
‘உருமய’ வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தெரிந்திருக்க வேண்டிய காரணங்கள்.
Published
‘உருமய’ வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தெரிந்திருக்க வேண்டிய காரணங்கள்.
1. அரசின் உருமய வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவது என்ன?
அரசு கூறுவது போன்று இது இலங்கையில் அன்றும் இன்றும் செயற்படுத்தப்பட்டு வரும் மிகப்பா ரிய தனியார்மயமாக்கல் செயற்திட்டமாகும். இதன் கீழ் இரண்டு மில்லியனுக்கு உறுதிப்ப த்திர உரிமைக் கொண்ட விற்பனை செய்யக்கூடிய உரிமங்களை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தின் கீழ்ம ட்டுப்படுத்தப்பட்ட காணி உரிமங்களுக்கு உட்பட்ட ஆட்சி உரிமை சம்பந்தமாக மக்களுக்கு பெற்றுக்கொ டுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு சுதந்திர அன்பளிப்புப் பத்திரம் பெற்றுக் கொடுத்து அக்காணிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய உறுதிப்பத்திர காணி உரிமங்கள் பெற்றுக்கொ டுக்கப்படும்.
2. உருமய வேலைத்திட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுக் கொள்ள முடிவது யாருக்கு?
தற்போது அரசின் அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தின் கீழ் அரசு காணிகளை ஆட்சி உரிமை எந்த ஒரு நபருக்கும் இது சம்பந்தமாக விண்ணப்பம் செய்ய முடியும். இங்கே தம்மிடம் இருக்கும் அரசின் அளிப்புப் பத்திரம் மற்றும்அ னுமதிப் பத்திரத்தினை சமர்ப்பித்தல்வே ண்டும். தற்போது அரசின் அளிப்புப் பத்திரமோ மற்றும் அனுமதிப் பத்திரமோ இல்லாத எவருக்கும் இச்செயற்திட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட மாட்டாது. இதன்படி மலையகத்தில்கா ணி இல்லாத மக்களுக்கு அல்லது வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த காலத்தில் மற்றும்அ தன் பின்னர் காணி பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும்மே லும் நகர்புர காணி மற்றும் வீடுகள் அற்ற மக்களுக்கும் இதன் கீழ் காணி உரிமை வழங்கப்பட மாட்டாது. அபிவிருத்தி செயற்திட்டங்கள் மூலம் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமை பிரச்சினைகள் சம்பந்தமாக இங்கே அவதானம் செலுத்தப்படவில்லை.
3. தற்போது இருக்கும் அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தின் கீழ் நடைமுறை காணிகள் சம்பந்தமாக அரசுக்கு இருக்கும் அதிகாரம் என்ன?
தற்போது அரசின் அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தின் ஊடாக பெற்றுக்கொ டுக்கப்பட்டுள்ள காணிகள் வழங்கப்பட்டுள்ளது, விவசாய நடவடிக்கைகளுக்காகவே ஆகும். இக் காணிகள் அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரம் உரித்தான நபரின் குடும்பத்திற்கு (இரத்த உறவு) வெளியே எவருக்கும் உரித்தாக்க முடியாது. இக் காணிகள் சம்பந்தமாக உரித்தாக்கம் செயற்படுத்தப்படும் போது இறுதியான தீர்வையாளராவது பிரதேச செயலாளர்ஆ வார். குடும்பத்திற்கு வெளியே பிரதேச செயலாளராக உரித்தாக்கம் செய்யப்படும்ச ந்தர்ப்பங்களில் கூட இக் காணிகள் விவசாய உறுப்பினருக்கு வெளியே வழங்கப்பட முடியாது. பிரதேச செயலாளர் அனுமதியோடு இக் காணியினை ஈடு வைக்கப்பட்டு அது மூழ்கி போகும்ச ந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த காணியை வழங்க முடிவதும் விவசாய வகுப்பினை சார்ந்த ஒரு நபருக்கே. இதன் பிரகாரம் இக் காணிகள் வேளாண்மை செயற்பாடுகள் சம்பந்தமாக விவசாய குடும்பங்களுக்கு மாத்திரமே உரித்தாகும் என்பதோடு அதற்கு வெளியே வேறு எவருக்கும் இக்கா ணிகள் வழங்கப்படக்கூடாது என அரசுப் பிரதிநிதியான பிரதேச செயலாளர் கவனித்தல்வே ண்டும் இக் காணிகள் சம்பந்தமாக ஏற்படும் பிணக்குகள் சம்பந்தமாக அவற்றை தீர்த்து வைப்பதற்கு பிரதேச செயலாளர் பங்களிப்பு செய்வார்.
