
யாழ் திஸ்ஸ விகாரை தொடர்பான காணி பிரச்சனை மற்றும் யாழ்ப்பாண மக்களின் காணி உரிமை
Published
யாழ் திஸ்ஸ விகாரை தொடர்பான காணி பிரச்சனை மற்றும் யாழ்ப்பாண மக்களின் காணி உரிமை
காணி பிரச்சனைக்கும்; வட மாகாண மக்களிற்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது. யுத்த காலத்தில் பாதுகாப்பு படையினரின் முகாம்களிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட> காணி உறுதிகள் உள்ள தமது பூர்வீக காணிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் வட மாகாண மக்களில் ஒரு பிரிவினர் இன்னமும் கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர்.
யாழ்ப்பாணம்> பலாலி, காங்கேசன் துறை மற்றும் முல்லைதீவு> முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்கள் பலவற்றில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் இன்னமும் பாதுகாப்பு படையினரின் வசம்; உள்ளதுடன்> உரிய காணிகளை விடுவிக்காத காரணத்தால் தாம் பிறந்த மண்ணிற்;கு செல்ல முடியாமல் வடக்கு தமிழ் மக்கள் பலர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
யாழ் மாவட்டத்தில்> மக்களின் பூர்வீக காணிகள்; 3000 ஏக்கர் வரையான காணிகள் இன்னமும் பாதுகாப்பு படையினர் வசம் உள்ளதுடன்> உரிய காணிகள் அதில் பூர்வீகமாக வாழ்ந்தவர்களிற்கு வழங்கப்பட இருப்பதாக யாழ் மாவட்ட செயலாளர் காரியாலம் குறிப்பிட்டுள்ளது.
பிறந்த மண் கண் முன்னே இருக்கையில் அதில் அடி எடுத்து வைக்க முடியாத நிலமை உருவாகியமை கவலைக்கு உரிய விடயமாகும். அத்துடன் உரிய காணிகளை விடுவிக்கும் வரை பொறுத்து இருப்பதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது.
யாழ்ப்பாண மக்களின் காணிகள் இழப்பு
யாழ் மாவட்டம் 1025 சதுர கிலோ மீட்டர்கள் ஆவதுடன்> யாழ் மாவட்டத்தில் நிலம் மட்டும் 929 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.
யுத்தம் காரணமாக யாழ் மாவட்ட மக்களின் 50>000 ஏக்கர் வரையிலான பகுதிகள் இழக்கப் பட்டுள்ளதுடன்> பாதுகாப்பு படை முகாம்களிற்காக அந்த காணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 1990 தசாப்தத்தில் யாழ் மாவட்ட மக்களின் காணி இழப்பு ஆரம்பிக்கப் பட்டதுடன்> யுத்தம் காரணமாக கைவிட்டு செல்லப்பட்ட யாழ்ப்பாணம் பலாலி> காங்கேசன் துறை> பருத்தித் துறை போன்ற பிரதேச காணிகளில் 3000 ஏக்கர் வரையில் இன்னமும் விடுவிக்க முடியவில்லை.
யுத்த பிரச்சனை ஆரம்பிக்கப் பட்டதுடன் யாழ்பாணம்> பலாலி மற்றும் காங்கேசன் துறை பிரதேச மக்கள் தமது இடங்களை கைவிட்டு அகதி முகாம்களை நோக்கி வெளியேறிச் சென்றதுடன்> காணிகளை இழந்த மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்;தில் அமைக்கப்பட்ட 32 அகதி முகாம்களில் வாழ்ந்தார்கள்.
1990 தசாப்தங்களில் காணிகளை கைவிட்டு சென்ற மக்களின் காணிகள் 3000 ஏக்கர் வரை இன்னமும் பாதுகாப்பு படை முகாம்களின் எல்லைகளிற்குள் உள்ளன.
தற்போது யுத்தம் இடம் பெறா விட்டாலும் உரிய காணிகளை விடுவிப்பதற்கும் மற்றும் காணிகளை இழந்தவர்களிற்கு அவர்களது பூர்வீக காணிகளை பெற்றுக் கொடுக்க முடியாமை கவலைக்கு உரிய நிலமை ஆகும்.
வடக்கில் இடம் பெற்ற சிங்கள குடியேற்றம்
வட மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதுடன்> சிங்கள மக்கள் குறிப்பிடத்தக்க அளவினர் வட மாகாணத்தை மையமாகக் கொண்டு வாழ்கின்றனர்.
