்கையின் கனிம மணல் படிவுகளின் பரவல். Source: ResearchGate
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரைபடம் சித்தரிப்பது போல> நாட்டின் பிரதான நதி அமைப்புகள் மூலம் சமுத்திரத்திற்குக் கொண்டு வரப்பட்ட கனமான கனிமப் பகுதிகள்> பல கடலோர வலயங்களில் முதன்மையாகப் படிந்துள்ளன. அப்பிராந்தியப் பரவல்> தற்போது திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் சுற்றாடல் தாக்கங்களை 3 பகுதிகளின் கீழ் பின்வருமாறு ஆராயலாம்;
(அ) கிழக்கு> தென்கிழக்கு மற்றும் தெற்கு கடலோர வலயம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் வீரகுல் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை> அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில்> அக்கரைப்பற்று> திருக்கோவில்> கோமாரி> பொத்துவில் மற்றும் பாணமை வழியாக குமண> கிரிந்த மற்றும் அம்பாந்தோட்டை வரை பரந்துள்ள கடற்கரைப்பகுதி மிகவும் மென்மையானதும் பெறுமதிமிக்கதுமான கனிம மணல் படிவுகளைக் கொண்ட ஒரு வலயமாகும். இச்சுற்றுச்சூழல் அமைப்புகளின் உருவாக்கத்திற்குப் பின்னால் மில்லியன் கணக்கான ஆண்டுகால இயற்கையான புவியியல் செயன்முறையொன்று உள்ளது. மத்திய மலைநாட்டில் ஆரம்பமாகும் ஹெட ஓயா> கும்புகன் ஓயா> மெனிக் கங்கை மற்றும் கிரிந்தி ஓயா போன்ற பிரதான நதிகள் மூலம் கீழ்நோக்கிக் கொண்டுவரப்பட்ட வண்டல் மற்றும் கனமான கனிமப் பகுதிகள்> கடல் அலைகள் மற்றும் நீரோட்டங்கள் மூலம் கடற்கரையில் படிவடைவதன் மூலமே இச்சிறப்பான சுற்றுச்சூழல் அமைப்புகள் உருவாகியுள்ளன.
அதற்கமைய> தற்போது இப்பகுதிகளில் பரவியுள்ள கனிமங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்> பாரிய அளவிலான கனிமப் பிரித்தெடுப்புத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய> பிரித்தானிய முதலீட்டு நிறுவனமான கெப்பிட்டல் மெட்டல்ஸ் (Taprobane Minerals Project) நிறுவனமானது ஒலுவில் மற்றும் கோமாரி முதல் அக்கரைப்பற்று வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதியில் பாரிய அளவிலான கனிம மணல் பிரித்தெடுப்பிற்கான ஆய்வு உரிமங்களைப் பெற்றுள்ளது. இத்திட்ட வரைவின் கீழ்> அகழ்வு செய்யப்படும் பகுதிக்கு அருகில் அமைக்கப்படும் ஈரப்பத பதப்படுத்தும் இயந்திரங்கள் (Wet Plant) மூலம் நீரைப் பயன்படுத்தி> சாதாரண மணலை அகற்றி> கனமான கனிமங்களை ((HMC - Heavy Mineral Concentrate) பிரித்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர்> அந்த HMC கையிருப்பு> ஒலுவில் துறைமுகத்திற்கு அருகில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள Dry Plantஇற்கு கொண்டு செல்லப்பட்டு> இல்மனைட்> ரூடைல் மற்றும் சிர்கான் போன்ற கனிமங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும்> இத்தகைய பாரிய அளவிலான அகழ்வுச் செயல்பாடுகளால் இப்பகுதியின் சூழலியலுக்கும்> இங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஏற்படும் பாதிப்பு மிகவும் பாரியதாக இருக்கலாம். இந்த அகழ்வு காரணமாகக் கடலோரப் பகுதியில் உள்ள இயற்கையான பாதுகாப்பு மணல் மேடுகள் அழிவடைவதால்> தீவிரக் கடற்கரை அரிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன்> கடலோரக் களப்புகள் மற்றும் சதுப்புநில கட்டமைப்பு அழிவடைந்து> ஆழமற்ற கடலில் மீன்வளம் வேகமாகத் குறையவும் இது வழிவகுக்கும். இதனால்> இது உள்ளூர் மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் முற்றாகச் சீர்குலைவதற்குக் காரணமாக அமையும். மேலும்> இயற்கை மணல் அடுக்குகள் அகற்றப்படுவதால்> கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து> அப்பகுதியின் நிலத்தடி நன்னீர் மூலங்களில் உப்பு நீர் கலப்பதற்கான தீவிர அபாயமும் காணப்படுகிறது.