4. தற்போது காணி உரிமம் சம்பந்தமாக பிணக்குகள் கொண்ட காணி நிலங்கள் சம்பந்தமாக இச்செயற்திட்டம் மூலம் என்ன நடக்கலாம்?
தற்போது இந்த சகல காணிகளும் அரசுக்கு உரித்தானது என்பதோடு ஏதாவது பிணக்குகள்ஏ ற்படும் பட்சத்தில் அதனை தீர்மானிக்கும் அதிகாரம் அரசுப் பிரதிநிதியான பிரதேச செயலாளருக்கு உடையதாகும். ஆயினும் உறுதிப் பத்திர உரிமம் பெற்றுக் கொடுத்ததன்பி ற்பாடு காணிகள் சம்பந்தமாக அரசின் பொறுப்புகள் நிறைவடைவதுடன் உரிமம் கொண்ட காணிகள் சுதந்திரமாக விற்பனை செய்வதன் மூலம் வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கு முடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் காணிகள் சம்பந்தமாக உரிமை கோருகின்ற மாற்று பங்குதாரர்களின்கு றை நிறைகள் சம்பந்தமாக அரசு தலையீடு செய்ய முடியாது. உருமய செயற்திட்டம் மூலம்உ ரிமம் பெற்றுக் கொடுக்கும் போது அது சம்பந்தமாக விளைவுகளை சந்திக்கும்ப ங்குதாரர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு எந்த விதிமுறையும் இல்லை என்பதோடு அக்கு றைநிறைகள் சம்பந்தமாக விசாரணை செய்து பிழையினை திருத்தம் செய்வதற்கான பொறிமுறை ஒன்று இல்லாது போயுள்ளது. இதன்படி ஏதாவது ஒரு முறையில் உரிமம் பெற்றுக்கொ டுக்கும் போது பிழைகள் ஏற்பட்டால் தீங்கிழைக்கப்பட்டுள்ள பங்குதாரருக்கு அதனை சரி செய்து கொள்வதற்கு வழியில்லை. இது புதிதாக காணி பிணக்குகளை உருவாக்குவதோடு தற்போது இருக்கும் பிணக்குகளை மேலும் தீவிரப்படுத்தும்.
5. உறுதிப் பத்திர உரிமம் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் காணிகளுக்கு என்ன செய்ய முடியும்?
உறுதிப் பத்திர உரிமம் உடைய காணி என்றால் அதன் உரிமையாளருக்கு விருப்பப ; பிரகாரம்அ தனை பயன்படுத்த முடியும். அதில் விவசாய நடவடிக்கைகள் செய்யாது பயனுள்ள முறையில்அ தனை கொண்டு நடத்த முடியாத நிலையில் அவருக்கோ அல்லது அவளுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்படாது. உரிமம் உடைய ஒருவர் தம் விருப்பப்படி எவருக்காவது அதனை விற்பதற்கு முடியும். அத்தோடு இங்கே விவசாய வகுப்பினருக்கு அப்பால் மாத்திரம்வ ழங்கப்படக்கூடாது என்ற எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. உரிமம் உடைய உரித்தாளர்தே வை எனில் எந்த தங்குத்தடையும் இன்றி தனது காணியை அடகு வைக்க முடியும்எ ன்பதோடு அப்படி அடகு வைப்பதன் மூலம் அது வேறு ஒருவருக்கு உரித்தானால் அதனை அவர் தனக்கு விருப்பமான எந்தவொரு நபருக்கும் காணியை விற்பதற்கு முடியும்.
6. ‘உருமய’ வேலைத்திட்டத்தின் கீழ் உறுதிப்பத்திர காணி உரித்தாவதால் ஏற்படும் ந~ ;டம்உ ண்டா?