யுத்தம் காரணமாக தமிழ் மக்களைப் போல வடக்கு சிங்கள மக்கள் பெரும்பாலானோரும் தமது பூர்வீக இடங்களைக் கைவிட்டு அனுராதபுர மாவட்டத்திற்கு அப்பால் உள்ள பிரதேசங்களிற்கு இடம் பெயர்ந்தனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது காணிகளை இழந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் தமது பூர்வீக இடங்களில் மீண்டும் குடியேறினர். பூர்வீக குடிகள் அவ்வாறு குடியேற வருவது நியாயமானது.
ஆனால் பதவியில் இருந்த சில அரசாங்கங்கள் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வட மாகாணத்திற்குள் வசிக்காத ஒரு குழுவினரை வட மாகாணத்தின் போகஸ்வவ> நாமல்கம> சலலிகினிகம மற்றும் மணலாறு பிரதேசங்களில் குடியேற்ற நடவடிக்கை மேற் கொண்டனர்.
புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் தேர்தல் இடம் பெற்றால் உரிய பிரதேசத்திற்குள் அவர்களது அரசியல் கருத்துக்களைக் கொண்டு செல்லக் கூடிய குழுவினை உருவாக்கும் நோக்கில் அவ்வாறு ஹம்பாந்தோட்டை> கண்டி> நுவரெலியா போன்ற பிரதேசங்களில் இருந்து ஒரு குழுவினரை வடக்கில் புதிதாக குடியேற்றுவதற்கு கடந்த அரசாங்கங்களின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற் கொண்டனர்.
அதன் ஊடாக வடக்கில் சிங்கள கிராம மயமாக்கல் இடம் பெற்றதுடன் சிங்கள கிராம மயமாக்கலுடன் வட மாகாணத்திற்குள் புதிய பௌத்த விகாரைகள்; சிலவும் உருவாக்கப் பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர்.
வட மாகாணத்திற்குள் புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களின் உருவாக்கமும் தமிழ் மக்கள் பாதிக்கப்படுதலும்
வட மாகாணத்திற்குள் புதிய சிங்கள கிராமங்களின் உருவாக்கம் மற்றும் பாதுகாப்புப் படை முகாம்கள் அமைத்தல் ஆகியவற்;றின் பிரதிபலனாக பௌத்தர்கள் எவரும் இல்லாத இடங்கள் சிலவற்றில் வழிபாட்டு தலங்கள் சிலவும் அமைக்கப்பட்டன.
இராணுவ முகாம்களிற்கு அண்மைய கிராமங்களில் அவ்வாறு புதிய பௌத்த தலங்கள் சில உருவாக்கப் பட்டுள்ளதாக வடக்கு தமிழ் மக்கள் கூறுகின்றனர்.
பல வருடங்களாக இராணுவ முகாம்கள் அமைக்கப் பட்டிருப்பதனால் குறித்த முகாமிற்குள் இருக்கின்ற பாதுகாப்பு படை உறுப்பினர்கள் வழிபடுவதற்காக புதிய பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலையை அமைத்தல் வழக்கமான சம்பிரதாயமாக இருந்தது.
கடந்த காலங்களில் அவ்வாறான புத்தர் சிலைகள்; சில வட மாகாணத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன்> யாழ் திஸ்ஸ விகாரை அவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்றாகும் என தமிழ் மக்கள் கூறினார்கள்.
திஸ்ஸ விகாரை உருவாக்கம் மற்றும் திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சனை
யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் தமிழ் பௌத்த மக்கள் குழு ஒன்று பல வருடங்களிற்கு முன்பு இருந்தே அங்கு வாழ்ந்து வந்துள்ளதுடன்> தமிழ் பௌத்த மக்கள் மற்றும் யாழ்ப்பாண இந்து மக்களிற்கு இடையில் நெருங்கிய தொடர்புகள் நிலவி இருந்தன.
இந்து கோவிலும் பௌத்த விகாரையும் ஒன்றாக இருந்துள்ளதுடன்> அதன் ஊடாக மத நல்லிணக்கம் நன்றாக வெளிப்பட்டது. யாழ்ப்பாணம் நயினா தீவு விகாரை மற்றும் யாழ்ப்பாணம் நயினா தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோவிலிற்கு இடையில் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது.
நயினா தீவில் வாழும் மக்கள் நயினா தீவு விகாரையின் தலைமை தேரர் உடன் நெருங்கிய உறவினக் கொண்டுள்ளதுடன்> யுத்த காலத்தில் கூட எல்.ரி.ரி.இ. இயக்கமும் நாக தீப விகாரைக்கு எந்த வித இடைஞ்சல்களையும் ஏற்படுத்தவில்லை என நயினா தீவு மக்கள் தெரிவித்தனர்.