மேலும்> இந்த நெருக்கடியானது சூழலியல் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமல்லாமல்> அப்பகுதியில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உலகப் புகழ்பெற்ற சர்ஃபிங் (Surfing) விளையாட்டின் சொர்க்கமான அறுகம்பை கடற்கரை மற்றும் தற்போது வளர்ந்து வரும் சுற்றுலா வலயமாக உள்நாட்டு> வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவரும் அழகிய பாணம கடற்கரைப் பகுதியும் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகலாம். கனிம அகழ்வினால் ஏற்படும் கடற்கரை அரிப்பினால் ஆழமற்ற கடலின் அலைகளின் தன்மை மாறுபடுதல் மற்றும் சமுத்திர சூழல் மாசடைதல் என்பன இப்பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு குறைந்து போவதற்குக் காரணங்களாக அமையலாம். இறுதியில்> நாட்டுக்கு மிகச் சிறந்த அந்நியச் செலாவணியைக் கொண்டு வரும் நிலையான சுற்றுலாத் துறையும்> அதை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களின் எதிர்காலமும் இப்பகுதிகளைச் சுற்றி ஆரம்பிக்கப்படவுள்ள கனிம மணல் அகழ்விற்கு மத்தியில் புதையுண்டு போகும் தீவிர அபாயம் உள்ளது.
(ஆ) வட-கிழக்கு மேல் கடலோர வலயம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் புல்மோட்டை> திரியாய்> கொக்கிலாய்> நாயாறு> முகத்துவாரம்> கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மலை வரை பரந்து விரிந்துள்ள கடற்கரை வலயம்> நாட்டின் மற்றுமொரு பிரதான கனிம மணல் வலயமாகும். இதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்போது> இலங்கையின் மிக பழமையான மற்றும் பிரதான கனிம மணல் பிரித்தெடுக்கும் செயல்முறையானது பல வருடங்களாகப் புல்மோட்டையை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. எனினும்> அந்த நீண்டகால அகழ்வின் விளைவாக> 'கல்லறாவா' போன்ற உள்ளூர் மீனவக் கிராமங்களைச் சார்ந்த கடற்கரைகள் கடுமையாக அரிப்புக்கு உள்ளாகியிருப்பதுடன்> கனிம மணல் போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் செயல்பாடுகளால் ஏற்படும் தூசி காரணமாக அப்பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கும் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இந்தச் சூழலியல் மற்றும் சமூகப் பாதிப்புகள் இன்னமும் தெளிவாகத் தெரிகின்ற போதிலும்> தற்போதைய நிலையில் இந்தக் கனிம மணல் அகழ்வு எல்லைகளைப் புல்மோட்டையிலிருந்து திரியாய்> கொக்கிலாய்> நாயாறு> முகத்துவாரம்> கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மலை வரையிலான முழு மேல் கடலோரப் பகுதிக்கும் மேலும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டு வருகின்றது. இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் அகழ்வினை விரிவுபடுத்துவதன் மூலம்> இப்பகுதிகளிலுள்ள மீனவ மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கொக்கிலாய் மற்றும் நாயாறு போன்ற உணர்திறன் மிக்க களப்பு மண்டலங்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் எழுந்துள்ளது. இக்களப்புகளைச் சுற்றி மீன்கள் முட்டையிடும் இடங்களும்> அது சார்ந்த சூழழியல் அமைப்பும் அழிவடைவதன் மூலம்> முழுப் பகுதியிலுமுள்ள மீனவ மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முற்றாகச் சீர்குலையும் பாரிய நெருக்கடியின் அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளன.