முதலாவது பாதிப்பு என்பது இதன் மூலம் தற்போதுள்ள காணி பிரச்சினைகள் மேலும் சீர்கெட்டு போகும் நிலைமை ஏற்படலாம். தற்போதைய நிலையில் அதிகமானோர் தமது காணிகளுக்கென அளிப்புப் பத்திரமோ மற்றும் அனுமதிப் பத்திரமோ இல்லாத நிலையே காணப்படுகின்றது. கடன்அ ல்லது அடகு வைத்ததன் மூலம் இவை முறையற்ற நிலையில் வேறு ஒருவருக்கு உரித்தாகியுள்ளது. அத்தோடு அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரம் உரித்தான ஆரம்ப முன்னுரிமையாளர் இறந்து போகும் சந்தர்ப்பத்தில் பின்னுருத்து குறிப்பிடப்படாத காரணத்தால்த ற்போது பாரிய காணி முரண்பாடுகள் உருவாகியுள்ளன. இதன்படி தற்போது காணியினை அபிவிருத்தி செய்து பயிரிட்டு கொண்டிருப்பவர் அளிப்புப் பத்திரமோ மற்றும் அனுமதிப்ப த்திரமோ தம்வசம் வைத்துக் கொண்டிருப்பவர் அல்ல. சில சந்தர்ப்பங்களில் காணி சீர்திருத்த சட்டவாக்க பிரகாரம் காணிக்கான உரிமை உடைய குடும்பத்தின் மூத்த பிள்ளை வாழ்வது நாட்டில் வேறு ஒரு பிரதேசத்தில் என்றால் காணியை வேறு ஒருவர் ஆண்டு அனுபவிக்கும்நி லை ஏற்பட்டால் மேற்கூறிய பல்வகையான அளிப்புப் பத்திரமோ மற்றும் அனுமதிப் பத்திரமோ தம்வசம் வைத்திருப்பவர் அந்த காணி சம்பந்தமாக உறுதிப்பத்திர உரிமம் கோர முடியும். இது தற்போதும் தொடரும் சீர்கெட்ட நிலையை மேலும் சீர்கேடாக்கும். இரண்டாவது ந~ ; டம ; ஏற்படுவது உரிமம் கிடைத்ததன் பிற்பாடு அக் காணிகளை தடைகள்எ துவும் இன்றி விற்பனை செய்வதற்கும் மேலும் அடகு வைப்பதற்கும் முடியும் என்பதனால்ஏ ற்படக்கூடிய தன்மைகள் மூலமாக உருவாக்கப்படக்கூடிய பிரச்சினையாகும் அப்படியெனில்உ ரிமம் பெற்ற ஒருவர் தனது காணி விற்பனை செய்தால் அவருக்கோ அல்லது அவரின்கு டும்பத்தாருக்கோ மற்றும் அவர்களின் பரம்பரைக்கோ எந்த விதமான காணி உரிமையும்இ ல்லாது போகும். இங்கே அவரை தங்கி வாழும் (அதிக சந்தர்ப்பங்களில் மனைவி) நபர்கள்நி ர்க்கதியற்றவர்கள் ஆவர். காணியை மிகவும் இலகுவாக அடகு வைக்க முடியும் என்பதால்ப ணத் தேவைகளின் போது காணி உரிமம் உள்ள நபர் மிகவும் இலகுவாக தனது உரிமம்கொ ண்ட காணியை அடகு வைப்பதற்கு முயற்சி செய்யலாம் என்பதோடு தூரநோக்கு கொண்டு சிந்திக்காது எடுக்கும் இப்படியான தீர்மானங்களை செயற்படுத்தும் போது அதன் இறுதி பிரதிபலனாக பெற்றக் கடனை மீளச் செலுத்த முடியாது போய் காணி வேறு ஒருவருக்கு உரித்தாகிவிடும் . அப்போது ஏற்கனவே கூறியது போன்று அக்குடும்பம் நிர்க்கதியாகும். அப்படி வேறு ஒருவருக்கு உரித்தான காணியை அவர் விவசாய உறுப்பினர் அல்லாத எவருக்கும்அ தனை விற்பனை செய்வதற்கு முடியும். அப்போது இக்காணி விவசாய வகுப்பினர் அல்லாத காணி சம்பந்தமாக முதலீடு செய்யக்கூடிய எந்தவொரு தனவந்தருக்கும் இக் காணி கைமாறலாம். இது இந்நாட்டின் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. உருமய வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்படும் உறுதிப் பத்திர உரிமம் மூலம்கி டைக்கும் காணியை விற்பதன் மூலம் அக்குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
பொருளாதாரம் அல்லது வேறு ஏதாவது காரணத்தினை அடிப்படையாகக் கொண்டு மிகவும்இ லகுவாக விற்பனை செய்யக்கூடிய காணியை விற்பனை செய்தவன் பிற்பாடு அக்குடும்பம்கா ணி அற்ற குடும்பமாக மாறும். விவசாய நடவடிக்கைகள் செய்வதற்கு காணி இல்லாத சந்தர்ப்பத்தில் குடும்பத்தின் பொருளாதாரம் மேலும் சரிவடைந்து செல்வதற்கு ஏதுவாகும். சில சந்தர்ப்பங்களில் உறுதிப்பத்திர உரிமையாளர் எடுக்கும் முறையற்ற முடிவுகளால் அதன்ப லனை ஒட்டுமொத்த குடும்பமும் அனுபவிக்க நேரிடும். தற்போது நடைமுறையில் இருக்கும்அ ளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்;தின் கீழ் இருக்கும் காணிகளின் அதன் அளிப்புப்ப த்திர மற்றும் அனுமதிப் பத்திர உரிமையாளர் இறந்து போகும் பட்சத்தில் அவரது மனைவிக்கு அந்த காணியின் வாழ்நாள் உரிமம் உரித்துடையதாகும். ஆயினும் காணியை விற்பனை செய்த பின்னர் இப்படியான அனுசரனை மனைவிக்கு கிடையாது. அடுத்த தலைமுறை அப்படியெனில் குழந்தைகளுக்கும் எந்தவித காணி உரிமை இல்லாமல்போ கும் நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். காணி என்பது அடையாளத்தின் ஒரு பகுதியாகும். யாரேனும் ஏதேனும் கிராமத்திற்கு உரித்தானவரானால் அந்த கிராமத்தின் காணி ஒன்றை உரித்துடையவராக இருக்க வேண்டும். அந்நபர் நிரந்தரமாக காணி அமைந்துள்ள கிராமம் மற்றும் சுற்றாடலுடன் இணைந்து காணப்படுவார். ஆனால் விற்பனை செய்வதால்கா ணியை இழந்த பின்பு முழு குடும்பத்திற்கும் அந்த அடையாளம் இழக்கப்படுவதுடன் நாடு காடு இல்லாது நாடோடியாக அக்குடும்பம் ஆளாகும். ஈடுவைக்கும் காணி ஒன்று மீட்கப்படாத சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட நிலைமையே அதிலும் காணப்படும்
8. உருமய வேலைத்திட்டம் பெண்களை விசேடமாக எவ்வாறு பாதிக்கின்றது?