அதே போல வவுனியா மாவட்ட புராதன விகாரைகள் பல வடக்கு இந்து மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன்> புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.இ. உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகையில்: யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் முல்லை தீவு காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு எந்த வித சேதத்தினையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எல்.ரி.ரி.இ. அமைப்பின் தலைவர்கள் கீழ் மட்ட உறுப்பினர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
அவ்வாறான மத நல்லிணக்கம் இருந்த வட மாகாணத்திற்குள்> வணங்குவதற்கு பௌத்தர்கள் யாரும் இல்லாத இடங்களில் புதிய பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதனால் மத சகவாழ்விற்கு தடங்கல் ஏற்பட்ட சில சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம்> காங்கேசன் துறை திஸ்ஸ விகாரை எனும் பௌத்த மத வழிபாட்டுத் தலம் அண்மைக் காலத்தில் கட்டப் படுகின்றமையினால் காங்கேசன் துறை மக்கள் மன உழைச்சலிற்கு உள்ளாகி இருப்பதாக திஸ்ஸ விகாரையை சூழ உள்ள மக்கள் தெரிவித்தனர்.
திஸ்ஸ விகாரையை சூழ உள்ள மக்களின் கருத்து
யாழ்ப்பாணம் நயினா தீவு பௌத்த விகாரை> நாக விகாரை போன்ற பழமை வாய்ந்த பௌத்த விகாரைகள் உள்ளன. அவை பற்றி யாழ்ப்பாண மக்கள் எவரிற்கும் எந்த வித பிரச்சனையும்; இல்லை. அந்த பௌத்த ஆலயங்களில் உள்ள தேரர்களுடன் யாழ்ப்பாண தமிழ் மக்கள் நன்றாக உள்ளனர். ஆனால் 2020 ம் ஆண்டில் இருந்து தான் திஸ்ஸ விகாரை என்று புதிதாக விகாரை ஒன்று கட்ட ஆரம்பிக்க பட்டுள்ளது.
கொரோணா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் தான் இந்த திஸ்ஸ விகாரை என்ற விகாரை கட்டுவதற்கு ஆரம்பிக்கப் பட்டது. அங்கே புராதன விகாரை ஒன்று இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் எங்களிற்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து அங்கே விகாரை இருக்கவில்லை. இங்கே குறிப்பிடப்படும் இடத்திற்கு அப்பால் புராதன கல்வாள் போன்றன இருந்த வேறொரு இடத்தில் 1950 ம் ஆண்டு காலப்பகுகளில் புத்தர் சிலை ஒன்று இருந்ததாக வயதான கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.
அக் காலத்தில் காங்கேசன் துறை சிமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த சிங்கள மக்கள்> பலாலி விமான நிலையத்தில் பணியாற்றிய சிங்கள மக்கள் இங்கு குறிப்பிடப்படும் புராதன புத்தர் சிலையை வணங்கியுள்ளனர். அது எங்களிற்கு பிரச்சனை இல்லை. அந்த புராதன புத்தர் சிலை இருந்த இடத்தில் 30> 40 பர்ச்சஸ் அளவிலான காணித்; துண்டு உள்ளது. அங்கே விகாரை அமைக்கப்பட்டு இருந்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம்> நாக தீப விகாரையின் தலைமை தேரர் அவர்களுக்கு அந்த இடம் பற்றித் தெரியும்.
ஆனால் இந்த திஸ்ஸ விகாரை அமைக்கப்படும் இடத்தில் எந்தவித புத்தர் சிலையும் இருக்கவில்லை. தற்போது எங்கிருந்தோ வந்த ஒரு தேரர் தமிழ் மக்கள் வசித்த காணிகளில் விகாரை ஒன்றை அமைக்கின்றார். இது நியாயமானது அல்ல. யுத்தத்திற்கு முன்னர்> தற்போது விகாரை அமைக்கப்படும் காணியில் தமிழ் குடும்பங்கள் 18 வரை வசித்துள்ளனர். ஆனால் யுத்தம் காரணமாக நாங்கள் காணிகளைக் கைவிட்டு அகதிகளாக சென்று விட்டோம்.
அகதிகளாகச் சென்ற எங்களிற்கு எங்கள் இடங்கள் சில வருடங்களிற்கு முன்பு தான் எங்களிற்கு விடுவித்துத் தரப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் தான் எங்கள் காணிகள் இருந்தன. எங்கள் காணிகள் இன்றி நாங்கள் மிகவும் கஸ்டப் பட்டிருக்கின்றோம். ஆனால் காணிகள் கிடைத்து மீண்டும் குடியேற வந்தாலும் தற்போது புதிய பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
கிராமத்தில் புதிதாக திஸ்ஸ விகாரை என்று விகாரை ஒன்றைக் கட்டுகின்றனர். இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் விகாரையை கட்டுகிறரார்கள். எங்களைத் தவிர வேறு எந்தவொரு பௌத்த மதத்தவரும் சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் வசிக்கவில்லை. அவ்வாறு அண்மையில் கூட பௌத்த மதத்தவர் இல்லாத இடத்தில் திஸ்ஸ விகாரை என்ற விகாரையை இந்த தமிழ் கிராமத்திற்கு மத்தியில் ஏன் கட்டுகிறார்கள் என்று தான் எங்களிற்கு விளங்கவில்லை.
