சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு சட்டம் யாருடையவை, யாருக்கானவை?
Published
சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு சட்டம் யாருடையவை, யாருக்கானவை?
சுற்றாடல் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை மீறி மக்கள் செயற்படுவதால் அதன் பாதுகாப்பு நோக்கங்கள் சீர்குலைவது தொடர்பில் நாம் புதிதாக கற்றுக்கொள்ளும் பாடம் அல்ல. இவ்வாறான செயற்பாடுகளில் மனிதர்களுக்கு உட்பட எமது சுற்றாடல் கட்டமைப்பில் வாழும் அனைத்து இலை குலைகள் மற்றும் உயிரினங்கள் அனைத்திற்கும் பாரியளவில் அழிவு நிறைந்த விளைவுகளை கொண்டு வந்த சந்தர்ப்பங்கள் பலவற்றை நாம் அனுபவ ரீதியிலாக உணர்ந்துள்ளோம். எனினும் துரதிஷ்டவசமாக சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் தூர நோக்கமற்ற அதிகாரிகளால் எமக்கு மீண்டும் மீண்டும் அதுபோன்ற சம்பவங்களை உருவாக்கிக்கொடுப்பது உண்மையில் அவர்களின் கண்ணோட்டத்தில் மனிதன் உட்பட காட்டு விலங்குகள் தொடர்பிலும் எவ்வித உணர்வும் இல்லையென்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது. இது தொடர்பிலான கவலைக்குரிய ஒரு எடுத்துக்காட்டு பொலன்னறுவை ரொட்டவெவ கிராமம் மற்றும் அதனை அண்மித்த சுற்றாடல் கட்டமைப்பிற்கு ஏற்ப்பட்டுள்ளது. இது அது தொடர்பிலான ஒரு வெளிப்பாடாகும்.
ரொடெவெவ கிராமம்
பொலன்னறுவை மாட்டத்தின் தற்போதுள்ள ஹிங்குரக்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கிராம சேவகர் பிரிவுக்கு புராதன ரொட்டவெ கிராமம் உட்பட்டுள்ளது. வரலாற்று ரீதியிலான தகவல்கள் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்புக்கமைய புராதன ரஜரட்ட நாகரீகம் வீழ்த்தப்பட்டதன் பின்னர் குறித்த பிரதேசத்தில் ஆங்காங்கே எஞ்சியிருந்த சிறிய கிராமமாக ரொட்டவெ கிராமம் இருந்ததாக கருதப்படலாம். 1900ம் ஆண்டுகளில் முழு தமன்கடுவ (தற்போதைய பொலன்னறுவை) பகுதியின் சனத்தொகை ஐயாயிரத்தை கடக்கும் போது ரொட்டவெவ குறிப்பிடத்தக்க குடும்பங்களைக் கொண்ட கிராமமாக காணப்பட்டது. ஆரம்ப காலத்திலிருந்து வாழ்ந்த குடும்பங்கள் 1818 கிளர்ச்சியின் பின்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களில் ஏற்ப்பட்ட கலப்புகள் தமது சமூகத்தில் தாக்கம் செலுத்தியிருக்கலாமென அங்குள்ள மக்களின் எண்ணுகின்றனர். 1900களின் முதல் தசாப்தத்தில் இந்த கிராமத்திற்கு வருகை தந்த செலிக்மான் எனப்படும் மனித வரலாற்று விஞ்ஞானிக்கமைய இந்த கிராமத்தில் ஆதிவாசிகளாக அடையாளம் காணக்கூடிய சில குடும்பங்கள் உட்பட பல குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. எவ்வாறெனினும் இவர்கள் அனைவரும் ரொட்டவெவ வரலாற்றின் பொலான்னறுவை மாவட்டத்தில் பல கிராமங்கள் 1930 களில் ஆரம்பமான கமநல சமூகத்தில் ஊடாக தோற்றம் பெற்றவர்கள் அல்ல எனவும் இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும் இதனூடாக புலப்படுகிறது.