அரச காணிகளை வழங்கும் வேறு அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரம்; பெரும்பாலும்ஆ ண்கள் பெயரிலே வழங்கப்படுகின்றது. தற்போதைய காலம் வரை பின்னுரித்து பெயரிடப்படாது அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத ;தின் உரிமையாளர்இ றந்துவிட்டால் அந்த காணி குடும்பத்தில் மூத்த ஆண் பிள்ளைக்கே உரித்தாகும். எனவே இதன் காரணமாக பெரும்பாலுமான அளிப்புப் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரம் உடையோர்ஆ ண்களே. உருமய வேலைத்திட்டத்தின் கீழ் உறுதிப் பத்திரம் வழங்குவது அளிப்புப் பத்திரம்ம ற்றும் அனுமதிப் பத்திரம்; உடையோருக்கு மாத்திரமே. ஆகவே புதிதாக உரிமம் வழங்கும்போ து அதி விசேடமாக உறுதிப் பத்திரம் கிடைப்பது ஆண்களுக்கே. எனவே இது மீண்டும்ஒ ருமுறை ஆண்களின் காணி உரிமை ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயற்பாடாகும். உறுதிப்ப த்திர காணி உரிமை கிடைத்த பின்பு அக்காணியை விற்பனை செய்தல், ஈடு வைத்தல்அ ல்லது தான் விரும்பும் எந்தவொரு நபரிற்கும் பரிசாக வழங்க முடியும். எனவே எந்தவொரு தடைகளும் இன்றி குடும்பத்தின் சக உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான தீர்மானங்கள் எடுக்க காணி உரித்துடைய ஆண் நபரிற்கு இதன்மூ லம் அதிகாரம் கிடைக்கின்றது. இதற்கு முன்பதாக காணி உரிமை உடையவர்இ றந்தால் மனைவிக்கு அக்காணியை அனுபவிக்க உரிமை கிடைத்ததுடன் தற்போது உறுதிப்ப த்திர உரிமம் உடைய காணி ஒன்றிற்கு அப்படியான ஒரு உரிமை மனைவிக்கு கிடைப்பதில்லை. இந்த அனைத்து காரணிக்குள்ளும் உறுதிப்பத்திர உரிமம் பெண்களுக்கு சுவிசே~மாக அசாதாரணங்களை இளைக்கும் வகையில் காணப்படுகிறது.
9. உருமய வேலைத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் பத்திரத்தின் மூலம் கிடைக்கும்கா ணியை விற்பனை செய்வதால் அம்மக்களுக்கு கிராமத்திற்கு காணப்படும் பிரதிகூலங்கள்எ ன்ன?