இராணுவ முகாம் போன்று எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் காவலரண்கள் அமைத்து பலவந்தமாகவே அந்த விகாரையை கட்டுகின்றனர். எங்களது பழைய வைரவர் கோவில் இருந்த இடத்தில் தான் இந்த விகாரை கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பழைய புத்தர் சிலை இருந்த இடத்தில் விகாரை கட்டுவதனை யாரும் எதிர்க்க வில்லை. ஆனால் தமிழ் மக்கள் குடியிருந்த காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விகாரை கட்டுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பது தான் எங்கிற்கு புரியாத காரணமாக இருக்கின்றது.
தற்போது குறிப்பிடப்படும் திஸ்ஸ விகாரை என்ற இடத்திற்கு தமிழ் மக்கள் குடியிருந்த நான்கு ஏக்கர் அளவிலான காணி பிடிக்கப்; பட்டுள்ளது. விகாரை கட்டப்படும் எல்லைக்கு பின்புறம் உள்ள பகுதி இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அந்த பகுதியையும் விகாரைக்காக எடுப்பார்கள். அதன் பின்னர் இந்த இடங்களில் குடியிருக்கும் மக்களிற்கு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
விகாரையில் உற்சவம் இருக்கின்றது என்று இராணுவ பஸ்களில் ஆட்களை கொண்டு வந்து பெரகர ஊர்வலங்களை நடத்துவார்கள். அதற்கும் இராணுவத்தினரே வருவார்கள் என்று தான் நாங்கள் நினைக்கின்றோம். இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்தில் இங்கே குறிப்பிடும் அளவிற்கு பௌத்த மக்கள் எங்கே இருக்கின்றனர்.
பௌத்த விகாரை என்றால் அனைவரும் சென்று வரக் கூடிய இடமாகும். நாக தீப விகாரையைப் பாருங்கள். பெருமளவில் தமிழ் மக்கள் தான் விகாரைக்குச் செல்கின்றனர். ஆனால் சாதாரண தமிழ் குடிமகன் ஒருவரிற்கு திஸ்ஸ விகாரைக்குள் செல்ல முடியாது. அடுத்த காணியில் இருக்கும் தமிழர் ஒருவருக்கு கூட விகாரைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இராணுவ முகாம் ஒன்றைப் போலத்தான் விகாரையை வைத்து இருக்கின்றார்கள். புத்த பெருமானார் அப்பிடிச் சொல்லி இருக்க மாட்டார்.
நாங்கள் சொல்வது நாங்கள் குடியிருந்த எங்கள் காணிகளில் விகாரையை கட்ட வேண்டாம் என்று மட்டுமே. விகாரை கட்ட எங்கள் கிராமத்தில் வேறு ஒரு இடம் இருக்கின்றது. அங்கே சென்று விகாரையை கட்டுங்கள்> எங்களிற்கு எங்களது சுதந்திரத்தை தந்து விட்டு என்றே நாங்கள் கேட்கின்றோம்.
திஸ்ஸ விகாரை தொடர்பாக வடக்கு அரசியல் தலைவர்களின் கருத்து.
திஸ்ஸ விகாரையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலங்களில் வெவ்வேறு பிரிவினரினால் எதிர்ப்பு நடவடிக்கைகள் பல மேற் கொள்ளப் பட்டதுடன்> அதில் யாழ் மாவட்டத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் பக்கச் சார்பான அரசியல் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன்> கஜேந்திர குமார் பொன்னம்பலம்> செல்வராஜா கஜேந்திரன்> எம். ஏ. சுமந்திரன்> டி. சித்தார்த்தன்> எஸ். ஸ்ரீதரன் உட்பட யாழ் மாவட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களின் காணிகளிற்குள் திஸ்ஸ விகாரை கட்டப்டுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
சிவில் அமைப்புகள் பலவும் தமிழ் மக்களின் காணிகளை எடுத்து திஸ்ஸ விகாரை கட்டப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
தி;ஸ்ஸ விகாரை மற்றும் பிரதேச தமிழ் மக்களிற்கு இடையில் இடம் பெறும் பிரச்சனை தொடர்பாக விசாரிப்பதற்காக திஸ்ஸ விகாரையின் தலைமை தேரரைத் தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்த போதும் தேரர் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.