
கிழக்கு மாகாணம் சித்தாண்டியில் கால்நடை மேய்ப்பர்களின் அமைதியான போராட்டம்.
Published
கிழக்கு மாகாணம் சித்தாண்டியில் கால்நடை மேய்ப்பர்களின் அமைதியான போராட்டம்.
மயிலத்தமடு பாற்பண்ணை விவசாயம் மேற்கொண்டுவரும் கிழக்கு மாகாணத்தின் சித்தாண்டி தமிழ் பாற்பண்ணைவிவசாயிகள் 2023 செப்டெம்பர் 15 ஆம் திகதிமுதல் தமது உரிமைகளை கோரி தொடர்ச்சியாக எதிர்ப்புபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்றுடன் போராட்டம் 146 நாட்களை கடந்துள்ள நிலையில். மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை மேய்ப்பிற்காக ஒதுக்கப்பட்ட மேய்ப்பு காணிகளை சட்டவிரோதமாகஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்களை வெளியேற்றி தமிழ், சிங்களம், முஸ்லிம் கால்நடை விவசாயிகளுக்குஇடையூறு இல்லாமல் தமது பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான இடவசதிகளை வழங்க வேண்டும் என்பதேபோராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.

மயிலத்தமடு வரலாறு, 1972 ஆம் ஆண்டுமுதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாற்பண்ணைகளின் கால்நடைகளைமேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும். 15,000 ஹெக்டேயருக்கும் மேலான இந்த பூமி பிரதேசமானது மாதுருஓயா பூங்காவிற்குள் அமைந்துள்ளது. இந்த காணி தற்போது மகாவலி அதிகார சபையின் கீழ் மகாவலி பி வலயத்திற்குஒதுக்கப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களையும் சேர்ந்த 990 க்கும் மேற்பட்ட பால்பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளை பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 500,000 கால்நடைகளில் 300,000 க்கும் மேற்பட்ட கல்நடைகளுக்குமயிலத்தமடு பகுதியிலிருந்தே தீவனத்திற்கான புல் பெறப்படுகின்றது. கால்நடை வளர்ப்பு மூலம் சுமார் 3000க்கும்மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன் கிடைக்கின்றது. 1980களில்தெற்கில் இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய போராட்ட குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்றயுத்தம் காரணமாக அனேகமான மக்கள் மயிலத்தமடுவிற்கு வருவதை நிறுத்திவிட்டனர். எனினும் 2009ஆம் ஆண்டுயுத்த சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் பால் பண்ணையாளர்கள் தமது வாழ்வாதாரத்தைக் மேம்படுத்துவதற்காகமயிலத்தமடு பகுதிக்குள் பிரவேசித்த போதிலும் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்அவர்கள் அங்கே செல்வதற்கான அனுமதியை வழங்கவில்லை. எனினும் கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே செங்கலடிமற்றும் கிரண் பிரதேச செயலாளர்கள் மயிலத்தமடு பிரதேசத்தை மீண்டும் பாற்பண்ணை விவசாயிகளுக்கான தடையைநீக்கி அவர்களுக்கு அங்கு உள்நுவழைவதற்கான அனுமதியை வழங்கினார்கள். அதன்பிறகு, அதாவது 2010, 2011-ம்ஆண்டுகளில் பால் பண்ணையாளர்கள் தடையின்றி கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், 2012-ம் ஆண்டுபால் பண்ணைக்கான இடையூறுகள் வர ஆரம்பித்தன.
2012 ஆம் ஆண்டில் தெஹியத்தகண்டிய, பொலன்னறுவை மற்றும் அரலகங்வில ஆகிய பிரதேசங்களில் இருந்துவருகைத்தந்த மக்கள் பலவந்தமாக மைலத்தமடு கறவை மாடுகளின் மேய்ச்சல் நிலங்களில் பயிர் செய்கைகளைமேற்கொண்டனர். அதுவே இன்று பொங்கி எழும் மயிலத்தமடு பால் பண்ணையாளர்களின் பிரச்சினையின்ஆரம்பமாகும். மாதுரு ஓயா வனப்பகுதியில், மனித நடமாட்டத்தை குறைக்கும் நோக்கில் மாடு வளர்ப்புக்கு மாத்திரம்இட ஒதிக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல் பலவந்தமாக வந்த மக்கள் வன நிலத்தைஆக்கிரமித்து தற்காலிக குடியிருப்புகளை அமைத்து பாரிய அனுமதியற்ற பயிர்ச்செய்கை நிலமாக அதனைமாற்றியுள்ளனர். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேய்ச்சல் நிலம்போதுமானதாக இல்லாத நிலையில், சட்டவிரோதமாக விவசாயம் செய்ய வந்த விவசாயிகளின் பயிர்செய்கையினாள்மேய்ச்சல் நிலம் மேலும் குறைவடைந்துள்ளது. சட்டவிரோதமாக ஊடுருவிய விவசாயிகள் கால்நடை மேய்ச்சல்நிலங்களில் மட்டுமின்றி, அனுமதியற்ற மற்றும் பாதுகாப்பற்ற மின்வேலிகளை அந்த விவசாய நிலங்களை சுற்றிஅமைத்தனர், இதன் காரணமாக மின்வேலிகளில் அடிபட்டு கறவை மாடுகள் இறந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல்சட்டவிரோத விவசாயிகள் கால்நடைகளுக்கு விஷம் கொடுப்பது, கூர்மையான ஆயுதங்களால் தாக்குவது மற்றும்துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், சட்டவிரோதமாக மேய்ப்பு நிலங்களில் விவசாயம் மேற்கொண்டு வருபவர்களுக்கு எதிராகசட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக, பால் பண்ணை வைத்திருப்பவர்களின் மீது சட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க வருகையுடன் மயிலத்தமடுபாற்பண்ணையாளர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் வேகமெடுத்துள்ளது. இது தொடர்பாக பாற்பண்ணையாளர்களிள்கருத்து யாதெனில், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாகதேர்வுசெய்யப்பட்ட பின்னர், அந்த அரசியல் அதிகாரத்தின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் இந்த அனுமதியற்றமேய்ப்பு