தற்போது காணப்படும் அளிப்புப்பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரம்; விவசாய வர்க்கத்தினருக்கு புறம்பாக வழங்க முடியாது. அதன் காரணமாக அந்த காணிகள் விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் காணப்பட்டது. ஆனால் உறுதிப் பத்திர உரிமம் உடைய காணி அப்படி இல்லை. பெரும்பாலும் தனவந்தர்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் இந்தக்கா ணிகளை அதிக அளவில் கொள்வனவு செய்து அவற்றை ஒன்றிணைத்து பாரிய ஒரு நிலப்பரப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும். அப்படியான காணிகள் நம் நாட்டின் பிரதான விவசாய குறிக்கோளான நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்கு புறம்பாக பயன்படுத்த முடியும். பெரும்பாலும் அந்த விடயங்கள் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வியாபார நோக்க விவசாய முறைக்கு பயன்படுத்த முடியும். நம் நாட்டில் நெல் மற்றும் ஏனைய உணவு பொருள்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுவது அதற்கு தேவையான நீர்ப்பாசன வசதிகள் காணப்படும் சுற்று வட்டத்திலே ஆகும். ஆனால் மேலே குறிப்பிட்டவாறு பாரிய அளவில் காணிகளை மாற்று வழியில் பயன்படுத்துவதால் கிராமத்தினுள் காணப்படும் உணவு பயிர் உற்பத்திக்காக பயன்படும் காணிகளில் இருந்து கூட சரியான பலனை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதும் கம்பனிகளின் மூலம் கையாளப்படும் பாரிய அளவிலாக வியாபார நோக்கான விவசாயத்தின் காணிகளை சுற்றி கட்டப்பட்டுள்ள மின்சார வேலைகள் காரணமாக அவற்றை ஒட்டி காணப்படும் சாதாரண விவசாயிகளின் காணிகளுக்கு காட்டு யானை தொல்லை அதிகரித்துள்ளது. நீரை பெற்றுக் கொள்வதில் சிரமம்கா ணப்படுகிறது. இவ்வனைத்து காரணிகளில் இருந்து தெரிய வருவது என்னவெனில் ஏனைய காணிகளையும் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படலும்இ றுதியில் அவையும் பாரிய அளவிலான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் அன்றி வேறு எந்த மாற்று வழியும் மிஞ்சி காணப்படாது.
10. உருமய ஊடாக கிடைக்கும் உரிமக்காணிகள் பிறர் வசப்படலால் எம் உணவு பாதுகாப்பு பாதிக்குமா?
அரசாங்கம் மூலம் அடிக்கடி கூறப்படும் ஒரு விடயம் என்னவென்றால் சிறிய அளவிலான காணிகளில் இடம்பெறுகின்ற சிறு விவசாயிகளின் உணவு பயிச்செய்கைகளை வினைத்திறனாக காணப்படுவதில்லை எனவும் அதற்குப் பதிலாக பாரிய அளவிலான காணிகளில் பாரிய வணிக பயிர் செய்கை மிகவும் வினைத்திறனாக காணப்படுகிறது என்பது அடிக்கடி கேட்கக்கூடிய காரணியாகும். உறுதிப் பத்திர காணிகள் விற்பனை செய்தல் மற்றும் ஈடுவைக்கப்பட்ட காணிகள்மூ ழ்குதல் ஊடாக வழி அமைவது பாரிய அளவிலான வணிகப் பயிர்செய்கை செய்யும்ந பர்களின் கைகளுக்கு இக்காணிகள் கைவசப்படுலே. ஆனால் இந்த வணிகப் பயிர் செய்கை மூலம் நாட்டின் மக்களுக்கு உணவின் தேவையானது நிறைவேற்றப்படுவதில்லை கோவிட் நோய்கா லத்திலும் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்நாட்டு மக்கள் பசியால் வாடாமல் இருந்தது இந்த சிறு அளவிலான உணவு பயிர்செய்கை காரணத்தினால் ஆகும். எங்களது உணவு பாதுகாப்பு அந்த இடத்திலேயே காணப்படுகின்றது. தற்போது இந்த பாதகமான நிலை இடம்பெற்று இருப்பது அந்த உணவு பாதுகாப்பிற்காகும்.
11. அரசாங்கம் கூறுகின்ற வகையில் உருமய நிகழ்ச்சியின் ஊடாக இலங்கை வரலாற்றில்வி சாலமான தனியார்மயப்படுத்தும் நிகழ்ச்சியை செயற்படுத்தி அரசாங்கம் இந்த முயற்சியை எடுப்பது மக்களின் காணி சம்பந்தமான உரிமையை சான்றுப்படுத்துவதற்காகவா?