(இ) வடமேற்கு மற்றும் வட கடலோர வலயம்
இலங்கையின் வடமேற்கு மற்றும் வட கடலோர வலயத்தைச் சேர்ந்த கற்பிட்டி> மன்னார் தீவு மற்றும் யாழ்ப்பாணம் மண்டைதீவு சார்ந்த பகுதிகள்> மிகவும் அழகிய மற்றும் புவியியல் ரீதியாக மிகவும் உணர்திறன் கொண்ட சூழழியல் அமைப்புகளைக் கொண்ட பகுதிகளாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கனிம மணலை இலக்கு வைத்து> பாரிய அளவிலான அகழ்வுத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது.
அவற்றுள் பிரதானமாக> ஆஸ்திரேலிய நிறுவனமான Titanium Sands நிறுவனத்தினால் மன்னார் தீவில் அமைந்துள்ள 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான அதி உணர்திறன் கொண்ட கடலோரப் பகுதியில்> பாரிய அளவிலான கனிம மணல் பிரித்தெடுப்பிற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய> மன்னார்> கற்பிட்டி மற்றும் மண்டைதீவு போன்ற தீவுகள் மற்றும் தீபகற்ப நிலங்களை இலக்கு வைத்துச் செய்ய முன்மொழியப்பட்டுள்ள இத்தகைய பாரிய அளவிலான அகழ்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களால்> அப்பகுதிகளின் சூழல் நிலைமைகளுக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மிகவும் பாரதூரமானது. குறிப்பாக> ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ள காற்றாலை மின்நிலையத் திட்டம் காரணமாக மன்னார் தீவு வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றது. இப்பகுதிகளின் நிலத்தடி நீர் மூலங்கள்> மண் மற்றும் மணல் அடுக்குகளுக்கு இடையேயான உப்புநீர் மற்றும் நன்னீர் சமநிலையிலேயே தங்கியுள்ளன. இத்திட்டங்களின் போது நிலத்திற்குள் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளால்> அந்தச் சூழலியல் சமநிலை முற்றாகச் சீர்குலைந்து வருகின்றது. இதன் விளைவாக> கடல் நீர் நிலத்தடி நீர் அடுக்குகளுக்குள் புகுவதால்> அப்பகுதி மக்களின் குடிநீர் மூலங்கள் உவர்நீராக மாறுவதுடன்> விவசாய நிலங்களும் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்றதாக மாறும் நெருக்கடி உருவாகியுள்ளது.
3. ஆய்வு உரிமத்திலிருந்து (Exploration License) அகழ்வு உரிமத்திற்கு (Mining License) நகர்தல்
கனிம மணல் திட்டங்கள் தொடர்பாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு விடயம் ஆய்வு உரிமங்களை வழங்கும் செயல்முறையாகும். சூழலியலாளர் திரு. சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுவது போல்> ஒரு ஆய்வு உரிமத்தின் (Exploration License - EL) முதன்மையான மற்றும் ஒரே சட்டப்பூர்வ நோக்கம்> குறிப்பிட்ட பகுதியில் கனிமங்கள் படிந்துள்ளனவா என்பதை அறிவதற்காகக் வரையறுக்கப்பட்ட மண் மாதிரிகளைப் பெற்று புவியியல் பரிசோதனைகளை மேற்கொள்வது மட்டுமேயாகும். ஆனால் நடைமுறையில் நடப்பது என்னவென்றால்> இந்த ஆய்வு உரிமத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி Capital Metals, Alchemy Lanka, Titanium Sands போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்மொழியப்பட்ட பகுதிகளில் பாரிய அளவிலான அகழ்விற்கு வழியமைத்துக் கொள்வதாகும்.