நிலங்களை ஆக்கிரமித்து பலவந்தமாக விவசாயம் செய்து வருகின்றவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதரவுமற்றும் தூண்டுதலினால் தாங்கள் பாதிக்கப்படுவதாக பாற்பண்ணை விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் மயிலத்தமடு பால் பண்ணை விவசாயிகளின்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்துள்ளார். இதன்மூலம் அறியப்பட்ட தகவல் யாதெனில், 1975 ஆம் ஆண்டு மகாவலி பி வலயத்திற்குட்பட்ட மைலத்தமடு காணி கால்நடை வளர்ப்பிற்காக பதிவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அந்தவருடத்திலேயே மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இது தொடர்பாக வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உத்தரவுஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவின்படி, மயிலத்தமடு பகுதிக்கு வருகைத்தந்து பலவந்தமாக விவசாயம்செய்பவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டும் என்பதாகும். ஆனால் வனத்துறையினர் இந்த உத்தரவைபுறக்கணித்துள்ளனர்.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தெஹியத்தகண்டி நீதவான்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நீதவானின்தீர்ப்பின் பிரகாரம் மயிலத்தமடு பாற்பண்ணையாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மகாவலிஅதிகாரசபை அல்லது வனப் பாதுகாப்புத் திணைக்களம் அந்த நேரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதித்தாவது அந்தநேரத்தில் அனுமதியற்ற சகல பயிர்ச்செய்கையாளர்களையும் அகற்றுவதற்கான நடிவடிக்கையை மேற்கொள்ளாமல்இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில்இந்த அனுமதியற்ற பயிர்ச் செய்கையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து, அனுமதியற்ற பயிர்ச்செய்கைகளை அகற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, மயிலத்தமடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாகவிவசாயம் செய்பவர்களின் 106 வீடுகளையும், ஏறக்குறைய 300 குடும்பங்களையும் வெளியேற்றுவதற்கு மகாவலிஅதிகாரசபை மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு நீதிமன்ற உத்தரவுகளிலும்மயிலத்தமடு பாற்பண்ணையர்களின் உரிமை ஏற்றுக்கொள்ளபட்டிருந்தமையினால் 2019 ஆம் ஆண்டுவரை எந்தஇடையூறும் இல்லாமல் பாற்பண்ணை தொழில்லை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் மயிலத்தமடு பாற்பண்ணை விவகாரம் புதிய முகத்தில் உருவெடுத்தது. மீண்டும் சட்டவிரோதவிசாயிகள் மூலம் மயிலத்தமடு பாற்பண்ணை விவசாயிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். கால்நடைவளர்ப்பவர்களின் பல குடில்களுக்கு தீ வைப்பது, பட்டாசுகளை வைத்து கால்நடைகளை காயப்படுத்துவது, கால்நடைவளர்ப்பவர்களை தாக்குவது, கால்நடைகளை சுட்டுக் கொல்வது போன்ற செயல்களை சட்டவிரோதமாக குடியேறியவிவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிராக தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததோடு, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம்சட்டவிரோத குடியிருப்பவர்களை வெளியேற்றுமாறு மஹாவெளி மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. ஆனால் மகாவலி அதிகாரசபை மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் நீதிமன்ற உத்தரவைதொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது. அத்துமீறி பயிரிடும் விவசாயிகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றத்தின்உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கமயிலத்தமடு பாற் பண்ணையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மயிலத்தமடு பிரதேசத்தில் சட்டவிரோதமாக விவசாயம் செய்பவர்களை அகற்ற உத்தரவிடுமாறு கோரி மகாவலிஅதிகாரசபையினால் 2023 ஆம் ஆண்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலான தீர்ப்புதற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி விவசாயம் செய்பவர்களை அகற்ற வேண்டும் என அந்த தீர்ப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதியற்ற பயிர்ச் செய்கையாளர்களை அகற்றுமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், 2023 அக்டோபர் மாதத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் மயிலத்தமடு பாற்பண்ணை விவசாயிகளை சந்திப்பதற்காக வந்துள்ளார். ஜனாதிபதிபாற்பண்ணையாளர்களை சந்தித்ததை கேள்விப்பட்ட சட்டவிரோத விவசாயிகள் இதுவரை சுமார் 300 மாடுகளுக்குமேல் கொன்று குவித்துள்ளனர். சட்டத்தை நாடிய போதும், சட்டம் அமுல்படுத்தப்படாமை காரணமாக மயிலத்தமடுபாற்பண்ணையாளர்களின் உயிருக்கான ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கமைய மயிலத்தமடுபாற்பண்ணையர்களின் கருத்து யாதெனில், தென்னிலங்கையர்கள் நினைப்பது போல் சிங்களவர்களின் கால்நடைவளர்ப்பிற்கு ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என்பதாகும். அவர்களின் கோரிக்கை யாதெனில், மயிலத்தமடுபகுதியில் தடைசெய்யப்பட்ட விவசாயத்தை அகற்றி, கால்நடை வளர்ப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும்தேவையான சூழலை முன்பு போல் உருவாக்கித் தர வேண்டும் என்பதாகும்.