மக்கள் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட திருப்பங்கள்
வரலாற்று காலத்திலிருந்து ரொட்டவெவ மக்கள் தமது ஜீவனோபாயத்திற்காக விவசாயம், வேட்டை மற்றும் தேன் உடைத்தல் உள்ளிட்ட வனப்பகுதிகளுடன் இணைந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். கமநல சமூக வேலைத்திட்டங்களின் அபிவிருத்தியுடன் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உயர்த்தப்பட்டதால் ரொட்டவெவ மக்கள் விவசாயம் செய்த வயல்நிலங்களில் குறிப்பிட்டத்தக்களவு நிலம் வாவிக்குரிய நிலமாக மாறியது. அத்துடன் அன்றிலிருந்து குறித்த நிலங்களில் வாவியின் நீர்மட்டம் குறையும் காலத்தில் வருடத்தில் ஒரு போகத்தில் மாத்திரமே நெற் செய்கைகளை மேற்கொள்ள முடிந்தது. எனினும் மேலும் பல தசாப்தங்களாக வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வேட்டை உள்ளிட்ட செயற்பாடுகளையும் சேனை பயிர்ச்செய்கைகளையும் தடையின்றி ரொட்டவெவ கிராம மக்கள் முன்னெடுத்துச் சென்றனர். கிராமத்தின் இரு பகுதிகளிலும் காணப்பட்ட வனப்பகுதி தேசிய வனப்பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இந்த நிலை மாற்றமடைந்தது. 1992ம் ஆண்டில் மின்னேரிய தேசிய வனப்பூங்காவும், 2002ம் ஆண்டில் கவுடுல்ல தேசிய வனப்பூங்காவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனூடாக ரொட்டவெவ கிராமமானது தேசிய ரீதியில் முக்கியமான இடமாக அரசாங்கத்தினால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றாடல் கட்டமைப்பின் மத்தியில் அமையப்பெற்றுள்ள கிராமமாக மாறியது. இதுவரை மின்னேரிய மற்றும் கவுடுல்லவிற்கிடையில் யானை நுழைவாயிலும் கிராமத்தை அண்மித்ததாக உள்ளது. இன்றைய காலத்தில் 5.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ரொட்டவெவ கிராம சேவகர் பிரிவில் குறிப்பிடத்தக்களவு நிலப்பகுதி (பிரதானமாக மின்னேரிய தேசிய வனப்பூங்கா) தேசிய வனப்பூங்காவிற்கு உரியதாகும். இதற்கமைய வேட்டையாடுதல், தேன் உடைத்தல் உள்ளிட்ட வனப்பகுதிகளுடன் இணைந்ததாக ரொட்டவெவ கிராம மக்கள் நீண்டகாலமாக முன்னெடுத்துவந்த ஜீவனோபாய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவானது. இந்த பின்புலத்தில் கிராமத்திற்குள் வயல்நிலத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டதுடன், கிராமத்தில் நீர்வளத்திற்கான பற்றாக்குறை ஏற்ப்பட்டதன் காரணமாக மக்களுக்கு கிராமத்தில் எஞ்சியிருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் சேனை பயிர்ச்செய்கைக்கு எடுப்பதற்கு நேரிட்டது. அவ்வாறாயின் கிராமத்தில நீர்வளத்திற்கென காணப்பட்ட சிறிய வாவிகளின் நீர் (ரொட்டவெவ மாதலா வாவி மற்றும் கந்துருகஸ்வெவ வாவி) நெய்செய்கைக்கு போதுமானதாக இருக்கவில்லை. கிராமத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் சட்டவிரோதமாக தேசிய வனப்பூங்காக்களில் வேட்டை உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதால் அவர்கள் சட்டத்தினால் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு உள்ளாகினர். அத்துடன் தமது சமூகத்திற்குள் உருவான ஊக்கப்படுத்தல்கள் காரணமாக நாளுக்கு நாள் அவர்கள் சேனை பயிர்ச்செய்கை மற்றும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான நெற்செய்கையில் ஈடுபட்டதால் விவசாயத்தை தமது பிரதான ஜீவனோபாயமாக கொள்வதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகின.
சமகால நெருக்கடி
இவ்வாறான சூழலில் அவர்களின் விவசாய நிலங்களுக்கென அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் அவர்களின் வயல் காணிகளுக்கு உரிய முறையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் செய்கைக்கு தேவையான நீர்ப்பாசன நீர்வழங்களை பெற்றுக்கொடுத்தல் வேண்டும். மறுபக்கத்தில் கிராமத்தையடுத்து கவுடுல்ல மற்றும் மின்னேரிய தேசிய வனப்பூங்காவை அண்மித்ததாக உருவாகியுள்ள சுற்றுலா தொழிற்துறையின் நன்மைகளை கிராம மக்களும் பெறும் வகையிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை குறைப்பதன் ஊடாக சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகளை பாதுகாப்பதால் தமக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை கிராம மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.
