
நாங்கள் இறந்தவுடன் எங்களுக்கு ஒரு பிரேதப்பெட்டியை மாத்திரம் வழங்குகின்றனர் !
Published
நாங்கள் இறந்தவுடன் எங்களுக்கு ஒரு பிரேதப்பெட்டியை மாத்திரம் வழங்குகின்றனர் !
மூன்று மாதகாலமாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுகின்ற ரம்பொட ஆர்.பீ தோட்டத்தின் தொழிலாளர்களின் கதை.
ரம்பொட எனும் இடம் நாவலப்பிட்டியில் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த இப்பிரதேசத்திற்கு செல்கின்ற நீங்கள் அழகிய தேயிலைத் தோட்டங்களைக் காணலாம். முகில் கூட்டங்கள் மலை உச்சிகளைத் தொட்டுச் செல்லும் விதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். இலங்கையிலிருந்து உலகம் பூராகவும் சென்றுள்ள விலையுயர்ந்த சிலோ ரீ தேயிலை நாமத்தின் தேனீரைச் சுவைத்துக் கொண்டு உங்களுக்கு இனிமையான காட்சிகளை இரசிக்க முடியுமாயின்> ஆம்! நீங்கள் பாக்கியசாலியாவர்.
இக்கதையை முன்கொண்டு செல்வதற்கு, உங்களை ஒரு புகைப்படக் கலைஞராக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வண்ணமயமான காட்சிகளைப் பார்த்து இரசிக்க விரும்புவதாயின்> உங்கள் கமராவை தொலைதூரத்திற்கு நகர்த்த வேண்டும்.
ஆனாலும் இந்தத்தடவை குறுந்தூரத்திற்கு உங்கள் கமராவை நகர்த்துங்கள். உங்களுடைய கமராவை மேலும் அருகிலுள்ள காட்சிகளுக்கு நகர்த்தினால்> அந்த மலைகளுக்கிடையே லயின் வீடுகள் தென்படும். மேலும் கமராவை நெருக்கமான காட்;சிகளுக்கு நகர்த்தினால்> மனிதநேயமற்ற முறையில் சுரண்டலுக்கு ஆளாகின்ற மனிதர்களின் துயரங்கள் நிறைந்த முகங்களைக் காணலாம்.
அநீதிகளுக்குள்ளாகி, வாழ்க்கைப் போராட்டத்தின் அனைத்துவித இடைநேர்வுகளால் பாதிக்கப்பட்டு> துயரங்களுடன் அதிகாரம் படைத்தவர்களுக்கு முன்னால் மண்டியிட்டு> எதுவுமே செய்ய முடியாத நிலையில் புலம்பி வாழ்கின்ற வாழ்க்கையைக் காணலாம்.
நீங்கள் அந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். ஆனாலும் ஒரு தவறைச் செய்யக்கூடாது. நீங்கள் அவர்களுடைய வாழ்வைப் பார்த்து “ஐயோ பாவம்” என்று அனுதாபப்படக் கூடாது. உங்களுடைய அனுதாபப் பெருமூச்சுக்களால்> பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த மக்கள் இந்தியாவிலிருந்து வருகைதந்து 200 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி மன்னாரிலிருந்து மாத்தளை வரைக்கும் ‘மாண்புமிகு மலையக மக்கள்’ எனும் மகுட வாசகத்துடன் நடைபவனியாக வந்து நாட்டிற்குக் கூறிய முக்கியமான செய்தியொன்று உள்ளது.
அவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை. அவர்களுக்கு இவ் அழுத்தங்களை தொடர்ந்தும் சுமந்துகொண்டு பெருமூச்சுக்களை வாங்கிக்கொண்டு இருக்க முடியாது. அனைத்து அநீதிகளுக்கும் இடமளித்து மௌனித்து இருக்க முடியாது. யாருக்கும் மண்டியிடாமல் மலையக மக்கள் சொந்தக் காலில் எழுந்து நிற்க வேண்டும். ரம்பொட ஆர்.பீ. பிரிவு தோட்டத்தை நோக்கிச் நகரும் கமராவுக்கு அவ்வாறான பதிவொன்று உள்ளது. அந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு> அவர்களுடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்> தோட்ட உரிமையாளர்களும் அனைத்துவிதமான ஆயதங்களையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைக் காணலாம்.