இதிலுள்ள மிக தீவிரமான சிக்கல் என்னவென்றால்> பிற்காலத்தில் அரசு அழுத்தங்கள்> அரசியல் செல்வாக்குகள் அல்லது நிர்வாக இடைவெளிகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைத் தமக்குத் தேவையானவாறு தளர்த்திக் கொள்ள இந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாகும். தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment - EIA) அறிக்கைகளைப் பெறும் செயல்முறையைத் தவிர்ப்பதும்> EIA அறிக்கைகளிலுள்ள கடுமையான நிபந்தனைகளைப் புறந்தள்ளி இந்த ஆய்வு உரிமங்களைப் பாரிய அளவிலான வர்த்தக அகழ்வு உரிமங்களாக (Industrial Mining Licenses - IML) மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதுமாகும்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கடலோர வலயலத்தில் அகழ்வதற்கு முன்னர்> 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்கக் கடற்கரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நேரடி அனுமதியும்> முறையான சூழலியல் ஆய்வும் இருக்க வேண்டும் என திரு. சஜீவ சாமிகர மேலும் வலியுறுத்துகிறார். இருப்பினும்> இந்நிறுவனங்களில் பெரும்பாலானவை கடலோரச் சூழலின் உணர்திறன்> நிலத்தடி நீர் மூலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் இழப்பு ஆகியவற்றை மறைத்து அனுமதிகளைப் பெற முயற்சிக்கின்றன.
எனவே> எந்தவொரு வர்த்தகக் கனிம அகழ்வு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்னர்:
• சுயாதீன நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறையான சுற்றுச்சூழல் (EIA)> நீரியல் (Hydrological) மற்றும் சமூக-பொருளாதார தாக்க மதிப்பீட்டு (Socio-Economic Assessment) அறிக்கைகளைப் பூர்த்தி செய்தல்>
• அவ்வறிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் செயல்முறைக்கு (Public Participation Process) முழுமையாகத் திறந்துவிடுதல்>
• பொதுமக்கள் மற்றும் சூழலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை> எந்தவொரு ஆய்வு உரிமத்தையும் பாரிய அளவிலான அகழ்வு உரிமமாக மாற்றாதிருத்தல்>
என்பன அத்தியாவசிய> சட்டப்பூர்வ மற்றும் சமூக நிபந்தனைகளாகும்.
4. கனிம மணலைப் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் தொழிற்சாலைச் செயல்முறை
கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயற்படுத்தும்போது பிரதானமாக இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது> திறந்த அல்லது மேற்பரப்பு அகழ்வு முறை (Open-Cast Mining) ஆகும். இதில்> கடற்கரை அல்லது அதற்கு அருகிலுள்ள மணல் மற்றும் மண் அடுக்குகள் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாகத் தோண்டி அகற்றப்படுகின்றன. இச் செயல்முறையினால் கடற்கரை அமைப்பைப் பாதுகாக்கும் இயற்கையான மணல் மேடுகள் (Sand Dunes) மற்றும் கடலோரத் தாவர அமைப்புகள் மிகவும் கடுமையாக அழிக்கப்படுவதுடன்> இயந்திரங்களின் இயக்கத்தினால் கடுமையான சத்தமும்> தூசி மாசடைதலும் சூழலில் சேர்கின்றன.
இரண்டாவது முறை> தூர்வாரும் முறை (Dredging) ஆகும். நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலச் சூழல்களில் பிரத்யேக தூர்வாரும் இயந்திரங்களைப் பயன்படுத்தி> நீருடன் கலந்த மணல் மொத்தமாக உறிஞ்சி எடுக்கப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் தூர்வாரும் செயல்முறையானது களப்புகள்> சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநில அமைப்புகளில் உள்ள மீன்கள் முட்டையிடும் இடங்களுக்கும் சிறிய நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விற்கும் மரண அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
இதற்குப் பிறகு> தொழிற்சாலைச் செயல்முறையின் போது சூழலுக்கு ஏற்படும் மிகத் தீவிரமான மற்றும் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல்> அதிகளவில் நிலத்தடி நீரை (Groundwater) உறிஞ்சுவதாகும். Wet Plant இல் நடைபெறும் மணல் கழுவுதல் மற்றும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு நாளாந்தம் மில்லியன் கணக்கான லிட்டர் மிகப்பாரியளவு நீர் தேவைப்படுகின்றது. இத்திட்டங்களுக்காக அப்பகுதியில் உள்ள நிலத்தடி நன்னீர் மூலங்களை அதிகமாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால்> சூழலிலுள்ள இயற்கை நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைவடைவதுடன்> சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் குடிநீர் தேவைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை உருவாகின்றது.