எனினும் தற்போது இடம்பெறுவது இவற்றிற்கு பரஸ்பரமான விடயங்களாகும். தேசிய வனப்பூங்காவை எல்லையாக கொண்டு கிராமம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிக்கு உள்ளே இருக்கும் மக்களால் செய்கைக்கென பயன்படுத்தப்பட்டிருந்த 2 நிலப்பகுதிகளை (முறையாக 40 ஹெக்டேயர் மற்றும் 26 ஹெக்டேயர்களான உத்தேச ரொட்டவெவ வனப்பாதுகாப்பு நிலம் மற்றும் கந்துருகஸ்வெவ வனப்பாதுகாப்பு நிலம்) தற்போது வனப்பாதுகாப்பு பகுதிகளாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய குறித்த நிலப்பகுதிகளில் எதிர்காலத்தில் எந்த வகையிலும் விவசாய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கிராம மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அத்துடன் கிராம மக்களால் சேனை பயிர்ச்செய்கைக்கென பயன்படுத்தப்பட்ட மேலும் 35 ஏக்கர் அளவிலான நிலம் அங்குள்ள விவசாயிகள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் தேக்கு செய்கை வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. எனினும் குறித்த காலவரையறையின் நிறைவில் தேக்கு மரங்களை நீக்கியதன் பின்னர் அந்த இடங்களை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக பண்ணையொன்றை நடத்திச் செல்வதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த செயற்பாடுகளின் விளைவாக, விவசாயத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தமது விவசாய செயற்பாடுகளை மேற்கொள்ள கிராமத்திற்குள் காணப்பட்ட இடங்களை இழக்கும் நிலை உருவானது. மறுபுறத்தில் குறிப்பிட்ட காலத்துடன் கிராமத்தின் சனத்தொகை படிப்படியாக அதிகரித்ததுடன், (தற்போது கிராமத்தின் சனத்தொகை சுமார் இரண்டாயிரமாகும்.) அவ்வாறு அதிகரிக்கும் சனத்தொகைக்கு தேவையான இடத்தை கிராமத்திற்குள் பெற்றுக்கொடுக்கக்கூடிய சூழல் இல்லாமல் போனது. இரண்டு தேசிய வனப்பூங்காக்களின் மத்தியில் இருப்பதால் கிராமத்தை விரிவுபடுத்துவதும் சாத்தியமற்றது. அத்துடன் கிராமத்திற்குள் காணப்படும் இடங்களை வனப்பாதுகாப்பு பகுதிகளாக மாற்றியமைத்தல் மற்றும் வெளி நபர்களுக்கு அவற்றை வழங்குவதால் புதிதாக இணைவதற்கும் அல்லது உருவாகுவதற்கும் இடம் இருக்கவில்லை.
கிராமத்தின் நிலப்பகுதி நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட கிராம மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
“1990 களில் எனது தந்தைக்கு அரசினால் இரண்டரை ஏக்கர் காணி உரிமத்துடனான இடம் கிடைத்தது. அவருக்கு ஐந்து பிள்ளைகள். தற்போது நானும் எனது சகோதர சகோதரிகளும் அரை ஏக்கர் வீதம் பிரித்துக்கொண்டு அமைதியான முறையில் அதனை அனுபவிக்கின்றோம். எனினும் பிரிக்கப்பட்ட காணிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால் நாம் அனுபவிக்கும் காணி துண்டுகளுக்கென பிரத்தியேக காணி உரிமங்களை செய்துகொள்ள முடியாதுள்ளது. சகோதரர்களான நாம் சமாதானமாக இருந்தாலும் எமது அடுத்த பரம்பரை இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள்? அத்துடன் எனக்கான அரை ஏக்கர் காணியில் பிரிக்க என்ன உள்ளது. அரை ஏக்கர் காணியில் சரியான இலாபத்தையும் பெற முடியாது. வீட்டுத் தேவைக்கான உணவு உற்பத்தியை மாத்திரம் மேற்கொள்வோம். இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு வாழ்வது? இதுவே இந்த கிராமத்தின் அனைத்து மக்களினதும் கதையாகும்”.
இந்த விடயங்கள் இவ்வாறு இருக்கையில் கருவலகஸ்வெ வனப்பாதுகாப்பு பகுதியாக பெயரிடுவதற்கு உத்தேசித்துள்ள காணியின் ஒரு பகுதியில் ஹிங்குரக்கொட பிரதேச சபையினால் கழிவு கிடங்கொன்று நடத்திச் செல்லப்படுகிறது. நாட்டின் அனைத்து சுற்றாடல் சட்டங்களையும் மீறும் வகையிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இந்த நாட்டின் சட்டத்திற்கமைய தேசிய வனப்பூங்காவின் எல்லையிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் இவ்வாறு கழிவு கிடங்கை நடத்திச் செல்ல முடியாது. எனினும் இந்த கழிவகற்றல் இடம் மற்றும் வனப்பூங்கா எல்லைக்கிடையில் 200 மீற்றரை விடவும் குறைந்த தூரமே உள்ளது. மறுபுறத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு குடிநீரை விநியோகிக்கும் நீர் நிலையமான கவுடுல்ல வாவிக்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாய் ஒன்றும் இதனை மிக அண்மித்ததாக உள்ளது. மழைக்காலத்தில் கழிவு கிடங்கு உள்ள இடம் நீரில் மூழ்குவதால் குறித்த நீரானது நேரடியாக கால்வாய் ஊடாக கவுடுல்ல வாவியில் சேருகிறது. குறித்த கழிவு கிடங்களிலுள்ள குப்பைகளில் சேதன கழிவுகளும் உக்காத பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமன்றி மருத்துவ கழிவுகளும் காணப்படுகின்றன. எந்தவொரு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி பத்திரமும் இன்றி இந்த கழிவு கிடங்கு செயற்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்த கழிவு கிடங்கிலுள்ளவற்றை உட்கொள்வதறகாக வனப்பூங்கா மற்றும் கிராமத்திற்கிடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் வேலிகளை உடைத்து நாளாந்தம் காட்டு யானைகள் மின்னேரிய வனப்பூங்காவிலிருந்து வருகை தருகின்றன. இதனால் பாரிய யானை – மனித முரண்பாடு உருவாகியுள்ளது. மேலும் இந்த கழிவுகளை உணவாக உட்கொள்ளும் யானைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அவதானமும் அதிகமாகவே உள்ளது.