காணி என்பது மக்களின் பொருளாதார பாதுகாப்பு மாத்திரமன்றி அடையாளத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். அது அப்படி இடம்பெற வேண்டுமெனில் காணியின் உரிமை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதோடு அந்த காணி மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் மூலமாக காணியின் உரிமைகள் இழக்கப்படும் நிலைமைக்கு உள்ளாகலாம். (விற்பனை செய்தல் மற்றும் ஈடு வைத்தல் ஊடாக) அப்போது இடம்பெறுவது ஏற்கனவே காணப்பட்ட காணி உரிமை இழக்கப்படலும் காணிகள் இழந்த பரம்பரை உருவாவதும் ஆகும். அது மிகவும் பயங்கரமான பெறுபேறுகளை பெற்றுத்தர கூடும். அப்படி இடம் பெறாமல் இருக்க வேண்டுமெனில் காணி உரிமையுடன் அப்படி கிடைக்கின்ற காணி பொருளாதார ரீதியாக வினைத்திறனாக ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய நிலைமையையும்உ ருவாக்க வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் செய்து கொண்டிருப்பது ‘உருமய’ ஊடாக மக்களுக்கு உறுதிப் பத்திர காணி உரிமையை வழங்கி அந்தக் காணி பொருளாதார ரீதியாக வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சகல வழிகளையும் தடைப்படுத்துவதாகும். விவசாயத்திற்கு உரிய நேரத்தில் நீரை வழங்குவதில்லை அது மாத்திரமின்றி நீர் சம்பந்தமான புதிய சட்டத்திட்டங்களை கொண்டு வந்து நீருக்கு பணம் அறவிடவும் தயாராக உள்ளனர். விதைகள் உரம் களைநாசினிகளின் விலை தாங்கிக் கொள்ள முடியாத அளவு காணப்படுகின்றது. விவசாய இயந்திர உபகரணங்களுக்காக இடப்பட்டிருக்கின்ற அதிக வரியின்கா ரணமாக அவற்றுக்காக பாரிய அளவிலான கொடுப்பனவுகளை விவசாயி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. அறுவடைகளுக்கு நல்ல விலையோ அல்லது அவற்றை கொள்வனவு செய்து கொள்ள எந்த ஒரு முறையோ இல்லை விவசாயிகளுக்கு பயிர்செய்கைக்காக கடன்ஒ ன்றை பெற்றுக் கொள்வது தற்போது மிகவும் கடினமான காரியம் என்பதோடு பாரிய அளவிலான வியாபாரிகளுக்கு இலகுவாக கடன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். காலநிலை காரணமாக அல்லது மிருகங்கள் காரணமாக ஏற்படுகின்ற பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது பயிர் காப்புறுதி முறைமை இங்கு இல்லை. தற்போது விவசாயி கடன்சு மையினால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றான் இந்த நிலைமையில் கிடைக்கின்ற உறுதிப்ப த்திர காணிக்கு என்ன நடக்கும்? இந்த முயற்சி மக்களின் காணி உரிமையை சான்றுப்படுத்துவது அல்ல. அதன் பெயரில் மக்களுக்கு காணப்படும் சொற்ப காணி உரிமையை கூட சூறையாடிக் கொள்ளும் முயற்சி மாத்திரமே.
12. உருமய போன்ற வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திற்கு ஏன் தேவை?
அரசாங்கம் மூலம் காணி சம்பந்தமாக மாத்திரமல்ல காணி, விவசாயம், கடல்தொழில், சிறு கைத்தொழில் போன்ற சகல பிரிவு சம்பந்தமாகவும் பாரிய அளவிலான தலையீடு காணப்படுகின்றது. அவை அனைத்திற்கும் கீழாக ஓடிக்கொண்டிருக்கும் பொது காரணிகள்கா ணப்படுகின்றது. அவையாவன இக் காரணிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சிறு விவசாயிகள், சிறு மீனவர்கள், சிறு கைத்தொழிலாளர்கள் போன்றோரை அதைரியப்படுத்தி பாரிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு இப் பிரிவுகளை ஆரம்பித்துக் கொடுத்தலாகும். இப்போது இந்த பிரிவுகளில் காணப்படும் நபர்கள் அந்த பாறை அளவிலான முதலீடுகளில் கூலி ஆட்களாக மாற்றப்பட்டு காணப்படுகின்றனர். இது இன்று நேற்று மாத்திரமல்ல நீண்ட காலமாக உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் உட்பட நிதி வழங்கும் அமைப்புகள் மூலமாக இந்நாட்டு அரசுக்கு கூறப்பட்டு வரும் ஒரு காரணி ஆகும். விவசாய துறைக்காக இப்படியான பிரவேசம்ஒ ன்று வேண்டுமென உலக வங்கி கூறிக் கொண்டிருப்பது 1950 ஆண்டு முதல் ஆகும். அவர்களுக்கு அமைவாக எம் நாட்டில் இடம்பெறும் சிறிய அளவிலான விவசாயிகளின் உணவு பயிர்செய்கை வினைத்திறனாக காணப்படவில்லை. அதற்கு பதிலாக பாரியளவிலான விசாலமான முதலீடுகளின் கீழ் பாரிய விலை நிலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். தற்போது விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கும் சிறிய விவசாயிகள் பிரிவில் சிலர் இந்த பாரிய அளவிலான விளை நிலங்களில் கூலி ஆட்களாக வேலை செய்ய முடியும். எஞ்சி இருக்கும்வி வசாய குடும்பங்கள் ஊதியத்துக்காக கூலி ஆட்களாக நகரங்களுக்கு புலம்பேற வேண்டும். விவசாயத்துறை மற்றும் காணி உரிமைத்துவம் சம்பந்தமாக அரசாங்கத்தின் சகல தலையீடுகளும் இடம்பெறுவது இந்த நோக்கத்திற்காகவே ஆகும். உருமய வேலைத்திட்டத்தின்நோ க்கமும் அதுவே. காணி உரிமைகளை வழங்கும் நோக்கில் விற்பனை செய்யக்கூடிய காணிகளை விவசாயிகளுக்கு வழங்கி விவசாயத்தை செய்ய முடியாத நிலைக்கு உரு மாற்றப்படுகின்றார்கள். தற்போது விவசாயிகளுக்கு எஞ்சி இருக்கும் ஒரே மாற்று வழி காணியை விற்பனை செய்தல். அப்போது பாரியளவிலான பயிர் செய்கையாளர்களுக்கு திறந்த சந்தையிலே அந்த காணிகளை விலைக்கு வாங்க கூடியதுடன் நிலங்கள் இழந்த விவசாய மக்களுக்கு அக்கணியில் கூலி வேலை செய்தலும் வேலை தேடி நகரங்களுக்கு புலம்பெயரும்நி லையும் ஏற்படும் உருமய வேலைத்திட்டம் இந்நாட்டு மக்களுக்கு கருமமாவது இதன்கா ரணத்தில் ஆகும்.
13. உருமய வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு என்ன மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும்?
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் தீர்க்கமான வகிபாகம் வகிப்பவர்கள் சிறு உற்பத்தி விவசாயிகள் மூலமாகும். சிறு விவசாயி நாட்டு விவசாய பொருளாதாரத்தின் அடிப்படை என்பதோடு இந்நாட்டு காணி சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும்ஏ தாவது ஒரு முறையில் மேற்கூறியது போன்று அந்த விவசாயிகளின் விவசாயத்தினை அதைரியப்படுத்தி பலன் உள்ள வகையில் அதில் ஈடுபாடு செலுத்துவதற்கு முடியாத ஒரு தன்மையை உருவாக்கியுள்ளதோடு இப்படி காணி உறுதி பத்திர உரிமையை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்து அந்த நிலம் சுதந்திர வர்த்தக சந்தையில் சுதந்திரமாக விடப்படும். அப்படி நடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த காணிகளை பெற்று கொண்டிருப்பவர்கள் பாரிய அளவில் விவசாயம் செய்பவர்கள். மேலும் விவசாய கம்பனிகளும் ஆகும். அரசும் இதற்கு ஆலோசனை பெற்றுக் கொடுக்கும் உலக வங்கியும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது பொருளாதார ரீதியாக பலன் தரக்கூடிய விவசாயமானது பாரிய அளவில் பயிர்களை பயிரிடுவதன் மூலம் என்பதாகும். ஆயினும் கடந்த நான்கு சகாப்தங்களுக்கு அதிகமான காலகட்டத்திற்கு மேலாக இந்நாட்டில் முயற்சி செய்து பார்த்ததும் மேலும் தற்போது செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் எந்த விதமான வேலைத்திட்டங்களும் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு பயன் கொடுக்கவில்லை. உண்மையிலேயே அதன்மூ லம் நடந்தது என்னவென்றால் பாரிய பொருளாதார மற்றும் சமூக சீர்கேடாகும். இந்நாட்டு அரசு மூலம் உதவிகள் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கரும்பு பயிர்ச்செய்கை (பெல்வத்த, ஹிகுரான, கந்தளாய்) புகையிலை, சோளம், கர்கின், வாழை, மா ஆகியன பயிரிடப்பட்டதுடன்அ வை மூலம் இலாபம் ஈட்ட முடியாது போனதுடன் மட்டுமல்லாது அவைகளால் சூழலுக்கும்ம க்களின் சுகாதாரத்திற்கும் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. தன்னுடைய சுய பயிர்ச் செய்கையை கைவிட்டு அப்படியான பாரிய பயிர்ச் செய்கைகளின் தினக்கூலிகளாக மாறிய விவசாயிகளின் பொருளாதாரம் மேலும் சரிவடைந்ததோடு அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சுழற்சியில் சலுகைகள் வழங்கப்படுவது நாட்டு மக்களுக்கு எவ்விதமான பிரதிபலனும் இல்லாத நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும்சு காதாரத்தினை ஆபத்திற்கு இட்டுச் செல்லும் அடுத்த சந்ததியினருக்கு பாரிய சூழல்நெ ருக்கடியை தோற்றுவிக்கும் என்பது மட்டுமல்லாது நாட்டு பொருளாதாரத்திற்கு சேதத்தினை ஏற்படுத்தும்க ம்பெனிகளுக்கு ஆகும்.