5. சூழலியல்> சமூக மற்றும் சுகாதார நெருக்கடி
கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டங்கள் காரணமாக ஏற்படும் சூழலியல் அழிவானது வெறும் நிலத்துடன் மட்டும் நின்றுவிடாமல்> அப்பகுதியின் சமூக-பொருளாதார அமைப்புக்கும்> சமூகத்தின் சுகாதாரத்திற்கும் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இத்திட்டங்கள் மூலம் உருவாகும் ஒட்டுமொத்த சூழலியல்> சமூக மற்றும் சுகாதார நெருக்கடியை பின்வரும் பிரதான துறைகளின் கீழ் அடையாளம் காண முடியும்:
(அ) களப்புகள்> சதுப்பு நிலங்கள் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரம் அழிவடைதல்
கடலோரத்திலுள்ள சதுப்புநிலச் சூழல் அமைப்புகள் என்பது மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விற்கு அத்தியாவசியமான இயற்கை இனப்பெருக்க மையங்களாகச் செயல்படும் பிரதேசங்களாகும். கனிம மணல் அகழ்வு காரணமாக இத்தகைய உணர்திறன் மிக்க சதுப்பு நிலங்கள்; மற்றும் களப்பு கட்டமைப்புகள்;; அழிவடைவதுடன்> மீன்கள் முட்டையிடுவதற்கான இயற்கைச் சூழலும் முற்றாக அழிந்துபோகின்றது. இதன் நேரடி விளைவாக> ஆழமற்ற கடல் மற்றும் களப்புகள் சார்ந்த மீன்வளம் வேகமாக குறைவடைகின்றது. இதனால்> சிறிய அளவிலான தூண்டில் மற்றும் சிறு படகுகளை வைத்துள்ள அப்பகுதியின் ஆதரவற்ற மீனவ மக்களின் அன்றாட வருமானம் முற்றாக இழக்கப்பட்டு> அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் முற்றாகச் சீர்குலையும் நிலை ஏற்படுகின்றது.
(ஆ) நீர் மூலங்கள் அழிவடைதல் மற்றும் உவர்நீர் கலக்கும் அபாயம்
கடற்கரையில் அமைந்துள்ள தடிமனான மணல் அடுக்குகள் என்பன இயற்கையாகவே நன்னீரைத் தக்கவைத்துக்கொள்ளும் மற்றும் உவர்நீரும் நன்னீரும் கலப்பதைத் தடுக்கும் இயற்கை அரணாகப் பாதுகாப்பை வழங்கும் வலயங்களாகும். இருப்பினும்> கனிமப் பிரித்தெடுப்பிற்காக அம்மணல் அடுக்குகள் தோண்டி அகற்றப்படும்போது> இந்த இயற்கை நன்னீர் பாதுகாப்பு அரண் உடைகின்றது. இதன் விளைவாக> கடல் நீரும் நிலத்தடி நீரும் ஒன்றாகக் கலக்கின்றன. அப்போது அப்பகுதியின் குடிநீர் கிணறுகளும் விவசாய நிலங்களும் அதிக உவர்த்தன்மை கொண்டதாக மாறி> பிற்காலத்தில் கடுமையான நீர் மற்றும் உணவு நெருக்கடியை உருவாக்குகின்றன.
