
கேப்பாபிலவு கிராம மக்கள் காணிகளை மீளக்கோரி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பான அறிக்கை
Published
2019 ஜனவரி 30
கேப்பாபிலவு கிராம மக்கள் காணிகளை மீளக்கோரி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பான அறிக்கை
தமது காணிகளை வழங்கக் கோரி கடந்த வாரஇறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களைப் பொலிஸார் நடத்திய விதம் தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியான நாம் கவலையடைகிறோம். 2019 ஜனவரி 26ஆம் திகதி காலை தைரியம் நிறைந்த, உறுதியான கோப்பாபிலவைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமைநோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்கள் இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில்களை நோக்கி நடந்துசெல்லும்போது பெரும் எண்ணிக்கையான (ஏறத்தாழ 45) பொலிஸார் இராணுவ முகாமுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததுடன், ஆகக் குறைந்தது ஐந்து வாகனங்களும் (பஸ், லொறி, ஜீப் மற்றும் கார்) அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. பேரணியாக வந்தவர்களைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்களுக்கு முன்னால் பேரணியாக வந்த மக்களும் அவர்களுடன் இணைந்த இடம்பெயர்ந்த மக்களும் ஒன்றுகூடினர். தமது காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் உறுதியான, எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்படும்வரை இராணுவ முகாமுக்கு முன்னால் இருப்பதையே பேரணியாக வந்தவர்கள் நோக்காகக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததுடன், பேராட்டக்காரர்களை மாத்திரமன்றி பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களையும் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் முகாமுக்குள் இருந்தவாறு புகைப்படங்களையும், வீடியோக்களை எடுத்தவாறும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சமூகத்துக்கு ஆதரவாகவும், அவர்களின் போராட்டத்தை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினரான நாம் சென்றிருந்ததுடன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் இராணுவத்தினர் அவ்வாறே நடந்துகொண்டனர்.
ஜனவரி 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு, திருமதி.கே.சந்திரலீலா மற்றும் திருமதி இந்திராணி விவேகானந்தன் ஆகிய இருவரையும் மறுநாள் (25) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் ஆணையை கையளித்தனர். 25ஆம் திகதியும் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் அதற்கு எதிராக முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். எனினும், போராடுவதற்கான மக்கள் உரிமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், பொலிஸார் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. அத்துடன், குறித்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்கள் வீதியை மறிந்து போராட்டத்தில் ஈடுபடவோ, இராணுவ முகாம் மீது கற்களை வீசுவதற்கோ அல்லது பொதுச் செயற்பாடுகளுக்கோ இடையூறு விளைவிக்கக் கூடாது என மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
26ஆம் திகதி காலையில் அங்கிருந்த பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தப் போவதாகக் கூறினர். ஆரம்பத்திலிருந்து பொலிஸார் போராட்டக் காரர்கள் தொடர்பில் கவலைப்பட்டதாகவோ, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காணப்படும் உரிமை தொடர்பில் நீதிமன்றம் குறிப்பிட்டதையோ கவனத்தில் எடுத்ததாகவோ தெரியவில்லை. இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகளின் சட்டரீதியான தன்மை தொடர்பில் கேள்விகேட்காது, சட்டரீதியான காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதில் ஏன் பொலிஸார் குறியாக இருந்தனர் என்ற கேள்வி எழுகிறது. வீதியின் இரு மருங்கு மற்றும் நிழ்ல் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, போராட்ட காரர்கள் பொலிஸ் வாகனங்களின் நிகழ்களில் ஒளிந்திருக்காது உச்சிவெய்யிலில் இருக்கும்படியாக செயற்பட்டனர். போராட்ட காரர்கள் நிகழ்களில் தமக்கான உணவைச் சமைக்கும் முயற்சிகளை பொலிஸார் கட்டுப்படுத்த முயற்சித்தமை குறித்து நாம் கவனம் செலுத்துகின்றோம். பொதுமக்களின் தேவைக்காக இராணுவ முகாமுக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த