இங்கிருந்து எந்த நிலைக்கு?
ஒரு பக்கத்தில் கடுமையான சுற்றாடல் பாதுகாப்பு அணுகுமுறைகளை பின்பற்றி தேசிய வனப்பூங்காக்கள் இரண்டிற்கும் நடுவில் தொடர்ந்தும் விரிவுபடுத்த முடியாத நிலையிலிருக்கும் கிராமத்திற்;குள் காணப்படும் இடங்களையும் வனப்பாதுகாப்பு பகுதிகளாக மாற்றி கிராமத்தின் மக்களை பாரிய அழுத்தங்களுக்கு உட்படுத்தும் அரச நிறுவனங்கள் சட்டவிரோதமாக சுற்றாடல் ரீதியாக மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தமக்கு சொந்தமான பூமியில் இடம்பெறுவதற்கு இடமளித்து வேடிக்கை பார்க்கின்றன. ரொட்டவெ மக்கள் இந்த வனப்பாதுகாப்பு பணிகள் யாருக்காக என கேள்வி கேட்கின்றனர். மக்கள் தங்கள் காணிகளை இழந்துள்ளனர். எனினும் வன விலங்குகளுக்கும் தமது வாழ்வியலுக்கு பொருத்தமான ஒரு நிலம் இங்கு இல்லை. இன்று வரை தமது முதற்கட்ட ஜீவனோபாயமாக இருக்கும் விவசாயத்திற்கு தேவையான நிலம் இல்லாத ரொட்டவெவ மக்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டியுள்ளது?
“நாம் காடுகளுடன் வாழ்ந்த மனிதர்கள். எனினும் வனப்பூங்கா வந்ததன் பின்னர் நாம் அந்த சட்டத்திற்கு மதிப்பளித்து சிறிது சிறிதாக மாற்றமடைந்த ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம். இப்பொழுது அந்த வாழ்க்கை வட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழியில்லை. மனிதர்கள் தங்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்படும் போது எந்த செயலையும் செய்ய முன்வருகின்றனர். சிறைக்கு செல்வதைக் கூட கவனத்திற்கொள்ளாது, அதிகம் அதிகமாக மக்கள் வேட்டையாடுவதில் ஈடுபட்டால் என்ன நேரிடும்? இன்றும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்ந்தும் உயிரினங்கள் பாரியளவில் அழிவடையும். எனினும் வாழ்வதற்கு வழியில்லாத மக்கள் என்ன செய்வார்கள். அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாகவே நாம் மீண்டும் காட்டிற்கே தள்ளப்படுகின்றோம்”.
எழுந்துள்ள நெருக்கடி தொடர்பில் விவசாய தலைவர் ஒருவர் மேற்கூறப்பட்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
“சுற்றாடல் பாதுகாப்பு சட்டம் எமக்கு மாத்திரமா” என ரொட்டவெவ மக்கள் கேட்கின்றனர். மக்களை கவனத்திற்கொள்ளாத சுற்றாடல் பாதுகாப்பினால் இடம்பெறுவது நன்மைகளை விடவும் தீமைகளே என ரொட்டவெவ சம்பவங்கள் மீண்டும் மீண்டும் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய முட்டாள்தனமான செயற்பாடுகளால் காலில் மிதிப்படும் தூசு அளவு கூட முக்கியமற்றதாக தமது வாழ்க்கை மற்றும் எதிர்கால பரம்பரைகளின் வாழ்க்கையிலும் துன்பத்தை அனுபவிக்கப் போவது மக்களும் காட்டு விலங்குகளும் மாத்திரமே. இது தொடர்பில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் உணர்வின்மையை வெளிப்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இராணுவத்தினரால் பண்ணையொன்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து கடந்த வாரம் அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், சுமார் 35 ஏக்கர் அளவிலான குறித்த இடத்தை வெளி முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னரும் இதுபோன்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.