(ஈ) கடற்கரை அரிப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள்
கடற்கரையில் அமைந்துள்ள இயற்கையான மணல் மேடுகள் என்பன கடல் அலைகளின் தாக்கத்திலிருந்து நிலத்தைப் பாதுகாக்கும் பிரதான இயற்கை பாதுகாப்பு அமைப்பாகும். அகழ்வு காரணமாக இந்த மணல் மேடுகளை இழப்பதன் மூலம் கடற்கரை அரிப்பு கடுமையாக வேகமடைந்து> நிலம் கடலுக்குள் இரையாகும் தீவிர அச்சுறுத்தல் உருவாகின்றது. இது தவிர> கனிம மணல் பதப்படுத்தும் தொழிற்சாலைச் செயல்முறைகள் மற்றும் பெரிய இயந்திரங்கள் மூலம் மணலை ஏற்றிச் செல்வதால் பகுதி முழுவதும் அதிகளவில் தூசி பரவுகின்றது. இந்தத் தூசியைச் சுவாசிப்பதனால் அப்பகுதி மக்களுக்கும்> குறிப்பாகச் சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மற்றும் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உருவாகின்றது.
(உ) "மீண்டும் மணல் நிரப்புதல்" பற்றிய கட்டுக்கதை
கனிம மணல் திட்டங்களைச் செயற்படுத்தும் நிறுவனங்கள்> கனிமங்களை அகற்றிய பிறகு எஞ்சியுள்ள குவார்ட்ஸ் மணலை மீண்டும் அகழப்பட்ட நிலத்திலுள்ள குழிகளில் நிரப்பி> சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதாகக் கூறினாலும்> அது வெறும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு கட்டுக்கதையாகும். ஏனெனில்> கனிமங்கள் அகற்றப்பட்ட இந்த மணல் மிகவும் லேசானது என்பதால்> இயற்கை கடல் அலைகளினாலும் பலத்த காற்றினாலும் மிக விரைவாகக் அடித்துச் செல்லப்படுகின்றது. மேலும்> இந்த மணல் அடுக்குகளாக இயற்கையாகப் படிவதற்குப் பல ஆண்டுகள் எடுத்தன. எனவே> இந்த மீண்டும் மணல் நிரப்பும் முறையின் மூலம் அழிக்கப்பட்ட இயற்கை கடலோரச் சூழல் அமைப்பையோ அல்லது மணல் மேடுகளையோ மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது.
6. பொருளாதார யதார்த்தமும் நடைமுறை எல்லைகளும்
நிகழ்ச்சியின் போது சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பிய "சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து> நிலையான முறையில் இந்தக் கனிமப் பொருட்களைப் பெற்றுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாதா?" என்ற கேள்விக்குப் பதிலளித்த சூழலியலாளர் திரு. சஜீவ சாமிகர சுட்டிக்காட்டியதாவது:
"உண்மையில் புல்மோட்டையில் கனிமப் பிரித்தெடுப்பு ஒரு அளவிற்கு இந்த முறையிலேயே நடைபெற்றது. இந்தச் செயல்முறையை ஏதேனும் ஒரு வழியில் துரிதப்படுத்தவோ அல்லது அதிகரிக்கவோ முற்பட்டால்> ஒட்டுமொத்தச் செயல்முறையும் தோல்வியடையக்கூடும். காரணம்> எந்தவொரு கனிமமும் அல்லது மதிப்புமிக்க பொருளும் அரிதாக இருக்கும் அளவிற்குத்தான் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகின்றது. இவற்றை அதிகமாக அகழ்ந்து அதிகமாக ஏற்றுமதி செய்தால்> இந்தக் கனிம வகைகள் தாராளமாகக் கிடைக்கப்பெற்று அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இலங்கையின் மாணிக்கக் கற்களுக்கு நடந்தது போன்றதொரு விடயமே இதுவாகும்."
திரு. சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுவது போல்> இலங்கையின் மாணிக்கக் கல் கைத்தொழிலுக்கு இத்தகையதொரு சம்பவமே நிகழ்ந்தது. மாணிக்கக் கற்களை அதிகளவிலும் விரைவாகவும் பிரித்தெடுத்துச் சந்தைக்கு வழங்குவதால்> இலங்கையின் மாணிக்கக் கற்களுக்கு இருந்த தனித்துவமான மதிப்பும் அதிக விலையும் ஓரளவு குறைவடைந்தன. கனிம மணலுக்கும் இந்த அடிப்படை பொருந்தும். கனிம மணலை வேகமாக அகழ்ந்து மூலப்பொருளாகவே விற்பனை செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் குறிப்பிட்டளவு அந்நியச் செலாவணியைப் பெற முடிந்தாலும்> நீண்டகாலத்தில் நடப்பது என்னவென்றால்> இலங்கைக்குச் சொந்தமான தனித்துவமான கனிம வளத்தின் ஒட்டுமொத்த சர்வதேச மதிப்பையும் நாமே குறைத்துக் கொள்வதாகும்.