இலகுவான மொழியில் கூறினால், அவர்களின் போராட்டம் இதுவாகும். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஈபிஎஃப்/ஈரீஎஃப் (ஊ.சே.நி/ஊ.ந.பொ.நி) மற்றும் ஏனைய வசதிகளைக் கோரிக்கைகளாக முன்வைத்து இதுவரை எட்டுத் தடவைகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தோட்டத்தின் உரித்துத் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதுதொடர்பாக நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தொழிலாளர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர்களின் பக்கத்தை எடுத்துக் கொண்டால்> அவர்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ளும் முதலாளிமார்> தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களின் பொறுப்பு மாத்திரமல்ல> அது நாட்டிலுள்ள சட்டமாகும். ஓய்வூதிய நிதியத்திற்காக இத்தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிட்டுக் கொண்டாலும்> குறித்த தொகை ஒருபோதும் ஈபிஎஃப்/ஈரீஎஃப் நிதியத்தில் வைப்புச் செய்யப்படவில்லை. இந்த அநீதிக்கு எதிராக அண்மைக் காலத்தில் எட்டுப் போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
2023 மே மாதம் 16 ஆம் திகதி அவர்களுடைய புதிய வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்தது. இதுவரை மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஆனாலும்> அவர்களுடைய போராட்டத்திற்கு தோட்ட அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலளிப்புக்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக மூன்று சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இம்மனிதர்களும் உணர்வு கொண்ட> பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் அல்லவா? அவர்கள் வெறுமனே மனித வளங்களாகவே பார்க்கப்படுகின்றனர். தேயிலைத் தோட்டக் காணிகள்> தேயிலைச் செடிகள்> இயந்திரோபகரணங்கள் வாகனங்களைப் போலவே தொழிலாளர்களையும் அவர்கள் உயிரற்ற சடப்பொருட்களாகவே கருதுகின்றனர்.
2023 மே மாதம் 16 ஆம் திகதி அவர்களுடைய புதிய வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்தது. இதுவரை மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஆனாலும்> அவர்களுடைய போராட்டத்திற்கு தோட்ட அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலளிப்புக்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக மூன்று சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இம்மனிதர்களும் உணர்வு கொண்ட> பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் அல்லவா? அவர்கள் வெறுமனே மனித வளங்களாகவே பார்க்கப்படுகின்றனர். தேயிலைத் தோட்டக் காணிகள்> தேயிலைச் செடிகள்> இயந்திரோபகரணங்கள் வாகனங்களைப் போலவே தொழிலாளர்களையும் அவர்கள் உயிரற்ற சடப்பொருட்களாகவே கருதுகின்றனர்.
அவ்வளங்களில் பயனில்லை என்றால், துரத்திவிட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாகும்.
2023 யூலை மாதம் 05 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘2023 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை. நீங்கள் பணிக்குச் சமூகமளிக்காதமையாலும், கடிதங்களுக்குப் பதிலளிக்காமையாலும், இதனை இறுதி அறிவித்தலாகக் கருதுமாறு அறியத்தருகின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதம் கிடைத்த பின்னர் நீங்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். 07 நாட்களுக்குள் பணிக்குச் சமூகமளிக்காவிடின் தாங்கள் சுயவிருப்பில் பணியிலிருந்து விலகியதாகக் கருதப்படும். உங்களுடைய பெயர் இடாப்பிலிருந்து நீக்கப்படும். இல்லாவிடின், தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், உங்களுக்குப் பதிலாக வேலைக்கமர்த்தப்படும் நபர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். நீங்கள் பணிக்கு சமூகமளிக்காமையால் ஏற்படும் நட்டங்கள் தங்களிடமிருந்து அறவிடப்படும்.
முகில் கூட்டங்களின் அழகையும் கடந்து நகர்கின்ற உங்கள் கமராவில் தற்போது வல்லமையான மனிதர் ஒருவரைக் காண்கின்றீர்கள். அவர் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபடும் குழுவின் தலைவர். அவருடைய பெயர் எஸ் ராஜேந்திரன். அவர் இவ்வாறு கூறுகின்றார்.
We have been working in this estate from the year 1990.
