
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை: ஒரு அறிமுகம்
Published
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை: ஒரு அறிமுகம்
நோக்கம்
இவ் அறிக்கையின் நோக்கானது, இலங்கையின் காணி தொடர்பான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் முகாமைத்துவ விடயங்களை தெரியப்படுத்தி செயற்படுவதோடு காணிப் பிரச்சனை காரணமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதத்தில்பொறிமுறை மாற்றியமைப்பது, வாழ்க்கையை மேம்படுத்தல், சூழலின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதி செய்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக சமூக பொறுப்புணர்வுடன் செயற்படல் போன்ற விடயங்களை மையப்படுத்தியதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையானது காணிப் போராட்டங்களுக்கு தீர்வை வழங்காது மாறாக காணி மற்றும் மக்களுடன் தொடர்புபட்டு செயற்படுவதிலுள்ள நன் நடைமுறைகள், பொறிமுறைகள், வழிகாட்டி விழுமியங்கள் மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டியவை போன்றவற்றை பரிந்துரை செய்கின்றது.
செயன்முறை
தற்போதுள்ள நிலக் கொள்கைகள், நிலச் சட்டங்கள் மற்றும் நில நிர்வாக நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளின் விளைவாக சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் ஆராயும் நோக்கத்துடன் Pடுஊ 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் மக்களின் கரிசனைகளை தொடர்பில் இந்த ஆலோசனை செயல்முறை கவனம் செலுத்தியது.
காணி தொடர்பான மக்களின் ஆணைக்குழு (PARL) அனுபவம் வாய்ந்த 11 சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞ்சர்களைக் கொண்டுள்ளது. இவ் ஆணைக்குழுவானது, 2019 மார்ச் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் கள விஐயங்களை மேற்கொண்டு அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, ஹட்டன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, மாத்தறை, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய 18 மாவட்டங்களில் பிரச்சனைக்குரிய பிரதேசங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பாதிக்கபட்ட மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது. இவ் ஆணைக்குழுவானது மொத்தமாக 885 பேருடன் பேசியிருந்தது.
குறித்த அறிக்கையானது ஐந்து முக்கிய கருப்பொருட்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட தற்போதைய பிரச்சினைகளை விபரிக்கின்றது. அவையாவன-
1. நிலங்களுக்கான உரிமை இழப்பு
2. வாழ்வாதாரம் மற்றும் சமூகபாதுகாப்பு இழப்பு
3. சுற்றுச்சூழல் அழிவு
4. அடையாளம் இழப்பு
5. நில உரிமை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பெண்களின் போராட்டம்.
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையின் விடயங்களை எதிர்காலத்தில் நாம் உங்களுக்கு சுருக்கமாக தொகுத்து வழங்க உள்ளோம்.