மேலும்> கனிம மணலுக்கு மதிப்புக் கூட்டி (Value Addition) தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடலின் போது எழுந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு திரு. சஜீவ சாமிகர பின்வருமாறு விளக்கினார்:
"உலகின் பல நாடுகள் கனிமங்களுக்கு மதிப்புக் கூட்டல் எதுவும் செய்யாமலேயே ஏற்றுமதி செய்கின்றன. அதற்குக் காரணம்> மதிப்புக் கூட்டும் செயல்முறைக்கு அதிகளவிலான இரசாயனச் செயல் முறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதும்> அத் தொழிற்சாலைகள் சிறப்புப் பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் மக்கள் நடமாட்டமில்லாத பிரதேசங்களில்; இயங்க வேண்டியிருப்பதும்> அதற்கு அதிக செலவும் காலமும் விரயமாவதும் ஆகும். பிரதானமாக இவ்வாறு மதிப்புக் கூட்டித் தயாரிப்புகளை மேற்கொள்வது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய நாடுகளாகும். அந்நாடுகளின் நிலப்பரப்பில் மக்கள் தொகையும் குறைவாக இருப்பது இச்செயல்முறைக்கு ஓரளவிற்கு வசதியாக அமைந்துள்ளது. அத்துடன்> அந்நாடுகளில் அகழப்பட்ட நிலங்கள் இதுவரை இயல்பு நிலைக்குத் திரும்பவும் இல்லை."
மேற்கண்ட கூற்றில்> திரு. சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுவது போல்> ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பும் குறைந்த மக்கள் அடர்த்தியும் கொண்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த மாதிரிகளை> இலங்கை போன்ற சிறிய> தீவிர சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மற்றும் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட ஒரு நாட்டிற்கு நேரடியாகப் பிரதியீடு செய்ய முடியாது. நமது நாட்டில் கடலோர பிரதேசம்; வரை மக்கள் தொகை பரவியுள்ளதுடன்> மீன்பிடித் தொழில்> விவசாயத் தொழில் மற்றும் சுற்றுலாத் துறை போன்ற மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மேற்கொண்டு வரும் வாழ்வாதார அமைப்புகள் கடலோர பிரதேசம் வரை பரந்து காணப்படுகின்றன. இத்தகையதொரு சூழலில்> அதிகளவில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படும் மதிப்புக் கூட்டும் தொழிற்சாலைகளை நிறுவுவது என்பது> அப்பகுதியின் நிலத்தடி நீர்> மண் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தீவிர சூழலியல் மற்றும் சுகாதார அச்சுறுத்தலைக் கொண்டு வருவதாகும்.
7. மக்களின் உரிமையும் எதிர்கால தீர்மானங்களுக்காக எழுப்பப்பட வேண்டிய வினாக்களும்
இந்நாட்டின் கடலோர வலயத்தில் வாழும் மக்கள்> பரம்பரை பரம்பரையாக அந்தச் சூழல் அமைப்பை நம்பி வாழ்வதுடன்> அதனைப் பாதுகாப்பதற்கும் பங்களிப்புச் செய்த பங்காளர்;களாவர். அதேபோல் நாட்டின் அபிவிருத்திக்கும்> உணவு உற்பத்திச் செயல்முறைக்கும்> தேசிய பொருளாதாரத்திற்கும் தமது வியர்வையையும் உழைப்பையும் அர்ப்பணித்த மனிதர்களாவர். எனவே> தாம் வாழும் நிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பாரிய அளவிலான அபிவிருத்தி அல்லது பிரித்தெடுப்புத் திட்டம் குறித்தும்> அதனால் தமது சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் முழுமையான தகவல்களை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமை (Right to Information) அவர்களுக்கு உள்ளது. அதாவது> தாம் வாழும் பகுதியின் நிலத்தடி நீர்மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்> மீன் வளர்ப்பு இடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்> பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகழ்வு உரிமங்களின் நிபந்தனைகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குப் புரியும் வகையில் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல்> எந்தவொரு கனிமப் பிரித்தெடுப்புத் திட்டத்திற்கும் முன்அனுமதி வழங்குவதற்கு முன்னர்> முன்மொழியப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக பின்வரும் தீர்மானம்மிக்க வினாக்கள் குறித்து அரசு அதிகாரிகளும்> நிபுணர்களும்> சமூகமும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்:
• அகழ்வு செய்யப்படும் நிலம் கடலோர பிரதேசத்;திற்கும் நிலத்தடி நீர் மூலங்களுக்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்?