‘1991 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் வேலை செய்கின்றோம். நிர்மலா வெள்ளைச்சாமி தோட்டத்திற்கு எங்களை பணிக்கமர்த்தினார்கள். பின்னர் 2015 ஆம் ஆண்டில் உரிமம் மாற்றப்பட்டு புஷ்பராஜ் வந்தார். ஆனாலும், ஈபிஎஃப் செலுத்தவில்லை. நாங்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து இதுதொடர்பாகக் கூறினோம். அவர்கள் எங்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனாலும், எதுவுமே நடைபெறவில்லை.’
அவர்கள் 1991 ஆம் ஆண்டு தொடக்கம் வேலை செய்கின்றோம். தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களும் அந்தக் காலத்திலேயே வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருவது இந்தத் தோட்டத்திலேயாகும்.
‘2019 இல் நாங்கள் புஷ்பராஜ் அவர்களின் நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வருடகாலம் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வீட்டிலிருந்தோம். அவர்கள் பலவந்தமாக ஒரு புதிய முதலாளியைக் கொண்டு வந்தனர். அவர் ஈபிஎஃப் செலுத்துவார் எனக் கூறினார்கள். புஸ்ஸல்லாவையிலுள்ள சீடப்ளிவ்சீ அலுவலகத்திலுள்ள பரத் அவர்கள் எமக்கு ஈபிஎஃப் செலுத்துவதற்கான உடன்பாட்டுக்கு வந்தார்.
அவர்கள் எங்களுக்கு செலுத்துவதாகக் கூறினார்கள். ஆனாலும் செலுத்தவில்லை.
2023 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் நாங்கள் வேலைக்குப் போகவில்லை. எங்களை எவருமே கவனிக்கவில்லை. ஆனாலும், எங்களில் 65 பேருக்கு மூன்று கடிதங்கள் கிடைத்தன. அக்கடிதங்களில் கூறப்பட்டவை, நீங்கள் வேலைக்கு வருகை தராவிட்டால் வீடுகள் இல்லாமல் போகும் எனத் தெரிவித்திருந்தனர்.
எங்களுடன் எவருமே கலந்துரையாடவும் இல்லை.
காடு வளர்ந்த காணிகளில் நாங்கள் இருந்தோம். ஆனாலும், பொலிசார் தலையிட்டு எங்களுக்கு எதிராக செயற்பட்டனர். எங்களை மூன்று நாட்களுக்குள் அக்காணிகளிலிருந்து வெளியேறுமாறு கூறினார்கள். என்னையும் பொலிசுக்கு அழைத்துச் சென்று காணியிலிருந்து வெளியேறுமாறு சுறினார்கள்.
எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எவருமே எங்களைப் பற்றிக் கவனிப்பதில்லை.
அதுதவிர எங்களிடம் எதுவுமில்லை. எங்களுக்குப் பாடசாலையொன்று இல்லை. எங்களில் யாராவது உயிரிழந்தால் பிரேதப் பெட்டிக்கு மாத்திரம் பணம் வழங்கினார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேற்றின் போது எடுத்துச் செல்வதற்குக் கூட எங்களிடம் பணமில்லை.
மருத்துவமனையொன்று இல்லை. கர்ப்பிணித் தாயொருவருக்கு மகப்பேற்றின் போது மருத்துவமனைக்கு செல்வதற்குக் கூட போக்குவரத்து வசதிகள் இல்லை.
உங்களிடமிருந்து ஏதாவது கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய கதையைக் கூறுகின்றோம்.
இங்கு அவர்கள் சீடப்ளிவ்சீ எனக் கூறுவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகும். பொதுவாக மக்களுடைய அறிவுக்கெட்டிய வகையில் ‘தொண்டமானின் கட்சியாகும்’. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சியை போல தேர்தலில் போட்டியிடுவதுடன்> தொழிற்சங்கமாகவும் இயங்குகின்றது. ஆனாலும்> இந்தப் போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றனர்.
இங்கு அவர்கள் கூறுகின்ற புஷ்பராஜ் மற்றும் புதிய முதலாளிமார் போன்றோர் தோட்ட உரித்துக்காக பிளவுபட்டு தோட்ட நிர்வாகத்திற்குப் போட்டியிடுகின்ற குழுவினர்.