14. இப்படியான வேலைத்திட்டங்கள் பற்றிய உலகத்தில் வேறு நாடுகளில் அனுபவங்கள் என்ன?
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சார்பில் உலக உணவு உற்பத்தியில்மி கவும் முக்கியமான வகிபாகம் வகிப்பது சிறு விவசாயிகள் ஆகும். ஆசிய மற்றும் உப சமுத்திர ஆபிரிக்க நாடுகளின் இந்த அளவு ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் 80மூ வீதம்ஆ கும். மறுபக்கம் சிறு விவசாயிகளின் உற்பத்தியின் பல்லினத்துவம் அதிகம் என்பதால்கா லநிலை மாற்ற சேதம் மற்றும் நோய் தொற்றுகள் மூலம் பயிர் சேதம் ஏற்படும் போதும்மு ழுமையான அறுவடை சேதமடைந்து பாரிய அளவிலான சேதம் உருவாகும் நிலைமை ஏற்படாது. ஆயினும் தற்போது உலக வங்கி உட்பட நிதி உதவி செய்யும் நிறுவனங்கள் மூலம்மீ ள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற அத்தோடு இந்நாட்டு அரசும் வரவேற்கின்ற உணவு உற்பத்தி முழுமையாக தங்கி நிற்பது பல்தேசிய கம்பெனிகளின் பேட்ரெட் உரிமைக்கு உட்பட்ட விதைகள் மற்றும் ஏனைய உள்ளீடுகள் மீதான செயற்பாடு கொண்ட உணவு தொகை 12- க்கான பயிர்செய்கை மற்றும் விலங்கினம் ஐந்து மீதான பாரிய அளவிலான விவசாயக்கொ ள்கையாகும். ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய அமைப்பின் பிரகாரம் இது உணவு பரிமாரிப்பின் மீதான பாரிய அனர்த்த நிலையாகும். இந்த அனர்த்தம் எவ்வளவு பாரதூரமானது எனில் இதன்மூலம் கம்பெனிகள் ஈட்டும் இலாபம் அடிப்படையில் ஏதாவது ஒரு தொற்று ஏற்படும்போ து ஒட்டுமொத்த மனித சித்தாந்தமும் சேதப்பட்டு ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்படும்அ பாயம் உண்டு. மற்றுமொரு பகுதியில் இந்த உணவு பண்ட உற்பத்தியில் எவையும்போ ~hக்கு ரீதியாக அதிக குணாதிசயங்கள் கொண்டவை அல்ல என்பதுடன் சுகாதார அழுத்தங்களை கொண்டு வரும். சிறு காணிகளின் விளைத்திறன் சம்பந்தமாக கொண்டு வரப்படும் முறைப்பாட்டிற்கான அடிப்படை உண்டென்பது போலியான தர்க்க கொள்கையாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் 57களில் ஹெட்டையார் மில்லியன் 37 க்கு அதிகமாக செயற்படுத்தப்படும் சிறு அளவிலான பயிர்ச் செய்கையினை பயன்படுத்தி ஐக்கிய நாடுகளின்உ ணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் செயற்படுத்தப்பட்டு அவதானிப்பின் போது வெளியான தகவலானது முறையான முகாமைத்துவம் மற்றும் விவசாய நெறிமுறைகள் மூலம்சி று உற்பத்தி விவசாயிகளின் விவசாய அறுவடை 79 வீதத்தால் அதிகரிக்க முடியும்எ ன்பதாகும். பாரிய அளவிலான தொழில்நுட்ப விவசாயத்திற்கு இதன் அருகில் கூட செல்ல முடியாது இதன்படி இந்த உருமய போன்ற போலி வேலைத்திட்டங்கள் மூலம் மக்களின்கா ணிகளை உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இந்நாட்டு சிறு அளவிலான விவசாயத்தினை சேதப்படுத்தி சலுகைகள் பெற்றுக் கொடுக்கும் பாரிய அளவிலான பயிர்ச்செ ய்கை உலகில் வெற்றி அழிக்காது. ஆயினும் 40 வருட காலமாக கூறிய பொய்யினை புதிய கருத்தாக கூறுவது போன்று கூறி எங்களை கொண்டு செல்வது எம்மையும் எமது எதிர்கால பரம்பரையின் அழிவை நோக்கியாகும். எனவே நாம் இந்த பயணத்திற்கு இடம் கொடுக்கலாமா? காணி உரிமை கொடுக்கின்றேன் எனக்கூறி செயற்படுத்தப்படும் இச்சூழ ;ச்;சிக்கு அகப்பட வேண்டுமா?