• களப்புகள்> சதுப்பு நிலங்கள்; மற்றும் மீன் இனப்பெருக்க வலயங்களைப் பாதுகாப்பதற்கு முறையான திட்டம் உள்ளதா?
• இரசாயனக் கழிவுகள் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன?
• அகழ்வு காரணமாக மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் வருமான இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கும் முறைமை உள்ளதா?
• திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துடன் ஒப்பிடுகையில் ஏற்படும் நீண்டகாலச் சூழலியல் மற்றும் சமூகப் பாதிப்பு எவ்வளவு?
• திட்டம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அப்பகுதி மக்களின் கருத்துக்களும் எதிர்ப்புகளும் உண்மையில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா?
முடிவுரை
இலங்கையின் கடலோர பிரதேசத்;தை மூடியுள்ள இயற்கை மணல் அடுக்கு என்பது வெறும் பணத்திற்கு விற்கக்கூடிய கனிம வளங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அது முழுத் தீவையும் சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். அது நிலத்தடி நன்னீர் மூலங்களைப் பாதுகாக்கும் இயற்கை 'நீர்ச் சேமிப்பகம்'> கடற்கரை அரிப்பைத் தடுக்கும் பாதுகாப்பு அரண்> மீன்களின் இனப்பெருக்க மையம்> அதுமட்டுமன்றி மீனவ> விவசாய மற்றும் சுற்றுலா சமூகங்களின் வாழ்வை தீர்மானிக்கும் பிரதான வாழ்வாதாரமுமாகும்.
குறுகிய காலப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கனிம வளங்களை ஒழுங்கற்ற முறையில் பெற்று வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது கவர்ச்சிகரமான ஒரு 'அபிவிருத்தித் தீர்வாக' வெளியில் தோன்றலாம். எனினும்> அதன் மூலம் நாட்டுக்கு இழக்கப்படும் குடிநீர்> உள்ளூர் உணவுப் பாதுகாப்பு> சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் இயற்கை கடற்கரைப் பாதுகாப்பு ஆகியவற்றை மீண்டும் பணம் கொடுத்து வாங்க வேண்டி ஏற்படுமாயின்> அது எவ்வகையிலும் நாட்டுக்கு லாபகரமான அல்லது புத்திசாலித்தனமான அபிவிருத்திப் பாதையாக அமையாது. குறுகிய காலத்தில் ஈட்டப்படும் டொலர் தொகையை விட> இதன் மூலம் ஏற்படும் மிகப்பாரிய சூழலியல் மற்றும் சமூக அழிவுக்கான இழப்பீட்டை எதிர்காலச் சந்ததியினரே செலுத்த வேண்டி வரும்.
இதற்கமைய> இறுதியில் நம்முன் எஞ்சியிருக்கும் தீவிரமான வினா இதுவே:
கடற்கரையிலிருந்து அகற்றப்படும் கனிமங்களுக்கு நாம் விலையைத் தீர்மானித்துள்ளோம். ஆனால்> அதன் மூலம் இழக்கப்படக்கூடிய நீருக்கும்> மீன்களுக்கும்> கடற்கரைக்கும் மற்றும் மனித உயிர்களுக்கும் நாம் விலையைத் தீர்மானித்துள்ளோமா?