உண்மையாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தின் உரித்துப் பற்றிய சட்ட ரீதியான பிளவுகளின் போது புதிய முதலாளிமாரை நியமிக்கவும்> அந்தந்த முதலாளிமாருடன் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய விடயங்கள் பற்றி ‘மீறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்ட’ வாக்குறுதிகளை வழங்குவதற்குமே செயற்படுகின்றனர்.
நீங்கள் உங்களுடைய கமராவை> லயின் அறைகளுக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் முதிய பெண்களை நோக்கித் திருப்பினால் இவ்வாறு கூறுவார்கள்.
‘நாங்கள் 1991 ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்கின்றோம். அடிக்கடி முதலாளிமார் மாறுகின்றனர். ஆனாலும்> நாங்கள் ஒரே பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றோம். அவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அவர்கள் எங்களை நாவலப்பிட்டிக்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனாலும்> பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் இல்லை. தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் புதிய முதலாளிமாரை மாற்றுகின்றார்களே தவிர எங்களுக்கு உதவி செய்யவில்லை.
‘நாங்கள் இப்போது மூன்று மாதகாலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடாத்துகின்றோம். தொழிற்சங்கங்கள் எங்களை மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு கூறுகின்றார்கள். எவருமே எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளைக் கேட்பதில்லை. இங்கு வேலை செய்கின்றவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நாங்கள் நம்பிக்கை வைத்துத்தான் வேலைக்குச் சென்றோம். ஆனாலும், எங்களை இவ்வாறுதான் கவனிக்கின்றார்கள்.’
அவருக்கு அருகிலிருக்கின்ற அம்மா இப்படிக் கூறுகின்றார்.
‘நான் இங்கு வந்து 54 வருடங்கள் ஆகின்றன. நான் இங்குதான் பிறந்தேன். எனது அம்மாவும் இந்தத் தோட்டத்தில்தான் பிறந்துள்ளார். எனது அம்மா தனது 72 ஆவது வயதில் 2020 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். எனது கணவரும் இங்கேயேதான். எது அம்மா இறந்தபோது பிரேதப் பெட்டி வாங்குவதற்கு 3000 ரூபா கொடுத்தார்கள். அந்தப் பிரேதப் பெட்டியைத் தவிர அவர்கள் எங்களுக்கு எதுவுமே வழங்கவில்லை.’
ஆர்.பி தோட்டத்தின் உரித்து சற்று சிக்கலான விடயமாகும். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்ற ஏபிஎன் 16/2016 ஆம் இலக்க காணி உரித்துத் தொடர்பான வழக்கில் காணப்படுகின்ற தகவல்களை மூலங்களாகக் கொள்ளலாம். ரம்பொட தோட்டம் 837 ஏக்கர்களைக் கொண்டது. அதில் அமைந்துள்ள ஆர்.பி தோட்டப்பகுதி 50 ஏக்கர்களைக் கொண்டது. ரம்பொட தோட்டம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்பட்டு> பின்னர் மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களின் பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும்> இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர் தோட்ட உரித்துப் பற்றிய பிரச்சினை மேலெழுந்துள்ளது.
தோட்டக்காணி சரியான வகையில் பராமரிக்கப்படாததுடன்> காடு வளர்ந்து காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தோட்டத்தின் தரம் குறைவாகையால்> வாரத்தில் வேலை நாட்கள் குறைவாகும். அதனால் மாதாந்த சம்பளம் குறைவு. சரியான வகையில் சம்பளம் செலுத்துவதில்லை. இவை ஓய்வூதிய நிதியத்திற்கு பணம் செலுத்தாத பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கமாக இருந்தாலும்> அவர்கள் தோட்ட நிர்வாகத்தை பெறுமதியாகக் கருதுகின்றனர். அதற்கு இத்தோட்ட உரிமையாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களின் உறவினர்களாக இருப்பதாலேயே> அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
பல பரம்பரைகள் வாழ்ந்துவந்த காணிகளிலிருந்து அவர்களை வெளியேற்றத் தயாராகி வருகின்றனர். அவர்கள் ஈட்டிய கொடுப்பனவுகளை நீக்குவதற்கு தயாராகின்றனர். எவ்வித வசதிகளும் வழங்காமல்> பலவந்தமாக அவர்களிடம் வேலை வாங்குவதற்குத் தயாராகின்றனர். அவர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். நாங்கள் அவர்களுடைய போராட்;டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.